Astrology: திருமண தடைகள் விலக... ராசிக்கு ஏற்ற எளிய ஜோதிட பரிகாரங்கள்..!

திருமணம்  செய்யாமல் ஒருவரின் வாழ்க்கை முழுமை அடைவதில்லை. திருமண தாமதத்திற்கு பல காரணங்கள் உள்ளன. சிலருக்கு, கிரக நிலைகள் காரணமாக திருமணம் தாமதமாகும்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Sep 8, 2023, 08:20 PM IST
  • பறவைகளுக்கு உணவு மற்றும் தண்ணீர் வழங்கி உதவுங்கள்.
  • சனிக்கிழமை தோறும் அனுமன் கோவிலில் தீபம் ஏற்றவும்.
  • தாம்ச உணவுகள் சாப்பிடுவதைக் குறைக்கவும்.
Astrology: திருமண தடைகள் விலக... ராசிக்கு ஏற்ற எளிய ஜோதிட பரிகாரங்கள்..! title=

திருமணம்  செய்யாமல் ஒருவரின் வாழ்க்கை முழுமை அடைவதில்லை. திருமண தாமதத்திற்கு பல காரணங்கள் உள்ளன. சிலருக்கு, கிரக நிலைகள் காரணமாக திருமணம் தாமதமாகும். பல சமயங்களில் திருமணம் நிச்சயமான பிறகும் திருமணம் நின்று போகும் நிலை ஏற்படலாம். திருமணத்தில் வரும் தடைகளை நீக்க எளிமையான சில பரிகாரங்கள் உள்ளன. இத்தகைய சூழ்நிலையில், திருமணத்தில் வரும் தடைகளை அகற்ற ஜோதிட சாஸ்திரத்தின்படி ராசிகளுக்கு ஏற்ற சில எளிய பரிகாரங்கள் செய்வது உதவியாக இருக்கும். 

ராசிப்படி திருமணத்திற்கான ஜோதிட பரிகாரங்கள்

மேஷம்:  திருமண தடைகள் நீங்கி விரைவில் விவாகம் நடக்க செவ்வாய் கிழமையன்று ஹனுமன் சிலைக்கு வெற்றிலை மாலை அல்லது துளசி மாலை சாற்றி வணங்கவும். சனிக்கிழமை சுந்தரகாண்டம் பாராயணம் செய்ய வேண்டும்.

ரிஷபம்: இளவயதில் திருமணம் நடக்க, தினமும் ஒருமுறை அனுமன் சாலிசாவை பாராயணம் செய்யுங்கள். சந்தனம் மற்றும் வாசனை திரவியங்களை அதிகம் பயன்படுத்துங்கள்.

மிதுனம்:  திருமண தடைகள் நீங்க, தினமும் வீட்டை விட்டு வெளியேறும் முன் நெற்றியில் குங்குமத் திலகம் தடவவும். புதன்கிழமை ஏழை மாணவர்களுக்கு புத்தகங்கள் வழங்கி உதவவும்.

கடகம்: திருமண தடைகள் நீங்க சிவன் கோவிலில் ஒவ்வொரு திங்கட்கிழமையும் தண்ணீர், பால் மற்றும் வில்வ இலைகளை அர்ப்பணிக்கவும். சனிக்கிழமையன்று உளுத்தம் வடை செய்து பகவானுக்கு அர்ப்பணித்து தானம் செய்யுங்கள்.

சிம்மம்: திருமண தடைகள் நீங்க சனிக்கிழமை தோறும் அனுமன் கோவிலில் தீபம் ஏற்றவும். தாம்ச உணவுகள் சாப்பிடுவதைக் குறைக்கவும்.

கன்னி: திருமண தடைகள் நீங்க , தினமும் ஒரு சிட்டிகை மஞ்சள் அல்லது சந்தனப் பொடியை தண்ணீரில் கலந்து குளிக்கவும். ஏழை மாணவர்களுக்கு புத்தகங்களை அளித்து உதவவும்

துலாம்: திருமண தடைகள் நீங்க  சனிக்கிழமை கருப்பு பொருட்களை தானம் செய்யுங்கள். பறவைகளுக்கு உணவு மற்றும் தண்ணீர் வழங்கி உதவுங்கள்.

விருச்சிகம்: செவ்வாய்க் கிழமை அன்று அனுமன் சிலை வெற்றிலை அல்லது துளசி மாலை சாற்றி வர இளவயது திருமணமாகும். தினமும் தண்ணீரில் சிறிது பால் கலந்து குளிக்கவும்.

மேலும் படிக்க | வேலை, வியாபாரத்தில் அமோக வெற்றி: புதன் வக்ர பெயர்ச்சியால் இவர்களுக்கு நல்ல காலம்

தனுசு:  தண்ணீரில் மஞ்சளை கலந்து வாழை மரத்தில் விட்டு வர வர இளவயதில் திருமணமாகும். 64 நாட்கள் தண்ணீரில் ஒரு சிட்டிகை மஞ்சள் கலந்து குளிக்கவும்.

மகரம்: திருமண தடைகள் நீங்க,  தினமும் குங்கும திலகம் பூசிவிட்டுதான் வீட்டை விட்டு வெளியே செல்ல வேண்டும். சிவலிங்கத்தின் ருத்ராபிஷேகத்தை மாதம் ஒருமுறை பாலுடன் செய்ய வேண்டும்.

கும்பம்: திருமண தடைகள் நீங்க சனி கோவிலில் நடைபெறும் பூஜையில் அன்னதானம் செய்யவும். உணவில் உளுந்து, மிளகு ஆகியவற்றைப் பயன்படுத்துங்கள்.

மீனம்: திருமண தடைகள் நீங்க  தினமும் நெற்றியில் மஞ்சள் சந்தன திலகம் தடவவும். தண்ணீரில் மஞ்சள் கலந்து வாழை மரத்திற்கு தண்ணீர் விடவும்.

பொறுப்புத் துறப்பு:  இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்,  உள்ளடக்கம், கணிப்பு ஆகியவற்றின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. இந்தத் தகவல் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.

மேலும் படிக்க | செப்டம்பர் மாத லக்கி ராசிகள் இவைதான்: லட்சுமி அன்னையின் அருள் மழை பொழியும், செல்வம் கொழிக்கும்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News