இன்னும் 24 மணி நேரத்தில் புதன் பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு 'ஆஹா' பலன்கள்

Budh Gochar 2023: கிரகங்களின் அதிபதியான புதன் நாளை ஜூன் 7, 2023 அன்று இரவு 7.44 மணிக்கு ரிஷப ராசிக்குள் பெயர்ச்சி அடைகிறார். இது சில ராசிக்காரர்களுக்கு சுப பலன்களைத் தரப் போகிறது.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Jun 6, 2023, 03:59 PM IST
  • புதன் பெயர்ச்சி கன்னி ராசிக்காரர்களுக்கு ஒளிமையமாக இருக்கும்.
  • விருச்சிக ராசிக்காரர்களின் பணி விரைவில் வெற்றி பெறும்.
  • புதனின் பெயர்ச்சி மகர ராசிக்காரர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக அமையும்.
இன்னும் 24 மணி நேரத்தில் புதன் பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு 'ஆஹா' பலன்கள் title=

புதன் ராசி மாற்றம் 2023: ஜோதிடத்தில், புதனின் ராசியின் மாற்றம் மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது, ஏனெனில் இது செல்வம், புத்திசாலித்தனம், தொழில் மற்றும் பேச்சு ஆகியவற்றில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும். நாளை ஜூன் 7 ஆம் தேதி மாலை புதன் மேஷ ராசியிலிருந்து விலகி ரிஷபம் ராசிக்குள் இடப்பெயர்ச்சி அடைந்து ஜூன் 24 வரை ரிஷப ராசியில் தான் இருப்பார். இதன் மூலம் புதன் சில ராசிக்காரர்களை நேரடியாக தாக்குவார். மறுபுறம், புதன் பெயர்ச்சி சிலருக்கு மிகவும் சிறப்பாக இருக்கும்.

இந்த ராசிக்காரர்களுக்கு புதன் இடப்பெயர்ச்சி சுப பலன்களைத் தரும்

மேஷ ராசி
மேஷ ராசிக்காரர்களுக்கு புதன் பெயர்ச்சி மிகவும் நல்ல பலனைத் தரும். ரிஷப ராசியில் புதன் பெயர்ச்சி அடைவது பொருளாதார ரீதியாக வலுவாக இருக்கும். சமூகத்தில் மேஷ ராசிக்காரர்களின் மதிப்பு உயரும். திடீரென்று எங்கிருந்தாவது பண வரவு உண்டாகும். பேச்சாற்றலின் தைரியத்தால் அனைத்து கடினமான வேலைகலையும் முடிப்பீர்கள்.

மேலும் படிக்க | இவங்களையெல்லாம் சனி பகவானுக்கு பிடிக்கவே பிடிக்காது..! ஆனால் பரிகாரம் இருக்கு

ரிஷப ராசி
புதனின் ராசி மாற்றம் ரிஷப ராசிக்காரர்களுக்கு மன வலிமையை தரும். சமூகத்தில் ரிஷப ராசிக்காரர்களின் மதிப்பு உயரும். இந்த நேரத்தில் நீங்கள் சரியான முடிவை எடுப்பீர்கள், அது இந்த ராசிக்காரர்களுக்கு நலன் சார்ந்ததாக இருக்கும். அதேபோல் காதல் திருமணத்தில் வெற்றி உண்டாகும்.

கடக ராசி
கடக ராசிக்காரர்களுக்கு புதிய வேலையைத் தொடங்க இதுவே சரியான நேரம், இந்த நேரத்தில் கடக ராசிக்காரர்களுக்கு மிகவும் சிறப்பாக இருக்கும். மிகப்பெரிய வர்த்தக ஒப்பந்தத்தை முடிக்க முயற்ச்சி செய்வீர்கள். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்கும். வீட்டில் தற்செயலாக சில சுப காரியங்கள் நிகழும்.

கன்னி ராசி
புதன் பெயர்ச்சி கன்னி ராசிக்காரர்களுக்கு ஒளிமையமாக இருக்கும். இந்த நேரத்தில் கன்னி ராசிக்காரர்களின் வலிமை மற்றும் புத்திசாலித்தனத்தின் வலிமையால், நீங்கள் மிகவும் கடினமான சூழ்நிலையை சமாளிப்பீர்கள். பணியிடத்தில் கன்னி ராசிக்காரர்களின் பணிகள் பாராட்டப்படும். தர்மம் செய்தாள், நன்மை உண்டாகும்.

விருச்சிக ராசி
விருச்சிக ராசிக்காரர்களின் பணி விரைவில் வெற்றி பெறும். எந்த பெரிய வேலை அல்லது திட்டம் முடியும். இதன் காரணமாக நீங்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். திருமண நடக்க வாய்ப்புகள் அதிகம்.

மகர ராசி
புதனின் பெயர்ச்சி மகர ராசிக்காரர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக அமையும். எந்த ஒரு வேலையில் ஈடுபட்டாலும் அதில் வெற்றி கிடைக்கும். இந்த நேரத்தில் மகர ராசிக்காரர்களின் வருமானம் அதிகரிக்கும். பொருளாதார பிரச்சனைகள் அனைத்தும் நீங்கும். புதிய பணிகளும் தொடங்கப்பட்டும். துணையுடன் அன்பு அதிகரிக்கும்.

மீன ராசி
புதன் பெயர்ச்சியால் பாதகமான சூழ்நிலைகளையும் மீன ராசிக்காரர்களால் எளிதில் கட்டுப்படுத்த முடியும். பணிவும், பேச்சில் சாதுர்யமும் பெரிதும் பயன்படும். புதிய நபர்களுடன் பழகுவது நன்மைகளை தரும். சமூகப் பணிகளில் சுறுசுறுப்பாக ஈடுபடுவீர்கள், இதனால் மீன ராசிக்காரர்களின் நற்பெயரும் உயரும்.

மேலும் படிக்க | இன்றைய ராசிபலன் - இந்த 4 ராசிகளுக்கு ராஜயோகம்!

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News