ஏழரை நாட்டு சனியின் இரண்டாம் கட்டம் ஆரம்பம்: இந்த ராசிகளுக்கு உஷார் நிலை

Saturn Transit: ஜனவரி மாதம் நிகழவுள்ள சனிப்பெயர்ச்சிக்கு பிறகு சில ராசிகளுக்கு ஏழரை நாட்டு சனியின் இரண்டாம் கட்டம் தொடங்கும். இந்த ராசிக்காரர்கள் அதிக கவனமாக இருக்க வேண்டும். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Dec 10, 2022, 07:45 PM IST
  • கணவன் / மனைவியுடன் கருத்து வேறுபாடு ஏற்படலாம்.
  • -இந்த நேரம் உங்களுக்கு சிரமங்கள் நிறைந்ததாக இருக்கும்.
  • பேச்சில் கட்டுப்பாடு இல்லாமல் போனால், உறவுகளிடம் சண்டைகள் வரக்கூடும்.
ஏழரை நாட்டு சனியின் இரண்டாம் கட்டம் ஆரம்பம்: இந்த ராசிகளுக்கு உஷார் நிலை

சனிப்பெயர்ச்சி 2023: ஜனவரி 17, 2023 அன்று, சனி பகவான் கும்ப ராசியில் வக்ரமாகவுள்ளார். இந்த மாற்றத்திற்கு பிறகு சில ராசிகளுக்கு சுப பலன்களும் சில ராசிகளுக்கு அசுப பலன்களும் கிடைக்கும். ஜோதிட சாஸ்திரத்தில் அனைத்து கிரகங்களின் மாற்றங்களுக்கும் முக்கியத்துகம் உண்டு என்றாலும், சனி பகவானின் ராசி மாற்றத்துக்கு சிறப்பு முக்கியத்துவம் உள்ளது. ஏனெனில், இது அதிகப்படியான விளைவுகளை ஏற்படுத்துகின்றது.

ஜனவரி மாதம் நிகழவுள்ள சனிப்பெயர்ச்சிக்கு பிறகு சில ராசிகளுக்கு ஏழரை நாட்டு சனியின் இரண்டாம் கட்டம் தொடங்கும். இந்த ராசிக்காரர்கள் அதிக கவனமாக இருக்க வேண்டும். ஜனவரி 17, 2023 அன்று இரவு 8.2 மணிக்கு சனி பகவான் கும்ப ராசிக்குள் நுழைகிறார். இந்த மாற்றம் காரணமாக, எந்தெந்த ராசிகள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என இந்த பதிவில் காணலாம். 

ஜோதிட சாஸ்திரப்படி ஜனவரி 17 ஆம் தேதி சனி பகவான் கும்ப ராசியில் வக்ர நிலையில் சஞ்சரிப்பார். இது கும்ப ராசிக்காரர்களுக்கு குறிப்பிடத்தக்க பலன்களைத் தரும். சனியின் வக்ர பெயர்ச்சியானவுடன் கும்ப ராசியில் ஏழரை நாட்டு சனியின் தாக்கம் தொடங்கும். சனியின் பார்வை இந்த ராசிக்காரர்களின் ஜாதகத்தில் மூன்றாவது, ஏழாவது மற்றும் பத்தாம் வீட்டில் இருக்கும். அப்படிப்பட்ட நிலையில் கும்ப ராசிக்காரர்களுக்கு கஷ்டங்கள் அதிகரிக்கலாம். ஏழரை நாட்டு சனியின் இரண்டாம் கட்ட பலன்கள் என்ன என்பதை இந்த பதிவில் காணலாம். 

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பிரச்சனைகள் வரக்கூடும் 

- ஜோதிட சாஸ்திரத்தின் படி, ஜனவரி 17 ஆம் தேதி, சனி தேவன் கும்ப ராசியில் வக்ர நிலைக்கு மாறுவார். 

- இதன் காரணமாக ஏற்படும் தாக்கத்தால் கலவையான பலன்கள் காணப்படும். 

மேலும் படிக்க | புத்தாண்டு ராசிபலன்: இந்த ராசிகளுக்கு அடுத்த ஆண்டு மகாலட்சுமியின் பரிபூரண அருள் கிடைக்கும் 

- போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்கள் தங்கள் இலக்குகளிலிருந்து விலகிச் செல்வார்கள். 

- இதனுடன், வேலை செய்பவர்கள் திடீர் தடைகளை சந்திக்க நேரிடும்.

- மேலும் இந்த நேரத்தில் கவனச்சிதறல் ஏற்படும்.

திருமண வாழ்வில் பிரச்சனைகள் வரும்

- ஏழாம் வீட்டில் சனியின் அம்சம் இருப்பதால், கும்ப ராசிக்காரர்களின் திருமண வாழ்க்கையிலும் பிரச்சினைகள் எழும். 

- ​​கணவன் / மனைவியுடன் கருத்து வேறுபாடு ஏற்படலாம். 

- இந்த நேரம் உங்களுக்கு சிரமங்கள் நிறைந்ததாக இருக்கும். பேச்சில் கட்டுப்பாடு இல்லாமல் போனால், உறவுகளிடம் சண்டைகள் வரக்கூடும். 

- திருமணமாகாதவர்களின் திருமணம் தாமதமாகலாம்.

இந்த வீட்டில் சனியின் பார்வை நன்றாக இருக்கிறது

ஜோதிடத்தின்படி, ஜாதகத்தில் பத்தாம் வீட்டில் சனியின் பார்வை மக்களுக்கு நல்லதாக கருதப்படுகிறது. இந்த ஸ்தானத்தில் சனியின் பார்வை நன்றாக உள்ளது. ஆகையால், இந்த ஸ்தானத்தில் சனியின் கிருபை இருந்தால், சனி எப்போதும் உங்களுக்கு நல்ல பலன்களைத் தருகிறார். எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். இந்த காலகட்டத்தில் சனி உங்களை நல்ல செயல்களைச் செய்பவராக மாற்றுவார். வாழ்வில் மகிழ்ச்சியும் அமைதியும் கிடைக்கும்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் உள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | தனுசு ராசியில் பிரவேசிக்கும் சூரியன்; ‘சிலருக்கு’ பண வரவு... ‘சிலருக்கு’ பண விரயம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

 

More Stories

Trending News