சனி மற்றும் புதனின் அருளால் இந்த ராசிகளின் தலைவிதி மாறும், வாழ்க்கை பிரகாசிக்கும்

Astrology: சனி மற்றும் புதன் ஆகிய கிரகங்களின் நிலை மாற்றத்தால் 4 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் பிரகாசிக்கப் போகிறது. இந்த ராசிக்காரர்களுக்கு அனுகூலமான சூழல் உண்டாகும்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jun 10, 2022, 05:23 PM IST
  • சனி மற்றும் புதனின் சஞ்சாரம் மேஷ ராசியின் விதியை மாற்றும் அளவு அனுகூலமாக இருக்கும்.
  • மிதுன ராசிக்காரர்களுக்கு சனி, புதன் ஆகிய கிரகங்களின் நிலை மாற்றம் மிக நல்ல பலன்களை அளிக்கும்.
  • தடைபட்ட வேலைகள் தற்போது நடந்து முடியும்.
சனி மற்றும் புதனின் அருளால் இந்த ராசிகளின் தலைவிதி மாறும், வாழ்க்கை பிரகாசிக்கும் title=

புதன் ராசி மாற்றம் / சனி வக்ர பெயர்ச்சி: ஜூன் மாதம் 2 முக்கிய மாற்றங்களுடன் தொடங்கியது. ஜூன் 2022 முதல் வாரத்தில், சனி மற்றும் புதன் ஆகிய 2 முக்கிய கிரகங்களின் இயக்கம் மாறியது. 

ஜூன் 3 அன்று புதன் ரிஷப ராசிக்கு மாறினார். ஜூன் 5 அன்று சனி கும்ப ராசியில் வக்ரமானார். சனி மற்றும் புதனின் சஞ்சாரம் அனைத்து ராசிக்காரர்களுக்கும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அடுத்த 1 மாதம் புதன் இந்த நிலையில் இருப்பார். அக்டோபர் மாதம் வரை சனி பிற்போக்கு நிலையில் இருப்பார். இப்படிப்பட்ட நிலையில் இந்த இரண்டு கிரகங்களின் மாறியுள்ள நிலையால் 4 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் பிரகாசிக்கப் போகிறது.

இந்த ராசிக்காரர்களுக்கு அனுகூலமான சூழல் உண்டாகும்

மேஷம்:

சனி மற்றும் புதனின் சஞ்சாரம் மேஷ ராசியின் விதியை மாற்றும் அளவு அனுகூலமாக இருக்கும். இவர்கள் தொழில்-வியாபாரத்தில் அதிகப்படியான பலன்களை அடைவார்கள். வேலை தேடுபவர்களுக்கு புதிய வேலை கிடைக்கும். ஏற்கனவே நல்ல வேலையில் உள்ளவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். 

பண வரவு சாதகமாக இருக்கும். புதிய வீடு வாகனம் வாங்கும் யோகம் தற்போது உள்ளது. புதிய விஷயங்களைத் தொடங்க இது ஒரு நல்ல நேரமாக இருக்கும். வியாபாரத்திலும் பல புதிய முயற்சிகளை தற்போது எடுக்கலாம். 

மேலும் படிக்க | சூரியன் ராசி மாற்றம்: ஜூன் 15 முதல் இந்த ராசிகளின் வாழ்க்கை ஜொலிக்கும், வெற்றிகள் குவியும் 

ரிஷபம்:

புதன் ரிஷப ராசியில் நுழைந்துள்ளார். இவர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும். வருமானம் அதிகரிக்கும். பதவி உயர்வு, ஊதிய உயர்வு ஆகியவற்றுக்காக காத்திருப்பவர்களின் காத்திருப்பு இப்போது தீரும். அனைத்துக்கும் அனுகூலமான நேரமாக இது இருக்கும். 

போதுமான பணம் கையில் இருக்கும். இதனால் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். நீண்ட நாட்களாக ஒரு இடத்தில் சிக்கி இருந்த பணம் கிடைக்கும். கூட்டுப் பணிகளில் அனுகூலப் பலன்கள் உண்டாகும். பணத்தை சேமிப்பதில் வெற்றி கிடைக்கும்.

மிதுனம்:

மிதுன ராசிக்காரர்களுக்கு சனி, புதன் ஆகிய கிரகங்களின் நிலை மாற்றம் மிக நல்ல பலன்களை அளிக்கும். தடைபட்ட வேலைகள் தற்போது நடந்து முடியும். புதிய வேலை வாய்ப்புகள் அமையும். 

பயணம் செல்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். இந்த பயணங்கள் மூலம் உங்களுக்கு அனுகூலமான பல நீகழ்வுகள் நடக்கும். வியாபாரிகள் சிறப்பாகச் செயல்படுவார்கள். அவர்களின் லாபமும் பெருகும், வேலையும் விரியும்.

தனுசு:

தனுசு ராசிக்கார்ரகளுக்கு புதனின் நிலை மாற்றமும், சனியின் வக்ர நகர்வும் நன்மை தரும். இதுவரை தடைப்பட்டிருந்த பதவி உயர்வு இப்போது கிடைக்கும். வேலையில் வெற்றி உண்டாகும். அரசுப் பணிகளுக்கு தயாராகி வருபவர்கள் வெற்றி பெறலாம். 

சாதகமான பண வரவு இருக்கும். புதிய வழிகளில் பணம் பெறுவீர்கள். வியாபாரத்தில் ஈடுபட்டுள்ள தனுசு ராசிக்காரர்கள் தற்போது வியாபாரத்தை விரிவுபடுத்தலாம். அதிக லாபம் பெறுவதற்கான காலகட்டமாக இது இருக்கும்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிபடுத்தவில்லை.)

மேலும் படிக்க | நிறைவான செல்வம் பெற வேண்டுமா; குபேரர் அருளை பெற செய்ய வேண்டியவை

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News