புதன் பெயர்ச்சியால் எதிரிகளால் ஆபத்து! அலர்டாக இருக்க வேண்டிய ராசிக்காரர்கள்

வாய் வார்த்தைகளால் பிறரை எதிரியாக்குவதும், நட்பாக்குவதும் புதனின் வேலை. இன்னும் 4 நாட்களில் நடைபெறவிருக்கும் புதன் பெயர்ச்சியால் எதிரிகளை சம்பாதிக்கும் ராசிகள் யார் என்பதை தெரிந்துக் கொள்வோம்...  

Written by - Malathi Tamilselvan | Last Updated : Feb 3, 2023, 09:38 PM IST
  • வாயால் வம்பை விலைக்கு வாங்க வேண்டாம் 4 ராசிகளுக்கு அலர்ட்
  • புதன் பெயர்ச்சியின் பாதகமான பலன்கள்
  • பிப்ரவரி ஏழாம் தேதியன்று புதன் பெயர்ச்சி
புதன் பெயர்ச்சியால் எதிரிகளால் ஆபத்து! அலர்டாக இருக்க வேண்டிய ராசிக்காரர்கள்

புதன் பெயர்ச்சி கெடுபலன்கள்: கிரகப் பரிமாற்றங்கள் ஜோதிடத்தில் முக்கியமானவை. நமது அன்றாட வாழ்க்கையை பாதிக்கும் கிரகங்களின் சஞ்சாரம், எச்சரிக்கையையும் நமக்கு கொடுக்கிறது. கிரகங்களின் இளவரசரான புதன், 2023 பிப்ரவரியில் ராசி மாற்றம் அடைகிறார். புதன் அசுப கிரகங்களுடன் இணைந்தால் சாதகமற்ற பலன்களைத் தருகிறது, அதே போல் சுப கிரகங்களுடன் சுப பலன்களையும் தருகிறது. சனியும், புதனும் சம நிலையில் இருப்பதால், மகர ராசியில் புதன் சஞ்சரிப்பது நன்மை தரும் என்பது பொதுவான பலன்களாக இருக்கும். 

புதன் கிரகம், சனியின் வீடான மகர ராசியில் சஞ்சரிப்பது நமது புத்திசாலித்தனத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும். ஆனால் பகுத்தறியும் திறன்களை அதிகமாக்கும் என்று பொதுவாக சொல்லலாம்.

புதன் பெயர்ச்சியால் பாதகமான பலன்களை எதிர்கொள்ளவிருக்கும் ராசிகள்

புதன் கிரகம் பயங்கரமான நிலையில் இருந்தால், வாய் வார்த்தைகளால் பலரை எதிரியாக்கும் நிலை ஏற்படும். அதுவே, புதன் நல்ல நிலையில் இருந்தால், எதிரிகளையும் சாதமாக்கிக் கொள்ளலாம். இதுவே புதனின் தனித்துவமான அடையாளம் என்பதால், நட்பையும் எதிரியையும் நிர்ணயிப்பதில் புதன் முக்கிய பங்களிக்கிறார்வாயால் வம்பை விலைக்கு வாங்க வேண்டாம் 4 ராசிகளுக்கு அலர்ட் தேவை.

மேலும் படிக்க | பிப்ரவரி ராசி பலன்: ‘இந்த’ ராசிகளுக்கு மகாலட்சுமியின் பரிப்பூரண அருள் நிச்சயம்!

கன்னி

மகர ராசியில் புதன் சஞ்சாரம் செய்யும் போது, உங்கள் மனம் வழக்கத்தை விட அதிக அமைதியற்றதாக இருக்கும். மன உளைச்சலுக்கு ஆளாகலாம். எதையாவது பற்றிய உங்கள் எண்ணங்களில் தெரியாத பயம் எழலாம். இந்த காலகட்டத்தில் உங்கள் குழந்தைகளுடன் வாக்குவாதம் செய்வதைத் தவிர்க்கவும், ஏனெனில் இது பதற்றத்தை அதிகரிக்கும் மற்றும் சச்சரவுகளுக்கு வழிவகுக்கும்

விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு புதன் 8 மற்றும் 11 ஆம் வீடுகளை ஆட்சி செய்கிறார், மேலும் இது உங்கள் 3 வது வீட்டில் சஞ்சரிக்கும், மகர ராசியில் புதன் சஞ்சரிப்பதன் விளைவாக, இந்த நேரத்தில் எதிரிகளுடன் உங்களுக்கு பிரச்சினைகள் இருக்கும்.

எதிரிகள் உங்களுக்கு பிரச்சனைகளை ஏற்படுத்த தங்களால் இயன்ற அனைத்தையும் செய்வார்கள். அரசின் கொள்கைகளுக்கு எதிராக செயல்பட்டால், இந்தக் காலகட்டம் முழுவதும் உங்களுக்கு சவால்கள் மற்றும் கவலைகள் இருக்கும்.  

மேலும் படிக்க | இந்த வார கிரகப் பெயர்ச்சியில் மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டிய ராசி எது?

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு ஐந்தாம் மற்றும் எட்டாம் வீடுகளுக்கு அதிபதியான புதன் உங்கள் பன்னிரண்டாம் வீட்டில், அதாவது உங்களின் செலவு, நஷ்டம், வெளிநாடு, செலவுகள், மருத்துவமனை, சிறை போன்றவற்றில் சஞ்சரிப்பதால் இந்த நேரத்தில் உங்களுக்கு சிரமங்கள் ஏற்படலாம்.

சில உடல்நலப் பிரச்சினைகளால் தொந்தரவு ஏற்படலாம். உடல் ரீதியான பிரச்சனைகள், பார்வை பிரச்சனைகள் மற்றும் அதிகப்படியான சோர்வு என ஆரோக்கிய பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.  

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுபேற்காது.)

 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

More Stories

Trending News