இன்று கஜகேசரி யோகம் ஆரம்பம்: 4 ராசிகளுக்கு சிக்கல், நஷ்டம், சோதனை காலம்.. ஜாக்கிரதை!!

Gajakesari Yog: கஜகேசரி யோகத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும். இருப்பினும் சில ராசிகளுக்கு இதனால் பாதகமான பலன்கள் ஏற்படும். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : May 31, 2023, 02:24 PM IST
  • விருச்சிக ராசிக்காரர்களுக்கு இந்த காலகட்டத்தில் அதிர்ஷ்டம் இருக்காது.
  • நீங்கள் இறக்குமதி-ஏற்றுமதி தொழிலில் ஈடுபட்டிருந்தால், அதிகப்படியான நஷ்டத்தை சந்திக்க நேரிடும்.
  • வீட்டில் ஆன்மீகம் அல்லது மதம் சார்ந்த சில காரியங்கள் தடைகளுக்கு மத்தியில் நிறைவேறும்.
இன்று கஜகேசரி யோகம் ஆரம்பம்: 4 ராசிகளுக்கு சிக்கல், நஷ்டம், சோதனை காலம்.. ஜாக்கிரதை!! title=

கஜகேசரி யோகம்: ஜோதிட சாஸ்திரப்படி சந்திரன் மிக வேகமாக நகரும் கிரகம் ஆகும். இது ஒரு ராசியில் ஒரு மணி நேரத்திலிருந்து அதிகபட்சமாக 2.5 நாட்கள் வரை தங்கி, 28 நாட்களில் 12 ராசிகளையும் கடந்து செல்கிறது. துலாம் ராசியில் சந்திரனின் சஞ்சாரம் புகழ்பெற்ற கஜகேசரி யோகத்தை உருவாக்கப் போகிறது. ராகு-கேது அச்சில் கஜகேசரி யோகம் உருவாகி வருவதால், சில ராசிக்காரர்களை இது எதிர்மறையாக பாதிக்கும்.

இம்முறை சந்திரன் மே 31, 2023, அதாவது இன்று மாலை 6.29 மணிக்கு துலாம் ராசியில் பெயர்ச்சியாகிறார். மேலும் ஜூன் 3, 2023 அன்று மதியம் 12.28 மணி வரை அவர் இந்த ராசியில் இருப்பார். ராகு-கேது அச்சு கஜகேசரி யோகத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும். இருப்பினும் சில ராசிகளுக்கு இதனால் பாதகமான பலன்கள் ஏற்படும். அந்த ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம். 

இந்த ராசிக்காரர்களுக்கு பாதகமான பலன்கள் உண்டாகும்

மேஷ ராசி

மேஷ ராசிக்காரர்கள் இந்த நேரத்தில் தங்கள் புத்திசாலித்தனத்தை அதிகபட்சமாகப் பயன்படுத்த முடியும். மேலும் அவர்கள் இப்போது உயர் நிலை அறிவைப் பெற முடியும். ஆனால் ஆணவமும் பொறாமையும் உங்கள் மீது ஆதிக்கம் செலுத்தும். இந்த கட்டத்தில் உங்கள் அதீத நம்பிக்கை உங்களை சிக்கலில் சிக்க வைக்கும். உங்கள் தொழிலில் நஷ்டம் ஏற்படலாம். சமூகத்தில் உங்கள் நற்பெயரை இழக்க நேரிடலாம், எனவே கவனமாக இருங்கள். திடீரென்று பயணம் செய்ய வேண்டியிருக்கும், இது அதிக நிதி சுமையை ஏற்படுத்தும். புதிய சவால்கள் உங்களைத் தொந்தரவு செய்யும்.

மேலும் படிக்க | ரோகிணி நட்சத்திரத்தில் சூரியன் பெயர்ச்சி: இந்த 5 ராசிகள் ஜூன் 3 வரை கவனம்

கடக ராசி

ஒருபுறம், கடக ராசிக்காரர்கள் தொழிலில் மகத்தான வெற்றியைப் பெறுவார்கள். மறுபுறம், இந்த யோகத்தால், உங்கள் பணியிடத்தில் நீங்கள் போராட்டத்தை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். இந்த நேரத்தில் முதலாளியுடன் பிரச்சினைகள் ஏற்படலாம். நீங்கள் உங்கள் வேலையை கூட விட்டுவிட வேண்டிய சூழ்நிலைக்கும் தள்ளப்படலாம்.  தொழிலில் நஷ்டம் ஏற்படாமல் இருக்க, புத்திசாலித்தனமாக முடிவுகளை எடுக்கவும். அலுவலக பணிகளில் உள்ளவர்களுக்கு வேலையில் மனம் போகாது. சக ஊழியர்கள் அல்லது மேலதிகாரிகளுடன் தகராறு ஏற்படலாம். 

துலா ராசி

துலாம் ராசிக்காரர்களுக்கு கஜகேசரி யோகம் செல்வம் பெருகுவதற்குப் பதிலாக செலவுகளை அதிகரிக்கும். இந்த நேரத்தில், பல எதிர்மறை எண்ணங்கள் உங்கள் மனதில் வரலாம். துலாம் ராசியினருக்கு, வியாழன் மற்றும் ராகு திருமணத்தில் தடைகளை உருவாக்கலாம் அல்லது திருமணமான தம்பதிகளிடையே மோதல்களை உருவாக்கலாம். கடின உழைப்புக்கு முழுப் பலன் கிடைக்காமல் ஏமாற்றம் அல்லது வருத்தம் அடையலாம். வியாபாரத்தில் முதலீடு செய்வதற்கு முன் அந்த துறையை சார்ந்த வல்லுனர்களிடம் ஆலோசனை பெறவும். இல்லையெனில் சேதம் ஏற்படலாம்.

விருச்சிக ராசி

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இந்த காலகட்டத்தில் அதிர்ஷ்டம் இருக்காது. நீங்கள் இறக்குமதி-ஏற்றுமதி தொழிலில் ஈடுபட்டிருந்தால், அதிகப்படியான நஷ்டத்தை சந்திக்க நேரிடும். வீட்டில் ஆன்மீகம் அல்லது மதம் சார்ந்த சில காரியங்கள் தடைகளுக்கு மத்தியில் நிறைவேறும். விருச்சிக ராசிக்காரர்களுக்கு வயிற்றில் பிரச்சனைகள் வரலாம். உங்கள் திருமண வாழ்க்கை பாதிக்கப்படலாம். உங்கள் ஒழுங்கற்ற பழக்க வழக்கங்கள் காரணமாக பல தொந்தரவுகளை நீங்கள் சந்திக்க நேரிடலாம். கடன் வாங்க வேண்டி வரலாம். கண்களில் பிரச்சனைகள் வரக்கூடும். கண்களை கவனமாக பாதுகாத்துக்கொள்ளுங்கள். 

(பொறுப்புத் துறப்பு: இங்கு கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களும் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | சுக்கிரன் செவ்வாய் சேர்க்கை: 1 மாதம் 3 ராசிகளுக்கு பொற்காலம், கோடீஸ்வர யோகம்!!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News