மீனத்தில் சுக்கிரன் பெயர்ச்சி... ராஜ யோகத்தை அனுபவிக்கும் அதிர்ஷ்ட ராசிகள்!

Sukran Peyarchi Palangal: மகிழ்ச்சிக்கான காரணி கிரகமான சுக்கிரன் மார்ச் 31ம் தேதி மீன ராசியில் பெயர்ச்சி ஆன நிலையில், ஏப்ரல் 24-ம் தேதி வரை மீன ராசியில் இருப்பார். இது சில ராசிகளுக்கு ராஜ யோகத்தை கொடுக்கும்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Apr 8, 2024, 04:09 PM IST
  • மீன ராசியில் சுக்கிரன் பெயர்ச்சியாகியுள்ளது யாருக்கு பலன் என்பதை தெரிந்து கொள்வோம்.
  • பல ராசிக்காரர்களுக்கு சுக்கிரன் பெயர்ச்சியினால் நல்ல பலன்கள் கிடைத்து வருகின்றன.
  • ராகுவுடன் சுக்கிரன் இணைந்து இருப்பதால் பல வகையான ராஜயோகம் உருவாகியுள்ளது.
மீனத்தில் சுக்கிரன் பெயர்ச்சி... ராஜ யோகத்தை அனுபவிக்கும் அதிர்ஷ்ட ராசிகள்! title=

Sukran Peyarchi Palangal: ஜோதிட சாஸ்திரத்தில், கிரகங்கள் ஒரு குறிப்பிட்ட காலத்தில் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சி ஆகின்றன. ஜோதிடத்தில், சுக்கிரன் மகிழ்ச்சி, அழகு, செழிப்பு மற்றும் இன்பத்திற்கு காரணமான கிரகமாக கருதப்படுகிறது. மார்ச் 31-ம் தேதி  சுக்கிரன் மீனத்தில் பிரவேசித்துள்ளார். ஏப்ரல் 24 ஆம் தேதி வரை சுக்கிரன் மீனத்தில் சஞ்சாரம் செய்யும் நிலையில், அதன் பிறகு மேஷ ராசியில் சஞ்சரிக்கிறார். 

பல ராசிக்காரர்களுக்கு சுக்கிரன் பெயர்ச்சியினால் நல்ல பலன்கள் கிடைத்து வருகின்றன. இது தவிர ராகுவுடன் சுக்கிரன் இணைந்து இருப்பதால் பல வகையான ராஜயோகம் உருவாகியுள்ளது. லக்ஷ்மி நாராயண யோகம், விபரீத ராஜயோகம், மாளவ்ய ராஜயோகம் ஆகிய யோகங்கள் உருவாகியிருக்கிறது. ஒரே நேரத்தில் பல ராஜயோகங்கள் அமைவதால், சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழையில் நனையும் வாய்ப்பு கிடைக்கிறது. சுக்கிரனின் ராசி மாற்றம் மற்றும் மீன ராசியில் சுக்கிரன் பெயர்ச்சியாகியுள்ளது (Venus Transit) யாருக்கு பலன் என்பதை தெரிந்து கொள்வோம்.

மிதுன ராசி: சுக்கிரன் பெயர்ச்சி பலன்கள்

மிதுன ராசிக்காரர்களுக்கு சுக்கிரனின் அருளால், வரும் காலம் மிகவும் சிறப்பாகவும் அற்புதமானதாகவும் இருக்கும். உங்கள் ராசியில் மாளவ்ய ராஜயோகம் உருவாகும். இதனால், நீங்கள் வேலை மற்றும் வியாபாரத்தில் நல்ல அதிர்ஷ்டத்தைப் பெறுவீர்கள். முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் இருக்கும். வருமான ஆதாரங்கள் அதிகரிக்கும். திடீர் நிதி ஆதாயத்திற்கான வாய்ப்புகள் அதிகம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும். பொருள் வசதிகள், ஆடம்பர வசதிகள் நல்லபடியாக உயரும் வாய்ப்புகள் உண்டு. செல்வத்திற்கு குறைவிருக்காது.

