Astro Traits: சோதனைகளை சாதனைகளாக மாற்றும் திறன் கொண்ட ‘3’ ராசிகள்!

ஜோதிடத்தில், 3 ராசிகளுக்கு சொந்தக்காரர்கள், சோதனைகளை சாதனைகளாக மாற்றும் திறன் கொண்ட திறன் பெற்றவர்கள் என்பதோடு அவர்களை எளிதில் தோற்கடிக்கவும் முடியாது என கூறப்பட்டுள்ளது. 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Nov 9, 2022, 08:54 PM IST
  • பிறவியிலேயே தலைமை பண்பு கொண்டவர்கள்.
  • எதிராளியை சமாளிக்க எல்லா வழிகளிலும் முயற்சி செய்வார்கள்.
  • இந்த நபர்களுடன் வீண் வம்பிற்கு போகாமல் இருப்பது நல்லது.
Astro Traits: சோதனைகளை சாதனைகளாக மாற்றும் திறன் கொண்ட ‘3’ ராசிகள்! title=

ஜோதிடத்தில் எளிதில் தோற்கடிக்க முடியாத, சோதனைகளை சாதனைகளாக மாற்றும் திறன் கொண்ட சில ராசிகளை பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. அவர்கள் எப்போதும் தங்கள் எதிரிகளை வென்று ஆதிக்கம் செலுத்துகிறார்கள். ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், இந்த வெற்றிகள் அவர்களுக்கு இயல்பாகவே கிடைக்கும் என்பது தான். மேலும் அவர்கள் ஒவ்வொரு பிரச்சனையையும் மிகவும் சாதுரியமாக தீர்க்கும் திறன் பெற்றவர்கள், அவர்கள் தோல்வியடையும் வாய்ப்புகள் மிகக் குறைவு. மக்கள் அவரைத் தங்கள் தலைவனாக எளிதாகக் கருதுவதற்கு இதுவே காரணம். ஜோதிட சாஸ்திரப்படி எந்தெந்த ராசிக்காரர்களுக்கு இந்த குணங்கள் உள்ளன என்பதை தெரிந்து கொள்வோம்.

ரிஷபம்:

ரிஷபம் ராசிக்காரர்கள் ஆதிக்கம் செலுத்தும் இயல்புடையவர்கள். அவர்களைக் கட்டுப்படுத்துவது எளிதல்ல. அவர்கள் பிடிவாதமாகவும் தீவிர எண்ணம் கொண்டவர்களாகவும் இருக்கிறார்கள். அவர்கள் நினைத்ததை நிறைவேற்றினால் தான் நிம்மதி அடைவார்கள். வாழ்க்கையில் அனைவருக்கும் நேர்மையாக இருப்பார்கள். அதனால், அவர்கள் மிகவும் பயமற்றவர்கள் மற்றும் தைரியமானவர்கள். எனவே எதிரிகளின் பாதி தைரியம் அவர்களின் நம்பிக்கையைப் பார்த்த பிறகு காணாமல் போய்விடுகிறது.

மேலும் படிக்க | சூரிய பெயர்ச்சி: அதிர்ஷ்டத்தில் சூரியனைப் போல் பிரகாசிக்கும் ‘சில’ ராசிகள் இவை தான்! 

சிம்மம்:

இவர்களது ராசியின் பெயருக்கு ஏற்ப காட்டில் சிங்கம் போல் மிகவும் பயம் ஏதும் இல்லாமல், தைரியம், தன்னம்பிக்கை உள்ளவர்கள். இவர்கள் பேசுவதில் வல்லவர்கள். பிறவியிலேயே தலைமை பண்பு கொண்டவர்கள். அவர்கள் எதிராளியை சமாளிக்க எல்லா வழிகளிலும் முயற்சி செய்வார்கள். எனவே இந்த நபர்களுடன் வீண் வம்பிற்கு போகாமல் இருப்பது நல்லது.

விருச்சிகம்:

விருச்சிக ராசிக்காரர்களின் மனதில் ஆயிரம் விஷயம் பொதிந்திருக்கும். இந்த மக்கள் ஒருபோதும் வெளிப்படையாக சண்டையிட மாட்டார்கள். ஆனால் பொதுவாக பின்னால் இருந்து தான் தாக்குவார்கள். மக்களின் எண்ணங்களை உணரும் திறன் கொண்டவர்கள்.எனவே எவரையும் எளிதில் அடக்கிவிடுவார்கள். அவர்கள் சிறந்த தலைவர்கள் என்பதை எப்போதும் நிரூபிக்கிறார்கள்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | சுக்கிரன் மாற்றத்தால் உருவாகும் அஷ்டலக்ஷ்மி ராஜயோகம்: இந்த ராசிகளுக்கு சுக்கிரதசை 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News