புத்தாண்டில் கிரக மாற்றங்கள்: அனுகூலமான பலன்களை பெறப்போகும் ராசிகள் இவைதான்

New Year Horoscope: 2023 புத்தாண்டில் பல கிரகங்கள் தங்கள் ராசிகளையும், போக்கு மற்றும் நிலைகளையும் மாற்றவுள்ளன. எந்த கிரகத்தின் மாற்றத்தால், எந்த ராசிகளுக்கு எப்படிப்பட்ட தாக்கம் இருக்கும் என்பதை இந்த பதிவில் காணலாம். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Dec 23, 2022, 11:58 AM IST
  • ரிஷப ராசிக்காரர்களின் ஆரோக்கியம் மேம்படும்.
  • பண பலன்கள் கிடைக்கும்.
  • இது முதலீடு செய்ய நல்ல நேரமாக இருக்கும்.
புத்தாண்டில் கிரக மாற்றங்கள்: அனுகூலமான பலன்களை பெறப்போகும் ராசிகள் இவைதான் title=

புத்தாண்டில் கிரக பெயர்ச்சிகள், ராசிகளில் அதன் தாக்கம்: 2023 புத்தாண்டு இன்னும் சில நாட்களில் பிறக்கவுள்ளது. 2023 புத்தாண்டில் பல கிரகங்கள் தங்கள் ராசிகளையும், போக்கு மற்றும் நிலைகளையும் மாற்றவுள்ளன. ஆண்டின் துவக்கத்திலேயே சனி மற்றும் வியாழனின் ராசி மாறும். இதன் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும். பொதுவாக சனியும் ராகுவும் ராசி மாறும்போது அதன் பலன் அதிகமாக இருக்கும். ராகு-கேது 18 மாதங்களுக்குப் பிறகும், சனி இரண்டரை வருடங்களுக்குப் பிறகும், வியாழன் 12 மாதங்களுக்குப் பிறகும் ராசி மாறுகிறார்கள். எந்த கிரகத்தின் மாற்றத்தால், எந்த ராசிகளுக்கு எப்படிப்பட்ட தாக்கம் இருக்கும் என்பதை இந்த பதிவில் காணலாம். 

எந்த கிரகம் எப்போது தன் நிலை / பாதையை மாற்றும்? 

-  ஜனவரி 17ம் தேதி சனி பகவான் தனது ராசியை மாற்றுவார்.

- 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம், வியாழன் மேஷ ராசியில் நுழையும்.

- அக்டோபரில் ராகு மீன ராசியில் பிரவேசிப்பார். 

- கேது அக்டோபர் 30 ஆம் தேதி கன்னி ராசிக்கு செல்கிறார்.

குரு பெயர்ச்சியால் யாருக்கு லாபம்

மேஷம், துலாம், கடகம், கன்னி, மீனம் ஆகிய ராசிகளுக்கு குரு பெயர்ச்சி சாதகமாக இருக்கும். 

- மேஷ ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் அதிகரிக்கும், புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும். 

- துலாம் ராசிக்காரர்களுக்கு புதிய வருமானம் கிடைக்கும். தொழிலதிபர்கள் ஆதாயமடைவார்கள். அவர்களுக்கு இந்த காலம் சாதகமாக இருக்கும். 

- கடக ராசிக்காரர்களும் அதிர்ஷ்டத்தின் ஆதரவைப் பெறுவார்கள். அவர்களுக்கு புதிய வருமானங்கள் உருவாகி சமூகத்தில் மரியாதை அதிகரிக்கும். 

- கன்னி ராசிக்காரர்கள் அனைத்திலும் வெற்றி பெறுவார்கள். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். பண வரவு நன்மை தரும் வகையில் இருக்கும். 

- மீன ராசிக்காரர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும். அலுவலகத்தில் புதிய பொறுப்பும் கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் உண்டாகும்.

மேலும் படிக்க | புத்தாண்டு ராசிபலன்: இந்த ராசிளுக்கு ராஜயோகம், நினைத்தது நடக்கும், கேட்டது கிடைக்கும்

சனிப் பெயர்ச்சியால் யாருக்கு லாபம்? 

ரிஷபம், மிதுனம், துலாம், தனுசு ராசிக்காரர்களுக்கு சனிப்பெயர்ச்சியால் பலன் கிடைக்கும். 

