சனி உதயம்: இந்த ராசிகளின் தலைவிதி மாறும், பதவி உயர்வு, பண வரவு கிடைக்கும்

Saturn Rise in March: சனி பகவான் உதயமாவதின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். எனினும், சில ராசிகளில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் இருக்கும். இவர்களின் அதிர்ஷ்டம் அமோகமாக இருக்கும். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Feb 4, 2023, 11:38 AM IST
  • துலாம் ராசிக்காரர்களுக்கு சனி உதயமாவது சுபமான விளைவுகளை ஏற்படுத்தும்.
  • தொழில்-வியாபாரத்தில் லாபம் உண்டாகும்.
  • உத்தியோகத்தில் இருந்த பிரச்சனைகளில் இருந்து விடுபடுவீர்கள்.
சனி உதயம்: இந்த ராசிகளின் தலைவிதி மாறும், பதவி உயர்வு, பண வரவு கிடைக்கும் title=

சனி பகவானின் உதயம்: வேத ஜோதிடத்தில், சனி பகவான் நீதியின் கடவுள் என்று அழைக்கப்படுகிறார். மனிதர்கள் செய்யும் செயல்களுக்கு ஏற்ப பலன்களை அளிப்பவர் சனி பகவான். 30 ஆண்டுகளுக்குப் பிறகு ஜனவரி 17 ஆம் தேதி, சனி தனது அசல் திரிகோண ராசியான கும்பத்தில் நுழைந்தார். அதன் பின்னர், ஜனவரி 30 ஆம் தேதி, சனி கும்ப ராசியிலேயே அஸ்தமன நிலைக்கு சென்றுள்ளார். சனி பகவான் 33 நாட்களுக்கு அஸ்தமன நிலையில் இருப்பார். அதன் பிறகு, மார்ச் 5 ஆம் தேதியன்று, சனி பகவான் மீண்டும் உதயமாவார். 

சனி பகவான் உதயமாவதின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். எனினும், சில ராசிகளில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் இருக்கும். இவர்களின் அதிர்ஷ்டம் அமோகமாக இருக்கும். இந்த ராசிக்காரர்கள் தொழிலில் பெரிய முன்னேற்றம் அடைவார்கள். வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைக்கும். வேலையில் இருப்பவர்களுக்கு ஊதிய உயர்வு, சம்பள உயர்வுக்கான வலுவான வாய்ப்புகள் இருக்கும். சனியின் உதயம் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு அனுகூலமாக இருக்கும் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். 

சனி உதயம் இவர்களின் தலைவிதியை ஒளிரச் செய்யும்

ரிஷபம்: 

ரிஷப ராசிக்காரர்கள் சனியின் உதயத்தால் பெரிய அளவிலான நன்மைகளை அடைவார்கள். வேலை, சம்பளம் என இதுவரை எந்தெந்த விஷயங்களுக்காக காத்திருந்தார்களோ, அனைத்தும் இப்போது நிறைவேறும்.  உங்கள் விருப்பப்படி புதிய வேலை கிடைக்கும். உங்கள் வேலையை மக்கள் பாராட்டுவார்கள். பதவி உயர்வு கிடைக்கும். வருமானம் அதிகரிக்கும். புதிய தொழில் தொடங்கலாம்.

மேலும் படிக்க | மங்களக்காரகன் குருவின் பெயர்ச்சியால் பணமழையில் நனையப்போகும் ராசிகள்

சிம்மம்:

ஜோதிட சாஸ்திரப்படி, சனியின் உதயம் சிம்ம ராசிக்காரர்களின் வாழ்வில் செல்வ வளம் பெறுவதற்கான வாய்ப்பை உருவாக்கும். குறிப்பாக வியாபாரம் செய்பவர்கள் அதிக லாபம் ஈட்டுவார்கள். திருமண வாழ்வில் மகிழ்ச்சி உண்டாகும். மன அழுத்தம், பிரச்சனைகள் நீங்கும்.

துலாம்: 

துலாம் ராசிக்காரர்களுக்கு சனி உதயமாவது சுபமான விளைவுகளை ஏற்படுத்தும். தொழில்-வியாபாரத்தில் லாபம் உண்டாகும். உத்தியோகத்தில் இருந்த பிரச்சனைகளில் இருந்து விடுபடுவீர்கள். அலுவலக வேலைகளில் இருப்பவர்களுக்கு அப்ரெய்சல் நன்றாக இருக்கும். பண வரவு சாதகமாக இருக்கும்.

கும்பம்: 

கும்பத்தில் சனி அஸ்தமனமானதால், இந்த ராசியில்தான் உதயமாகும். ஆகையால் அதிகபட்ச தாக்கம் கும்ப ராசிக்காரர்களுக்குத்தான் இருக்கும். இவர்கள் பிரச்சனைகள் மற்றும் மன அழுத்தத்தில் இருந்து விடுபடுவார்கள். நீண்ட நாட்களாக தடைப்பட்டிருந்த பணிகள் இப்போது தொடங்கும். மரியாதை அதிகரிக்கும். பணம் கிடைக்க வாய்ப்புகள் இருக்கும்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | கும்பத்தில் இணையும் சனி -சூரியன்! சுகபோகத்தை அனுபவிக்க போகும் ‘சில’ ராசிகள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News