கேது பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு வேலை, வியாபாரத்தில் விண்ணைத் தொடும் வெற்றி, பண வரவு!!

Ketu Transit: கேதுவின் ராசி மாற்றத்தால் சில ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அதிகரிக்கும். இந்த ராசிக்காரர்களுக்கு அதிகப்படியான நற்பலன்கள் ஏற்படும். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Feb 3, 2023, 01:30 PM IST
  • கேது பெயர்ச்சி தனுசு ராசிக்காரர்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சியை நிரப்பும்.
  • இந்த ராசிக்காரர்களுக்கு மிகுந்த நன்மை உண்டாகும்.
  • பண வரவு அமோகமாக இருக்கும்.
கேது பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு வேலை, வியாபாரத்தில் விண்ணைத் தொடும் வெற்றி, பண வரவு!!

கேது பெயர்ச்சி 2023, ராசிகளில் அதன் தாக்கம்: ஜோதிட சாஸ்திரத்தில் கிரகங்களின் மாற்றத்திற்கு அதிக முக்கியத்துவம் உள்ளது. கிரகங்களின் ராசி மாற்றங்களும் நிலை மாற்றங்களும் அனைத்து ராசிகளிலும் பல தாக்கங்களை ஏற்படுத்தும். இந்த தாக்கம் காரணமாக சிலருக்கு சுப பலன்களும் சிலருக்கு அசுப பலன்களும் கிடைக்கும். 2023 ஆம் ஆண்டில், சனி, ராகு மற்றும் கேது போன்ற மூன்று முக்கியமான மற்றும் மெதுவாக நகரும் கிரகங்களின் ராசி மாற்றங்கள் ஏற்படுகின்றன. 

சனி இரண்டரை வருடத்திற்கு ஒரு முறை தனது ராசியை மாற்றுகிறார். ராகுவும் கேதுவும் ஒன்றரை வருடத்திற்கு ஒரு முறை ராசியை மாற்றுகின்றன. மேலும், ராகு மற்றும் கேது ஆகிய கிரகங்கள் எப்போதும் வக்ர நிலையில் நகர்கின்றன. 

ராகு மற்றும் கேது ஆகிய கிரகங்கள் இந்த ஆண்டு அக்டோபர் 30 ஆம் தேதி தங்கள் ராசியை மாற்றுகின்றன. ராகு மேஷ ராசிக்கு மாறுவார், கேது துலாம் ராசியில் நுழையவுள்ளார். கேதுவின் ராசி மாற்றத்தால் சில ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அதிகரிக்கும். இந்த ராசிக்காரர்களுக்கு அதிகப்படியான நற்பலன்கள் ஏற்படும். கேதுவின் மாற்றத்தால், எந்தெந்த ராசிகளுக்கு தொழில், நிதி விஷயங்களில் சிறப்பான பலன்கள் கிடைக்கும் என்பதை இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம். 

இந்த ராசிக்காரர்களுக்கு கேது பெயர்ச்சியின் சுப பலன்கள் கிடைக்கும்:

ரிஷபம்: 

ரிஷப ராசிக்காரர்களுக்கு கேதுவின் ராசி மாற்றம் மிகவும் சாதகமாக இருக்கும். இவர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும். இதுவரை இருந்து வந்த பிரச்சனைகள் அனைத்தும் நீங்கும். ரிஷப ராசிக்காரர்கள் இந்த காலத்தில் அபரிமிதமான செல்வத்தைப் பெறுவார்கள். தொழிலில் பெரிய பதவியும் பணமும் கிடைக்கும். ஆரோக்கியம் மிகவும் நன்றாக இருக்கும்.

மேலும் படிக்க | கும்பத்தில் இணையும் சனி -சூரியன்! சுகபோகத்தை அனுபவிக்க போகும் ‘சில’ ராசிகள்! 

சிம்மம்: 

கேதுவின் ராசி மாற்றம் சிம்ம ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தை அதிகப்படுத்தும். பதவி, பணத்துடன் மரியாதையும் கிடைக்கும். இந்த காலத்தில் வாகனம், சொத்து வாங்கும் யோகம் உண்டாகும். இப்போது முதலடுகளை செய்யலாம். இப்போது செய்யப்படும் முதலீடுகளால் எதிர்காலத்தில் நல்ல லாபம் கிடைக்கும். சொத்துக்களால் லாபம் உண்டாகும். கடின உழைப்பின் முழு பலனையும் பெறுவீர்கள். உறவுமுறைகள் சிறப்பாக இருக்கும்.

தனுசு: 

கேது பெயர்ச்சி தனுசு ராசிக்காரர்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சியை நிரப்பும். இந்த ராசிக்காரர்களுக்கு மிகுந்த நன்மை உண்டாகும். பண வரவு அமோகமாக இருக்கும். தொழிலில் பெரிய வெற்றி கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். உறவினர்களுடனான புரிதல் தெளிவாக இருக்கும். ஆரோக்கியம் நன்றாக இருகும். 

மகரம்: 

மகர ராசிக்காரர்களுக்கு கேதுவின் சஞ்சாரம் பலமான பலன்களைத் தரும். பணம் பெற புதிய வழிகள் அமையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். வணிகத்தில் பெரிய ஆர்டர்களைப் பெற நல்ல வாய்ப்புகள் கூடி வரும். வருமானம் அதிகரிக்கும்.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | இன்றைய ராசி பலன்: தை வெள்ளிக்கிழமையின் அதிர்ஷ்ட ராசிகள் எவை! 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

More Stories

Trending News