Diwali Lakshmi Poojai neram Tamil | தீபாவளி வந்துவிட்டது. கொண்டாட்டம் களைகட்ட புது ஆடை அணிகலன்கள் எல்லாவற்றையும் தேடி தேடி வாங்கி கொண்டிருப்பீர்கள். நல்ல விஷயம் தான். ஆனால், இந்த தீபாவளி நாளில் வீட்டில் பூஜை செய்ய சாமி புகைப்படம் வாங்கிவிட்டீர்களா?. ஆம், தீபாவளி நாளில் வீட்டில் மகாலட்சுமிக்கு பூஜை செய்து வழிபடுவது சிறப்பு. வீட்டில் ஏற்கனவே லட்சுமி தேவி புகைப்படம் இருந்தால் புதிதாக வாங்க வேண்டிய அவசியமில்லை. மகா லட்சுமி புகைப்படம் இல்லாதவர்கள், புது ஆடை வாங்கும்போது கட்டாயம் இந்த புகைப்படத்தையும் சேர்த்து வாங்கிவிடுங்கள்.
தீபாவளி லட்சுமி பூஜை சிறப்பு
தீபாவளி தீமைகளை விலக்கி நன்மைகளை கொண்டு வரும் நாளாக பார்க்கப்படுகிறது. இந்த நாளில் லட்சுமி தேவியை வழிபடும்போது செல்வம், அமைதி, ஞானம் எல்லாம் கிடக்கும் என்பது நம்பிக்கை. மகாலட்சுமி வழிபாட்டுக்கு உகந்த நாள் என்பதால் அக்டோபர் 31 ஆம் தேதி வியாழக்கிழமை தீபாவளி நாளில் லட்சுமி தேவிக்கு படையிலிட்டு, புத்தாடை அணிந்து குடும்பத்தோடு வழிபட வேண்டும். இதன் மூலம் லட்சுமி தேவி மகிழ்வித்து, தேவியின் அருளை நேரடியாக பெறக்கூடிய அம்சமான நாள் தான் இது. இந்த வழிபாடு மூலம் குடும்பம் செல்வ செழிப்போடு இருப்பதும் மட்டுமின்றி, நெருக்கடிகள் இல்லாமல், சிக்கல்கள் இல்லாமல் நிம்மதியாக வாழலாம்.
லட்சுமி பூஜைக்கு தேவையான பொருட்கள்
லட்சுமி தேவி புகைப்படம். ஏற்கனவே இருந்தால் அதனை சுத்தபடுத்தி வைத்துக் கொள்ளுங்கள். மஞ்சள், குங்குமம் பொட்டு வைத்து, லட்சுமிக்கு பிடித்த மல்லிகை, ரோஜா மாலை போட்டு அலங்கரிக்க வேண்டும். தாமரை மாலை அணிவித்தால் இன்னும் சிறப்பு. வாழை, ஆப்பிள், திராட்சை உள்ளிட்ட பழங்கள், தேங்காய், வெற்றிலை பாக்கு வைத்து சாம்பிராணி வாசம் வீச, விளக்கில் தீபம் ஏற்ற வேண்டும். பின்னர் கற்பூர ஆராதனை காண்பித்து லட்சுமி தேவியை குடும்பத்தோடு வழிபட வேண்டும்.
தீபாவளி லட்சுமி பூஜை செய்ய உகந்த நேரம்
தீபாவளி அமாவாசை தினத்தில் வருகிறது. இந்த அமாவாசை நாளில் பிரம்ம முகூர்த்தம் அதிகாலை 4.30 மணியில் இருந்து 5.18 வரை இருக்கிறது. நல்ல நேரம் என்றால் காலை 11:29 AM – 12:15 PM வரை இருக்கிறது. இந்த நேரத்தில் லட்சுமி தேவி வழிபாட்டை மேற்கொள்ளலாம். தேய்பிறை அமாவாசை என்பதை கவனத்தில் கொள்ளுங்கள். காலபைரவர் கோவிலுக்கு கூட குடும்பத்தோடு சென்று வரலாம்.
(பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், உள்ளடக்கம், கணிப்பு ஆகியவற்றின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. இந்தத் தகவல் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ஜீ நியூஸ் - Zee News இதற்கு பொறுப்பேற்காது.)
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