ராகு கேது பெயர்ச்சி: இந்த ராசிகள் மீது லட்சுமி அன்னையின் அருள் மழை.. பொற்காலம் ஆரம்பம்

Rahu Ketu Peyarchi: சில ராசிக்காரர்களுக்கு ராகு கேது பெயர்ச்சி எண்ணற்ற நன்மைகளை கொண்டு வரும். இவர்கள் மீது லட்சுமி அன்னையின் அருள் மழை பொழியும். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Oct 11, 2023, 06:34 PM IST
  • சிம்ம ராசிக்காரர்களுக்கு ராகு மற்றும் கேதுவின் ராசி மாற்றத்தால் அதிர்ஷ்டம் கூடும்.
  • வணிக நிலைமைகள் வலுவாக இருக்கும்.
  • மாணவர்களுக்கு இது ஒரு நல்ல காலமாக கருதப்படுகிறது.
ராகு கேது பெயர்ச்சி: இந்த ராசிகள் மீது லட்சுமி அன்னையின் அருள் மழை.. பொற்காலம் ஆரம்பம் title=

ராகு-கேது பெயர்ச்சி, ராசிகளில் அதன் தாக்கம்: ஜோதிடத்தில், ராகு மற்றும் கேது நிழல் கிரகங்களாக கருதப்படுகின்றன. இவை பெயர்ச்சி ஆகும் போதெல்லாம், மற்ற கிரகங்களுடன் இணைந்து 12 ராசிக்காரர்களின் வாழ்விலும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. ராகுவும் கேதுவும் எப்போதும் வக்ர இயக்கத்தில், அதாவது தலைகீழ் இயக்கத்தில் சஞ்சரிக்கின்றன. இன்னும் சில நாட்களில் இவை தங்கள் ராசியை மாற்றவுள்ளன.

தீபாவளிக்கு முன்னதாக ராகு-கேது ஆகிய இரு நிழல் கிரகங்களும் 13 மாதங்களுக்குப் பிறகு மற்றொரு ராசியில் பெயர்ச்சி ஆகவுள்ளன. அக்டோபர் 30 அன்று, இந்த இரண்டு கிரகங்களும் தங்கள் ராசியை மாற்றவுள்ளன. ராகு மற்றும் கேதுவின் பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும். எனினும், சில ராசிக்காரர்களுக்கு இந்த பெயர்ச்சி எண்ணற்ற நன்மைகளை கொண்டு வரும். இவர்கள் மீது லட்சுமி அன்னையின் அருள் மழை பொழியும். அந்த அதிர்ஷ்ட ராசிகள் பற்றி இந்த பதிவில் காணலாம். 

ராகு கேது பெயர்ச்சியால் அதிகப்படியான நற்பலன்களை பெறவுள்ள ராசிகள்

மேஷ ராசி (Aries)

ராகு மற்றும் கேதுவின் பெயர்ச்சி மேஷ ராசிக்காரர்களுக்கு மிகவும் சாதகமாக கருதப்படுகிறது. ராகுவும், கேதுவும் ராசி மாறிய பிறகு, வெற்றி பெற கடினமாக உழைக்க வேண்டியதில்லை. வெற்றிகள் இவர்களை தேடி வரும். வியாபாரத்தில் நல்ல செய்திகள் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் அமைதியும் நிலவுவதுடன் நிதி ஆதாயமும் உண்டாகும். பழைய நண்பர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும். இந்த நேரம் உங்கள் தொழிலுக்கு மிகவும் சிறப்பாக இருக்கும். வெளியூர் சென்று வேலை செய்ய விரும்புபவர்களுக்கு நல்ல சலுகைகள் கிடைக்கும்.

கடக ராசி (Cancer)

ராகு-கேதுவின் பெயர்ச்சியால் கடக ராசிக்காரர்கள் அனைத்து துறைகளிலும் வெற்றி பெறுவார்கள். வியாபாரிகளுக்கு ஓரளவு லாபம் கிடைக்கும். இந்த நேரத்தில் சிரமமான பணிகளில் இருந்து விடுபடுவீர்கள். புகழ் உயரும். புதிய வேலை கிடைக்கலாம். பதவி உயர்வு கிடைக்க வாய்ப்பு உண்டு. இந்த நேரத்தில், எதிர்பாராத நிதி ஆதாயம் மற்றும் வாழ்க்கையில் மகிழ்ச்சி இருக்கும்.

மேலும் படிக்க | அக்டோபரில் சனி உச்சம்.. இந்த 5 ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்

சிம்ம ராசி (Leo)

சிம்ம ராசிக்காரர்களுக்கு ராகு மற்றும் கேதுவின் ராசி மாற்றத்தால் அதிர்ஷ்டம் கூடும். வணிக நிலைமைகள் வலுவாக இருக்கும். ஒரு நல்ல ஒப்பந்தத்தை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். மாணவர்களுக்கு இது ஒரு நல்ல காலமாக கருதப்படுகிறது. பண வரவும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. உடல் நலனில் அக்கறை செலுத்தி குடும்ப உறுப்பினர்களுடன் நேரத்தை செலவிடுங்கள்.

துலா ராசி (Libra)

ராகு-கேதுவின் ராசி மாற்றத்தின் பலன் துலாம் ராசிக்காரர்களுக்கு மங்களகரமானதாக கருதப்படுகிறது. வாழ்க்கையில் இருந்து வந்த தடைகள் விலக ஆரம்பிக்கும். குடும்ப உறுப்பினர்களின் முழு ஆதரவையும் பெறுவீர்கள். வாழ்க்கைத் துணையுடன் அமைதியான தருணங்களை செலவிடுவீர்கள். ஆரோக்கியம் நன்றாக இருக்கும். ஒரு நீண்ட பயணத்தைத் திட்டமிடலாம். இதில் அனுகூலமான பல நன்மைகள் கிடைக்கும். 

மீன ராசி (Pisces)

ராகு-கேதுவின் சஞ்சாரம் மீன ராசிக்காரர்களின் வாழ்விலும் குறிப்பிடத்தக்க மாற்றங்களைக் கொண்டுவரும். புதிய முதலீடுகள் மற்றும் வணிக ஒப்பந்தங்கள் மூலம் லாபம் காணலாம். தீபாவளிக்கு முன் ராகு-கேது பெயர்ச்சியால் வாழ்வில் வரும் பிரச்சனைகள் நீங்கும். வரும் ஆண்டு உங்களுக்கு மிகச் சிறந்ததாக இருக்கும்.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.) 

மேலும் படிக்க | குரு உச்சம் செல்கிறார்.. 2024 ஆம் ஆண்டில் இந்த ராசிகளுக்கு கோடீஸ்வர யோகம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News