சனியுடன் பல கிரகங்களின் மாற்றம்: ஜூன் மாதம் இந்த ராசிக்காரர்களை பாடாய் படுத்தும், ஜாக்கிரதை!!

June 2023 Grah Gochar: ஜூன் மாத கிரகப் பெயர்ச்சி மற்றும் மாதாந்திர ஜாதகத்திலிருந்து, இந்த மாதம் எந்த ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவில் காணலாம். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : May 30, 2023, 01:58 PM IST
  • மேஷ ராசிக்காரர்களுக்கு ஜூன் மாதம் சர்ச்சையையும், டென்ஷனையும் தரும்.
  • வாழ்க்கைத்துணையுடன் கருத்துவேறுபாடு ஏற்படலாம்.
  • வீட்டில் கருத்து வேறுபாடுகள் ஏற்படும்.
சனியுடன் பல கிரகங்களின் மாற்றம்: ஜூன் மாதம் இந்த ராசிக்காரர்களை பாடாய் படுத்தும், ஜாக்கிரதை!! title=

ஜூன் மாத கிரக மாற்றங்கள்: வேத ஜோதிடத்தின்படி, ஒவ்வொரு கிரகமும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் தனது ராசியை மாற்றுகின்றது. ராசி மட்டுமின்றி கிரகங்களின் இயக்கம், அஸ்தமன, உதய நிலைகளிலும் மாற்றங்கள் ஏற்படுகின்றன. இன்னும் இரண்டு நாட்களில் ஜூம் மாதம் பிறக்கவுள்ளது. ஜூன் 2023 -இல் பல முக்கியமான கிரகங்கள் பெயர்ச்சியாகவுள்ளன. ஜூன் மாதம் முதலில் புதன் கிரகம் பெயர்ச்சியாகும். அதன் பிறகு சூரியனின் பெயர்ச்சி நிகழும். மேலும் புதன் கிரகத்தின் அஸ்தமன்மும் இந்த மாதம் நடக்கும். அதனுடன் மிகப்பெரிய ஜோதிட நிகழ்வாக சனி பகவானின் வக்ர பெயர்ச்சியும் இந்த மாதம் நடக்கவுள்ளது. இது தவிர சூரியனும் புதனும் சேர்ந்து புத்தாதித்ய யோகத்தையும் உருவாக்கும். 

இந்த வகையில், ஜூன் மாதம் முக்கியமான கிரகங்களின் இயக்கத்தில் ஏற்படும் மாற்றங்கள் 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இதன் காரணமாக ஜோதிட சாஸ்திரத்தின் பார்வையில் ஜூன் 2023 மிகவும் முக்கியமான மாதமாக கருதப்படுகின்றது. 

ஜூன் மாத கிரக மாற்றங்கள் 

ஜூன் 7, 2023, புதன்கிழமை: ரிஷப ராசியில் புதன் பெயர்ச்சி
ஜூன் 15 2023, வியாழக்கிழமை: மிதுன ராசியில் சூரியன் பெயர்ச்சி
ஜூன் 17, 2023, சனிக்கிழமை: கும்பத்தில் சனி வக்ர பெயர்ச்சி
ஜூன் 19 2023, திங்கட்கிழமை: ரிஷப ராசியில் புதன் வக்ர பெயர்ச்சி 
ஜூன் 24 2023, சனிக்கிழமை: மிதுன ராசியில் புதன் பெயர்ச்சி

ஜூன் 2023ல் இந்த ராசிக்காரர்களிடம் கவனமாக இருக்க வேண்டும்

ஜூன் மாதத்தில் பெயர்ச்சி ஆகும் மற்றும் நிலைகளை மாற்றும் கிரகங்கள் அனைத்து ராசிகளிலும் சுப மற்றும் அசுப விளைவுகளை ஏற்படுத்தும். ஜூன் மாத கிரகப் பெயர்ச்சி மற்றும் மாதாந்திர ஜாதகத்திலிருந்து, இந்த மாதம் எந்த ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவில் காணலாம். 

