சனியின் அருளால் நவம்பர் முதல் இந்த ராசிகளின் தலைவிதி மாறும், ராஜயோகம் ஆரம்பம்

Sani Vakra Nivarthi: சில ராசிகளுக்கு சனியின் இந்த மாற்றம் மிக லாபகரமானதாக இருக்கும். அவர்களுக்கு அனுகூலமான பல பலன்கள் கிடைக்கும். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Oct 12, 2023, 05:49 PM IST
  • சனியின் வக்ர நிவர்த்தியால் உருவாகும் ஷஷ ராஜயோகம் சிம்ம ராசிக்காரர்களுக்கு பலன் தரும்.
  • உங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
  • குறிப்பாக குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி இருக்கும்.
சனியின் அருளால் நவம்பர் முதல் இந்த ராசிகளின் தலைவிதி மாறும், ராஜயோகம் ஆரம்பம்

சனி வக்ர நிவர்த்தி, ராசிகளில் அதன் தாக்கம்: சனாதன தர்மத்தில், அனைத்து கிரகங்களின் ராசி மாற்றம், நட்சத்திர மாற்றம், உதய மற்றும் அஸ்தமன நிலைகள், வக்ர பெயர்ச்சி, வக்ர நிவர்த்தி ஆகியவை சிறப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளன. இவற்றின் தாக்கம் அனைத்து ராசிகளிலும்  காணப்படும். நீதியின் கடவுள் என அழைக்கப்படும் சனி பகவான் அனைத்து கிரகங்களிலும் மிக முக்கியமான கிரகமாக கருதப்படுகிறார். மக்கள் செய்யும் செயல்களுக்கு ஏற்ப அவர் பலன்களை அளிக்கிறார். பொதுவாக சனியை கண்டு அனைவரும் அஞ்சுவது உண்டு. ஆனால், நாம் நல்ல செயல்களை செய்தால் அவர் நமக்கு நலல் பலன்களையே அளிக்கிறார். '

Add Zee News as a Preferred Source

சனி பகவான் அனைத்து கிரகங்களிலும் மிகவும் மெதுவாக நகரும் கிரகமாக உள்ளார். இதனால் அவரது தாக்கமும் அனைத்து கிரகங்களிலும் அதிகமாக இருக்கும். அனத்து கிரங்களையும் போல அவரும் வக்ர பெயர்ச்சியும் வக்ர நிவர்த்தியும் அடைகிறார். சனி தற்போது வக்ர நிலையில் உள்ளார். நவம்பர் 4 ஆம் தேதி அவர் கும்ப ராசியில் வக்ர நிவர்த்தி அடைவார். அதாவது அவர் தனது இயல்பான இயக்கத்திற்கு திரும்புவார். சனி வக்ர நிவர்த்தியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். எனினும், சில ராசிகளுக்கு சனியின் இந்த மாற்றம் மிக லாபகரமானதாக இருக்கும். அவர்களுக்கு அனுகூலமான பல பலன்கள் கிடைக்கும். அந்த அதிர்ஷ்டக்கார ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம். 

சனி வக்ர நிவர்த்தியால் அமோகமான பலன்களை பெறவுள்ள ராசிகள்: 

ரிஷப ராசி (Taurus)

ரிஷபம் ராசிக்காரர்களுக்கு சனியின் வக்ர நிவர்த்தி மிகவும் நன்மை பயக்கும். சனியின் மாற்றத்தால் உருவாகும் ஷஷ ராஜயோகம் இவர்களின் தலைவிதியை மாற்றும். உங்கள் விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும். உங்கள் தொழிலில் பலமான முன்னேற்றம் அடைவீர்கள். உங்கள் தொழிலில் பொன்னான வாய்ப்புகளைப் பெறுவீர்கள். இது உங்களுக்கு உயர் பதவியையும் அதிக சம்பளத்தையும் தரும். நீங்கள் பெரிய நிதி நன்மைகளைப் பெறுவீர்கள். இது உங்கள் வாழ்க்கையில் நிதி செழிப்பைக் கொண்டுவரும். வியாபாரம் விரிவடையும். இன்னும் திருமணம் நடக்காதவர்களுக்கு திருமணம் நடக்கும்.

மேலும் படிக்க | ராகு கேது பெயர்ச்சி: இந்த ராசிகள் மீது லட்சுமி அன்னையின் அருள் மழை.. பொற்காலம் ஆரம்பம்

மிதுன ராசி (Gemini)

நவம்பர் மாதத்தில் ஏற்படவுள்ள சனியின் வக்ர நிவர்த்தி மிதுன ராசிக்காரர்களுக்கு நன்மை பயக்கும் என்று கருதப்படுகிறது. கும்ப ராசியில் சனி வக்ர நிவர்த்தி அடைவதால் மிதுன ராசிக்காரர்களின் பொருளாதார நிலை வலுப்பெறும் என்ற நம்பிக்கை உள்ளது. இக்காலகட்டத்தில் சனி நேரடியாக இயக்கத்தில் இருப்பதால் நிலம், வாகனம் வாங்கும் வாய்ப்பு உண்டு. இந்த காலகட்டத்தில் வேலையில் வெற்றி கிடைக்கும். இந்த நேரத்தில் லட்சுமி அன்னையின் சிறப்பு ஆசீர்வாதங்களைப் பெறுவீர்கள்.

சிம்ம ராசி (Leo)

சனியின் வக்ர நிவர்த்தியால் உருவாகும் ஷஷ ராஜயோகம் சிம்ம ராசிக்காரர்களுக்கு பலன் தரும். உங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். குறிப்பாக குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி இருக்கும். திருமணமானவர்களின் வாழ்வில் மகிழ்ச்சி இருக்கும். கணவன் மனைவி இடையே உறவு வலுவாக இருக்கும். ஆடம்பர பொருட்களால் மகிழ்ச்சி அதிகரிக்கும். பொருளாதார ரீதியாகவும் பல நன்மைகள் உண்டாகும். சர்ச்சைக்குரிய  விஷயங்களில் வெற்றி பெறுவீர்கள்.

கும்ப ராசி (Aquarius)

சனியின் வக்ர நிவர்த்தி கும்ப ராசிக்காரர்களுக்கு நல்ல நாட்களைக் கொண்டு வரும். கும்ப ராசிக்கு அதிபதி சனி. தற்போது அவர் கும்ப ராசியில்தான் சஞ்சரித்து வருகிறார். கும்ப ராசியில் சனியின் வக்ர நிவர்த்தி இந்த ராசிக்காரர்களுக்கு தன்னம்பிக்கையை அதிகரிக்கும். உயர் பதவியில் இருப்பவர்களுடன் உறவை வளர்த்துக் கொள்வீர்கள். பண பலன்கள் உண்டாகும். பணியிடத்தில் நல்ல வாய்ப்புகளைப் பெறலாம். கூட்டுத் தொழிலில் வெற்றி பெறலாம்.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | அக்டோபரில் சனி உச்சம்.. இந்த 5 ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Sripriya Sambathkumar

Sripriya Sambath is the Chief Sub Editor at Zee Tamil, with over 5 years of experience in journalism. She specialises in writing stories on business, personal finance and has covered wide range of topics including Union Budgets, Central Government Employees, Pay Commissions, Government policies, pension schemes, pensioners, stock markets, income tax, banking, economy, agriculture and International affairs. 

She values the interests and needs of her readers and considers her writing as a medium of connecting with readers and feels responsible to deliver news, views and analysis for them on time, everytime. For her, having a natural and loyal connect with her audience is of prime importance. Outside of work, she loves books, travel and intellectual conversations.

...Read More

Trending News