- ரிஷப ராசிக்காரர்களுக்கு குறைந்த உழைப்பிலேயே அதிக பலன் கிடைக்கும். அதிர்ஷ்டம் தவிர, பயண வாய்ப்புகளும் இவர்களுக்கு அமையும். பழைய பிரச்சனைகள் நீங்கும். 

- மிதுன ராசிக்காரர்களுக்கு ஏழரை நாட்டு சனியிலிருந்து நிவாரணம் கிடைக்கும். உத்தியோகத்தில் பதவி உயர்வு பெறலாம். நீண்ட நாட்களாக வாட்டி வதைத்த நோயிலிருந்து விடுபடுவீர்கள். 

- துலாம் ராசிக்காரர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். மரியாதை அதிகரிக்கும். தடைபட்ட வேலைகளும் இப்போது வெற்றிகரமாக நடந்துமுடியும். ஏழரை நாட்டு சனியின் தாக்கத்திலிருந்து நிவாரணம் கிடைக்கும். 

- சனிப்பெயர்ச்சியால் தனுசு ராசிக்காரர்களுக்கு பண லாபம் உண்டாகும். காலம் சாதகமாக இருக்கும், தடைபட்ட வேலைகள் முடிவடையும்.

ராகு சஞ்சாரம் யாருக்கு லாபகரமாக இருக்கும்?

ரிஷபம், துலாம், மகரம் ராசிக்காரர்களுக்கு ராகு சஞ்சாரத்தால் நன்மை உண்டாகும். 

- ரிஷப ராசிக்காரர்கள் நண்பர்கள் மற்றும் சகோதரர்களின் உதவியைப் பெறுவார்கள். பங்குச் சந்தையில் வேலை செய்பவர்களுக்கு லாபம் கிடைக்கும். பயணங்களால் ஆதாயம் உண்டாகும். 

- துலாம் ராசிக்காரர்களுக்கு ராகு பெயர்ச்சி அளப்பரிய பலன்களைத் தரும். உங்களுக்கு பெரிய வேலை வாய்ப்பு கிடைக்கும். நீங்கள் சில பெரிய பொறுப்புகளை பெறலாம். வெளிநாடு செல்லும் கனவும் நிறைவேறும். சர்ச்சைகளில் இருந்து விலகி இருங்கள். 

- மகர ராசிக்காரர்கள் லாபம் அடைவார்கள். நீண்ட நாட்களாக நடக்காமல் இருந்த அனைத்து வேலைகளும் வெற்றிகரமாக முடிவடையும். மனைவியின் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள்.

கேது சஞ்சாரத்தால் யாருடைய அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்?

ரிஷபம், சிம்மம், தனுசு, மகரம் ராசிக்காரர்கள் கேது சஞ்சாரத்தால் நன்மை அடைவார்கள். 

- ரிஷப ராசிக்காரர்களின் ஆரோக்கியம் மேம்படும். பண பலன்கள் கிடைக்கும். இது முதலீடு செய்ய நல்ல நேரமாக இருக்கும். கூட்டுத் தொழிலில் லாபம் உண்டாகும். 

- சிம்ம ராசிக்காரர்களின் குடும்ப உறவுகள் மேம்படும். கடின உழைப்பு தொழிலில் வெற்றியைத் தரும். இது முதலீட்டுக்கு நல்ல நேரம். அலுவலகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். 

- தனுசு ராசிக்காரர்களின் தொழில் வாழ்க்கைக்கு இந்தப் பெயர்ச்சி மிகவும் சிறப்பாக இருக்கும். பழைய நோயிலிருந்து விடுபடுவதோடு, வியாபாரத்தில் அதிக லாபம் கிடைக்கும். 

- மகர ராசிக்காரர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட மூலங்களிலிருந்து பணம் ஈட்டுவார்கள். நண்பர்களுடன் நல்லுறவு இருக்கும். அலுவலகத்தில் பல பெரிய சாதனைகளை செய்து நல்ல பெயரை பெறுவார்கள். 

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் உள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | குரு பெயர்ச்சி 2023: கஜலட்சுமி ராஜயோகத்தால் இந்த ராசிகளின் வாழ்க்கை மாறும், செல்வம் பெருகும்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News