மகாலட்சுமி யோகத்தால் இந்த ராசிகளின் செல்வமும் செழிப்பும் பெருகும்

Venus Transit: சுக்கிரன் தனது ராசிக்கு பெயர்ச்சி ஆகியுள்ளதால், பல ராசிக்காரர்கள் இதன் பலன் கிடைக்கும். ஜூலை 13 வரை சுக்கிரன் தன் சொந்த ராசியில் இருப்பார், அதன் பிறகு அது மிதுன ராசியில் நுழைவார்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jun 18, 2022, 10:48 AM IST
  • சுக்கிரன் சஞ்சாரம் மேஷ ராசிக்காரர்களுக்கு சாதகமாக இருக்கும்.
  • மிதுன ராசிக்காரர்களுக்கு செலவுகள் கூடும்.
  • கடக ராசிக்காரர்களுக்கு சுக்கிரன் சஞ்சாரம் நன்மை தரும்.
மகாலட்சுமி யோகத்தால் இந்த ராசிகளின் செல்வமும் செழிப்பும் பெருகும் title=

சுக்கிரன் ராசி பரிவர்த்தன் 2022: ஜோதிடத்தில், சுக்கிரன் மகிழ்ச்சி, மகிமை, செல்வம் மற்றும் அழகு போன்றவற்றின் காரணியாகக் கருதப்படுகிறது. ரிஷபம் மற்றும் துலாம் ராசிக்கு அதிபதி சுக்கிரன். ஜூன் 18ம் தேதி, அதாவது இன்று காலை 08.06 மணிக்கு ரிஷப ராசிக்கு சுக்கிரன் பெயர்ச்சியாகியுள்ளார். 

சுக்கிரன் தனது ராசிக்கு பெயர்ச்சி ஆகியுள்ளதால், பல ராசிக்காரர்கள் இதன் பலன் கிடைக்கும். ஜூலை 13 வரை சுக்கிரன் தன் சொந்த ராசியில் இருப்பார், அதன் பிறகு அது மிதுன ராசியில் நுழைவார்.

சுக்கிரன் பெயர்ச்சியாகியுள்ள இன்று லக்ஷ்மி நாராயண் யோகம் உருவாகிறது:

புதன் கிரகம் ஏற்கனவே ரிஷப ராசியில் உள்ளது. தற்போது சுக்கிரனும் இந்த ராசியில் இன்று பெயர்ச்சியாகியுள்ளது. ரிஷப ராசியில் புதனும் சுக்கிரனும் இணைந்திருப்பதால் லக்ஷ்மி நாராயண யோகம் அல்லது மகாலட்சுமி யோகம் உருவாகி வருகிறது.

சுக்கிரனின் பெயர்ச்சியால் ராசிகளில் ஏற்படப்போகும் மாற்றங்கள்: 

மேஷம் - சுக்கிரன் சஞ்சாரம் மேஷ ராசிக்காரர்களுக்கு சாதகமாக இருக்கும். இந்த நேரத்தில் உங்கள் வீட்டில் சுப காரியங்கள் நடைபெறலாம். முன்னேற்றத்திற்கான புதிய பாதைகள் திறக்கப்படும். குடும்பச் சூழல் மகிழ்ச்சியாக இருக்கும்.

ரிஷபம்- சுக்கிரன் உங்கள் ராசிக்குள் நுழைந்துள்ளார். அத்தகைய சூழ்நிலையில், இந்த பெயர்ச்சி உங்களுக்கு நல்ல அறிகுறிகளைக் கொண்டுவருகிறது. உங்கள் பணி செய்யும் பாணியில் முன்னேற்றம் காணப்படும். இந்தக் காலத்தில் சொத்து, வாகனம் வாங்கும் யோகம் உருவாகும். வாழ்க்கைத்துணையின் ஆதரவு கிடைக்கும். முதலீடு செய்வதற்கு ஏற்ற காலமாக இது இருக்கும்.

மிதுனம்- மிதுன ராசிக்காரர்களுக்கு செலவுகள் கூடும். குடும்பத் தேவைகளுக்காக வருமானத்தை விட அதிகமாகச் செலவிட நேரிடலாம். இந்த நேரத்தில், கடன் வாங்குவதற்கான வாய்ப்புகள் உள்ளன. உங்கள் துணையின் ஆரோக்கியத்தில் அக்கறை கொள்ளுங்கள்.