கடக ராசி: சுக்கிரன் பெயர்ச்சி பலன்கள்

கடக ராசிக்காரர்களுக்கு, சுக்கிரனும் ராகுவும் அதிர்ஷ்ட வீட்டில் இணைவதால், அதிர்ஷ்டத்திற்கு குறைவே இருக்காது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகள் கிடைப்பதுடன். பதவி உயர்வு, சம்பள உயர்வுக்கான வாய்ப்புகள் கூடும். வேலையில், தொழிலில் முன்னேற்றம் ஏற்பட வாய்ப்பு உண்டு. திடீர் நிதி ஆதாயத்திற்கான வாய்ப்புகள் அமையும். நிலுவையில் உள்ள பணிகள் விரைவில் நிறைவேறும். வாழ்க்கையில் சாதனை செய்யும் அளவிற்கு உங்களுக்கு ஒரு பெரிய வாய்ப்பு கிடைக்கலாம்.

சிம்ம ராசி: சுக்கிரன் பெயர்ச்சி பலன்கள்

சிம்ம ராசிக்காரர்களுக்கு ஜாதகத்தில் பத்தாம் வீட்டில் சுக்கிரன் ராகு சேர்க்கை நடைபெறுகிறது. இதனால், நிதி ஆதாயத்தையும் அதிர்ஷ்டத்தையும் பெறுவீர்கள். தனவரவுக்கு குறைவே இருக்காது. உங்கள் நிதி நிலையில் முன்னேற்றம் காண்பீர்கள். திருமண வாழ்க்கை சிறப்பாக இருக்கும். குழந்தைகள் தரப்பில் இருந்து கிடைக்கும் நல்ல செய்தியினால், மனம் மகிழ்ச்சியாக இருக்கும். பணியிடத்தில், தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். பொறுப்புகள் அதிகரிக்கும். கடின உழைப்பிற்கான அங்கீகாரம் கிடைக்கும்.

மேலும் படிக்க | சனி நட்சத்திர பெயர்ச்சி: அடுத்த 181 நாட்கள் இந்த ராசிகளுக்கு நல்ல நாட்கள் ஆரம்பம்

கன்னி ராசி: சுக்கிரன் பெயர்ச்சி பலன்கள்

சுக்கிரனின் ராசி மாற்றம் கன்னி ராசிக்காரர்களுக்கு மிகவும் நன்மை பயக்கும். மாளவ்ய ராஜயோகம் உங்கள் ராசியின் ஏழாம் வீட்டில் உருவாகப் போகிறது. எனவே, கூட்டுத் தொழில் மற்றும் திருமண வாழ்க்கை வாழ்பவர்கள் நன்மைகளைப் பெறுவார்கள். மூதாதையர் சொத்துக்களால் பொருளாதார நிலை உயரும். கூடுதல் ஆதாரங்கள் மூலம் நல்ல பணம் சம்பாதிக்கலாம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் புதிய வாய்ப்புகளைப் பெறலாம். பணியிடத்தில் வெற்றியை அடையலாம். அலுவலத்தில் பாராட்டு, விருதுகள் வழங்கப்படலாம்.

தனுசு ராசி: சுக்கிரன் பெயர்ச்சி பலன்கள்

தனுசு ராசிக்காரர்களுக்கு மீனத்தில் சுக்கிரன் சஞ்சாரம் செய்வதும், அதன் காரணமாக மாளவ்ய ராஜயோகம் உருவாகுவதும் ஒரு வரப்பிரசாதமாக இருக்கும். உங்கள் ஜாதகத்தில் நான்காம் இடத்தில் சுக்கிரன் சஞ்சரிக்க போகிறார், இதனால் நீங்கள் வாழ்க்கையில், பல வகையான மகிழ்ச்சிகளைப் பெறுவீர்கள். வாகனம், வீடு என்ற சுகம் விரைவில் கிடைக்கும். உங்கள் மீதான மதிப்பு மரியாதை அதிகரிக்கும். அரசியல் துறையில் இருப்பவர்களுக்கு பெரிய பதவி கிடைக்கும். குடும்பத்தினர் மற்றும் நண்பர்களிடமிருந்து முழு ஆதரவைப் பெறுவீர்கள். 

பொறுப்புத் துறப்பு:  இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.

மேலும் படிக்க | Surya grahan 2024: 54 ஆண்டுகளுக்குப் பிறகு நிகழும் முழு சூரிய கிரகணம்.. இந்த ராசிகளின் தலைவிதி தலைகீழாக மாறும்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News