மேஷ ராசி: 

மேஷ ராசிக்காரர்களுக்கு ஜூன் மாதம் சர்ச்சையையும், டென்ஷனையும் தரும். வாழ்க்கைத்துணையுடன் கருத்துவேறுபாடு ஏற்படலாம். வீட்டில் கருத்து வேறுபாடுகள் ஏற்படும். தொழிலுக்கும் நேரம் அத்தனை நன்றாக இருப்பதாக சொல்ல முடியாது.

மேலும் படிக்க | சனி வக்ர பெயர்ச்சி இந்த ராசிகளை 5 மாதம் படுத்துவார், நஷ்டம், கஷ்டம், சிக்கல் ஏற்படும்

மிதுன ராசி:

ஜூன் 2023 மிதுன ராசிக்காரர்களுக்கு செலவுகள் அதிகரிக்கும். திடீரென்று பயணம் செய்ய வேண்டியிருக்கும், இது அதிக நிதி சுமையை ஏற்படுத்தும். புதிய சவால்கள் உங்களைத் தொந்தரவு செய்யும்.

கடக ராசி:

ஜூன் மாதம் கடக ராசிக்காரர்களுக்கு பண இழப்பு ஏற்படலாம். தொழிலில் நஷ்டம் ஏற்படாமல் இருக்க, புத்திசாலித்தனமாக முடிவுகளை எடுக்கவும். அலுவலக பணிகளில் உள்ளவர்களுக்கு வேலையில் மனம் போகாது. சக ஊழியர்கள் அல்லது மேலதிகாரிகளுடன் தகராறு ஏற்படலாம். வாழ்க்கைத் துணையுடன் பல பிரச்சினைகள் ஏற்படக்கூடும். குழப்பங்கள் மேலோங்கி  இருக்கும். 

சிம்ம ராசி:

சிம்ம ராசிக்காரர்கள் கடின உழைப்புக்கு முழுப் பலன் கிடைக்காமல் ஏமாற்றம் அல்லது வருத்தம் அடையலாம். வியாபாரத்தில் முதலீடு செய்வதற்கு முன் அந்த துறையை சார்ந்த வல்லுனர்களிடம் ஆலோசனை பெறவும். இல்லையெனில் சேதம் ஏற்படலாம்.

தனுசு ராசி:

தனுசு ராசிக்காரர்கள் ஜூன் மாதம் எதிர்பாராத செலவுகளைச் சந்திக்க நேரிடும். அபாயகரமான முதலீடுகளைச் செய்யாதீர்கள். உண்ணும் உணவு மற்றும் உட்கொள்ளும் பானங்கள் ஆகியவற்றில் கவனம் தேவை. ஆரோக்கியம் மோசமாக பாதிக்கப்படலாம்.

கும்ப ராசி:

தாயாரின் உடல்நிலை மோசமடையலாம். உங்கள் ஒழுங்கற்ற பழக்க வழக்கங்கள் காரணமாக பல தொந்தரவுகளை நீங்கள் சந்திக்க நேரிடலாம். கடன் வாங்க வேண்டி வரலாம். கண்களில் பிரச்சனைகள் வரக்கூடும். கண்களை கவனமாக பாதுகாத்துக்கொள்ளுங்கள். 

மீன ராசி: 

மீன ராசிக்காரர்கள் ஜூன் மாதத்தில் தன்னம்பிக்கை மற்றும் பகுத்தறியும் சக்தியின் குறைவை உணருவார்கள். உங்கள் சக ஊழியர்கள் உங்களை அவமானப்படுத்த முயற்சி செய்யலாம். உங்கள் மனதில் மன உளைச்சல் ஏற்படக்கூடும். அவசரப்பட்டு அல்லது உணர்ச்சிவசப்பட்டு தவறான முடிவுகளை எடுக்காதீர்கள். இந்த நேரத்தை பொறுமையுடன் கையாள்வது உங்களை தேவையற்ற சஞ்சலங்களிலிருந்து காப்பாற்றும். 

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | இன்று சுக்கிரன் பெயர்ச்சி: இந்த ரசிகளுக்கு பண மழை, தொட்டது துலங்கும்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News