Vakri Shani Gochar 2022: சனீஸ்வரரின் வக்ர சஞ்சாரத்தில் பணமழையில் நனையும் ராசிகள்

Shani Gochar July 2022: சனீஸ்வரரின் வக்ர சஞ்சாரத்தில் பணமழையில் நனையும் ராசிக்காரரகள், நல்ல முதலீடுகளையும் செய்வார்கள்....

Written by - Malathi Tamilselvan | Last Updated : Jun 18, 2022, 09:51 AM IST
  • சனியின் வக்ர பெயர்சியின் விளைவுகள்
  • 4 ராசிக்காரர்களுக்கு முதலீடு செய்ய உகந்த நேரம்
  • மாணவர்களுக்கு சூப்பர் காலம்
Vakri Shani Gochar 2022: சனீஸ்வரரின் வக்ர சஞ்சாரத்தில் பணமழையில் நனையும் ராசிகள் title=

சனியின் பிற்போக்கு நகர்வால் சில ராசிக்காரர்களுக்கு பண வரவு அதிகரிக்கலாம். ஏற்கனவே செல்வந்தவர்களாக இருப்பவர்களுக்கு பல மடங்கு பண வரத்து இருக்கும்.

தற்போது, கும்ப ராசியில் இருந்து வக்ர கதியில் பின்னோக்கி சென்றிருக்கும் சனீஸ்வரர், அக்டோபர் 23 ஆம் தேதி வரை மகர ராசியில் தங்கப் போகிறார். சனியின் இந்த வக்ர நகர்வின் பலன் 12 ராசிகளிலும் இருக்கும். ஆனால் இந்த காலகட்டத்தில் சனீஸ்வரரின் அருளால் சில ராசிக்காரர்கள் செல்வந்தர்களாக மாறலாம்.

கிரகங்களில் பிற்போக்கு நகர்வு அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையையும் பாதிக்கிறது. சனி கிரகம் மெதுவாக நகர்கிறது. ஜூன் 5 ஆம் தேதி, சனி கும்பத்தில் இருந்து பின்னோக்கி நகர்ந்து, அக்டோபர் 23 ஆம் தேதி வரை இந்த நிலையில் இருக்கும்.

சனியின் மகாதசை, ஏழரை சனி எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியமானது சனியின் பார்வை மற்றும் இயக்கம் என்பது குறிப்பிடத்தக்கது. அதன் தாக்கம் மனிதனின் வாழ்விலும் தென்படும்.

மேலும் படிக்க | 2 நாட்களில் 2 முக்கிய கிரகங்கள் பெயர்ச்சி, 4 ராசிகளுக்கு அதிர்ஷ்ட மழை

சனியின் வக்ர சஞ்சாரம் 141 நாட்கள் நீடிக்கும். இந்த ராசிக்காரர்களுக்கு சனியின் சஞ்சாரம் காரணமாக பலன் கிடைக்கப் போகிறது.

விருச்சிகம்: சனியின் சஞ்சாரம் விருச்சிக ராசிக்காரர்களின் தொழிலுக்கு சாதகமாக அமையப் போகிறது. எடுத்த வேலைகள் அனைத்திலும் வெற்றி கிடைக்கும்.வேலை, வியாபாரம் என அனைத்து துறைகளிலும் வெற்றி கிட்டும்.

நிதி பிரச்சனைகள் தீரும். நீங்கள் முதலீடு செய்ய நினைத்தால், பெரிய அளவில்  செய்யலாம். மேலும், இந்த நேரம் மாணவர்களுக்கும் சாதகமாக உள்ளது.

தனுசு - சனியின் அருளால் தனுசு ராசிக்காரர்கள் பலன் அடையப் போகிறார்கள். அரசு வேலைக்குத் தயாராகும் மாணவர்களுக்கு இது நல்ல நேரம். பணத் தட்டுப்பாடு நீங்கும்.  ​​எதிர்காலத்திற்காக சில முதலீடுகளைச் செய்வது நன்மை பயக்கும்.

மேலும் படிக்க | லக்ஷ்மி நாராயண யோகத்தினால் காதலில் செல்வாக்கு பெறுபவர்கள்

கும்பம்- கும்ப ராசிக்காரர்களுக்கு சனியின் வக்ர சஞ்சாரம் சாதகமாக இருக்கும். எந்தத் துறையில் இருப்பவராக இருந்தாலும் சரி வெற்றி நிச்சயம். மாணவர்களும் சனியின் அருளால் நன்மையடையப் போகிறார்கள். தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெறுவீர்கள். இத்துடன் நிதி நிலையும் நன்றாக இருக்கும்.

மேஷம் - ஜோதிட சாஸ்திரப்படி மேஷ ராசிக்காரர்களுக்கு சனியின் வக்ர சஞ்சாரம் சிறப்பான பலன்களைப் பெறப் போகிறார்கள். பணியிடத்தில் சாதகமான பலன்கள் காணப்படும்.

நீண்ட நாட்களாக வேலை மாற வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருப்பவர்களுக்கு இக்காலகட்டத்தில் அதற்கான சமயம் இது. சனியின் அருளால் நல்ல பலன் கிடைக்கும். இதன் போது நிதி நிலையும் மேம்படும், விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது. )

மேலும் படிக்க | வார ராசிபலன் (2022 ஜூன் 6 முதல் ஜூன் 12): தனுசு முதல் மீனம் வரை

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYe

Trending News