துலாம் ராசியில் இணையும் புதன் - சுக்கிரன்; லட்சுமி நாராயண யோகம் பெறும் ‘3’ ராசிகள்!

லக்ஷ்மி நாராயண யோகம்: ஜோதிட சாஸ்திரத்தில் லக்ஷ்மி நாராயண யோகத்திற்கு சிறப்பு முக்கியத்துவம் உண்டு. புதன் மற்றும் சுக்கிரன் இணைவதால் இந்த யோகம் உருவாகிறது. 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Oct 13, 2022, 04:38 PM IST
  • லக்ஷ்மி நாராயண யோகம் தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல வெற்றியைத் தரும்.
  • குடும்பத்தில் திருமணம், ஆன்மீக நிகழ்ச்சிகள் நடைபெறலாம்.
  • அரசு வேலைக்குத் தயாராகி வருபவர்களுக்கும் நல்ல செய்தி கிடைக்கும்.
துலாம் ராசியில் இணையும் புதன் - சுக்கிரன்; லட்சுமி நாராயண யோகம் பெறும் ‘3’ ராசிகள்!  title=

லக்ஷ்மி நாராயண யோகம்: ஜோதிட சாஸ்திரத்தில் லக்ஷ்மி நாராயண யோகத்திற்கு சிறப்பு முக்கியத்துவம் உண்டு. புதன் மற்றும் சுக்கிரன் இணைவதால் இந்த யோகம் உருவாகிறது. செல்வத்தையும் சிறப்பையும் தருபவரான சுக்கிரன் அக்டோபர் 18ஆம் தேதி துலாம் ராசியில் பிரவேசிக்கப் போகிறார். மறுபுறம், கிரகங்களின் அதிபதியான புதன் கிரகம் அக்டோபர் 26 ஆம் தேதி துலாம் ராசியில் சஞ்சரிக்க உள்ளார். இதனால் லக்ஷ்மி நாராயண யோகம் உருவாகி இந்த யோகத்தின் பலன் அனைத்து ராசிகளிலும் காணப்படும். ஆனால் குறிப்பிட்ட 3 ராசிகள், இந்த இணைவினால், அபரிமிதமாக பண வரவை பெற்று பலன் அடைவார்கள். இந்த ராசிகள் என்னென்ன என்பதை தெரிந்து கொள்வோம்.

கன்னி:

லக்ஷ்மி நாராயண யோகம் கன்னி ராசிக்காரர்களுக்கு மங்களகரமானதாக இருக்கும். பெயர்ச்சி ஜாதகத்தின் இரண்டாம் இடத்தில் இந்த யோகம் அமையும். இந்த ஸ்தானம் ஜோதிடத்தில் பணம் மற்றும் பேச்சுத் திறனுக்கான இடமாகக் கருதப்படுகிறது. இதனால், பண வரவுக்கு குறைவிருக்காது. நிலுவையில் உள்ள வேலைகள் இந்த நேரத்தில் நிறைவடையும். கடனில் சிக்கியிருந்த பணத்தை திரும்ப பெற முடியும். உங்கள் வணிகம் வெளிநாட்டுடன் தொடர்புடையதாக இருந்தால், நல்ல பணம் சம்பாதிக்கலாம். இந்த நேரத்தில் தொழிலில் வெற்றி பெற வாய்ப்புள்ளது. இதனுடன் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும்.

மேலும் படிக்க | சனி - செவ்வாய் இணைவதால் உண்டாகும் ஷடாஷ்டக யோகம்; வெற்றிகளை குவிக்கும் ‘3’ ராசிகள்!

தனுசு:

இந்த யோகம் அமைவதால் வருமானத்தில் பெருகி, பண பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம். ஏனெனில் இந்த ராசிகளின் பெயர்ச்சி ஜாதகத்தின் 11ம் இடத்தில் லக்ஷ்மி நாராயண யோகம் அமையும். இதனால்,  அரசு வேலைக்குத் தயாராகி வருபவர்களுக்கும் நல்ல செய்தி கிடைக்கும். சொத்து சம்பந்தமான விஷயங்கள் சாதகமாக முடியும். இந்த நேரத்தில் நீங்கள் பங்கு சந்தை மற்றும் பந்தயம், லாட்டரிகளில் பணம் சம்பாதிக்கலாம். இந்த நேரத்தில், வேலையில் உங்கள் மேலதிகாரிகளுடன் நல்ல உறவுகள் உருவாகும். குடும்பத்தில் திருமணம், ஆன்மீக நிகழ்ச்சிகள் நடைபெறலாம். ஆனால் இந்த நேரத்தில் பண பரிவர்த்தனை செய்யும் போது கவனமாக இருக்கவும். இல்லையெனில், பொருள்  இழப்பும் ஏற்படலாம்.

மகரம்:

லக்ஷ்மி நாராயண யோகம் உங்களுக்கு தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல வெற்றியைத் தரும். ஏனெனில் உங்கள் பெயர்ச்சி ஜாதகத்தின் பத்தாம் வீட்டில் இந்த யோகம் அமையும். எனவே, இந்த நேரத்தில் கைக்கு வராமல் தடைப்பட்டிருந்த பணத்தைப் பெறலாம். வியாபாரம் விரிவடையும். அதே நேரத்தில், பணியிடத்தில் உங்களின் திறன் மூலம் ஒவ்வொரு பணியையும் சிறப்பாக முடித்து பாராட்டினை பெறுவீர்கள். மேலும், இந்த நேரத்தில் உங்கள் சக ஊழியர்களும் மேலதிகாரிகளும் உங்கள் பணியினால் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பார்கள். இதன் காரணமாக அலுவலகத்தில் கைதட்டல்களை பெறலாம். மறுபுறம் இரும்பு, தாதுக்கள், பெட்ரோல், எண்ணெய் போன்ற சனிதேவர் தொடர்பான வணிகத்தின் இருப்பவர்கள், சிறப்பான பலன்களைப் பெறலாம்.

மேலும் படிக்க | குருவின் ராசி மாற்றத்தினால் பஞ்சமஹாபுருஷ ராஜயோகம்; அமோக வாழ்வைப் பெரும் ‘3’ ராசிகள்! 

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளது. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | Astro: வாழ்க்கையை புரட்டிப் போடும் குரு சாண்டள யோகம்; சில எளிய பரிகாரங்கள் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News