Weather News In Tamil: இன்று முதல் படிப்படியாக தமிழ்நாடு முழுவதுமாகவே பரவலாக மழை அதிகரிக்கும். தமிழகத்தில் இன்று (செப்டம்பர் 23 ஆம் தேதி) பல்வேறு மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை கொடுக்கப்பட்டு உள்ளன. இன்று எந்த மாவட்டங்கள் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என்பதை அறிந்துக்கொள்ளுங்கள்.
தமிழகத்தில் செப்டம்பர் மாதம் 23 ஆம் தேதி முதல் 26 ஆம் தேதி வரை பலத்த காற்றுடன் இடியுடன் கூட கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் முக்கிய எச்சரிக்கை கொடுத்துள்ளது. அதன்படி மத்திய மேற்கு வங்கடல் பகுதியில் ஒரு புதிய காற்றெழுத்து தாழ்வு பகுதி உருவாகியுள்ளதன் காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்கயில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.
குறிப்பாக இன்று (செப்டம்பர் மாதம் 23 ஆம் தேதி) மத்திய மேற்கு வங்கடல் பகுதியில் குறைந்த காற்றெழுந்து தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இதன் காரணமாக தமிழ்நாடு, புதுவை, காரைக்கால் பகுதியில் பல்வேறு மாவட்டங்கள் கனமழை பெய்ய வாய்ப்பு இருக்கிறகு. மேலும் சில குறிப்பிட்ட மாவட்டங்கள் மிதமான மழை பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டு உள்ளன.
மேலும் படிக்க - மழையில் ரீல்ஸ் எடுக்கும் போது வழுக்கி விழுந்த பெண்! வைரல் வீடியோ!
தமிழகத்தில் வரக்கூடிய செப்டம்பர் மாதம் 28 ஆம் தேதி வரை கனமழை மற்றும் மிதமான மழை பெய்யக்கூடும். எனவே மக்கள் வெளியில் செல்வதற்கு முன்பு எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, விழுப்புரம், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் குறிப்பிட்ட பகுதியில் கனமழையும், மற்ற பல்வேறு பகுதிகளுக்கு மிதமான மழை பெய்யக்கூடும்.
அதேபோல இன்று சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்ப நிலை 36 முதல் குறைந்தபட்ச வெப்ப நிலையாக 28 டிகிரி செல்சியஸ் வரை இருக்கக்கூடும் என அறிவிக்கப்பட்டு உள்ளன.
மேலும் படிக்க - eKYC Deadline | ரேஷன் அட்டைதாரர்களுக்கு வெளியான அதிர்ச்சி தகவல்! உஷார்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