மேலும் படிக்க | இந்த 3 ராசிகளுக்கு மகாலட்சுமி யோகம் ஆரம்பம்: புதன் சுக்கிரன் சேர்க்கையால் ராஜயோகம் 

கடகம் - கடக ராசிக்காரர்களுக்கு சுக்கிரன் சஞ்சாரம் நன்மை தரும். கடக ராசிக்காரர்களின் வாழ்க்கையில் இந்தப் பெயர்ச்சி நல்ல விளைவை ஏற்படுத்தும். இந்த காலத்தில் உங்கள் வருமானம் கூடும். வியாபாரிகள் லாபம் அடைவார்கள்.

சிம்மம் - சிம்மம் ராசிக்காரர்கள் தங்கள் துறையில் வெற்றி பெறுவார்கள். பதவி உயர்வு பெறலாம். புதிய வேலை வாய்ப்புகள் அமையும். வீட்டின் சூழ்நிலை மகிழ்ச்சியாக இருக்கும். உறவுகளில் சச்சரவுகள் வரலாம்.

கன்னி - சுக்கிரன் சஞ்சாரம் கன்னி ராசிக்காரர்களுக்கு மகிழ்ச்சியைத் தரும். உங்கள் கௌரவம் உயரும். இந்த காலத்தில் தந்தையின் ஆதரவு கிடைக்கும். பயணங்களை மேற்கொள்வீர்கள். 

துலாம்- துலாம் ராசிக்காரர்களுக்கு திடீர் பண லாபம் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் சிறப்பு கவனம் தேவை. இந்த நேரத்தில் உங்களுக்கு நல்லதும் கெட்டதும் செர்ந்து நடக்கலாம். வாகனத்தைப் பயன்படுத்தும் போது கவனமாக இருங்கள்.

விருச்சிகம் - இந்தப் பெயர்ச்சியால் உங்கள் உறவுகள் மேம்படும். இந்த நேரத்தில் நீங்கள் உங்கள் தொழிலில் வெற்றி பெறுவீர்கள். பண விஷயங்களில் நீங்கள் நிதி சிக்கல்களை சந்திக்க வேண்டியிருக்கும்.

தனுசு - தனுசு ராசிக்காரர்கள் தங்கள் காதல் வாழ்க்கையில் சவால்களை சந்திக்க நேரிடும். வாழ்க்கைத் துணையுடன் விரிசல் வரலாம். இரகசிய எதிரிகள் உங்களுக்கு பிரச்சனைகளை ஏற்படுத்தலாம். மனைவியின் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள்.

மகரம் - மகர ராசிக்காரர்களுக்கு சமூகத்தில் மரியாதையும் மதிப்பும் கிடைக்கும். தந்தையின் ஆதரவு கிடைக்கும். உங்கள் மனைவியுடனான உறவுகள் இனிமையாக இருக்கும். நல்ல செய்திகளைப் பெறலாம்.

கும்பம்- இந்த சஞ்சாரத்தின் போது வெளியூர் செல்லும் வாய்ப்பு கிட்டும். இந்த பயணங்கள் அனுகூலமான பலன்களை அளிக்கும். தந்தையின் உடல்நிலையில் அக்கறை காட்டுங்கள். இந்த நேரத்தில் உங்கள் செலவுகள் அதிகரிக்கும். பணியிடத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவைப் பெறுவீர்கள்.

மீனம்- சுக்கிரனின் சஞ்சாரம் காரணமாக மீன ராசிக்காரர்களுக்கு தொழிலில் மகத்தான வெற்றியைப் பெறலாம். மகிழ்ச்சியான பயணங்கள் மேற்கொள்ளப்படும். திடீர் பண ஆதாயம் கூடும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை இருக்கும்.

மேலும் படிக்க | செவ்வாய் ராசி மாற்றம்: ஜூன் 27 முதல் இந்த ராசிகள் மீது பண மழை, தொட்டது துலங்கும் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News