புத்தாண்டு ராசிபலன்: இந்த ராசிளுக்கு ராஜயோகம், நினைத்தது நடக்கும், கேட்டது கிடைக்கும்

New Year Horoscope: சில குறிப்பிட்ட ராசிகளுக்கு இந்த ஆண்டு பல வித நல்ல பலன்களை அள்ளிக்கொடுக்கவுள்ளது. அந்த அதிர்ஷ்டக்கார ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Dec 22, 2022, 04:59 PM IST
  • 2023ஆம் ஆண்டுக்கான அதிர்ஷ்ட ராசிகளின் பட்டியலில் விருச்சிக ராசியின் பெயரும் இடம்பெற்றுள்ளது.
  • 2023 புத்தாண்டு இந்த ராசிக்காரர்களுக்கு மிகவும் சிறப்பானதாக இருக்கும்.
  • வருடாந்தர ஜாதகப்படி இந்த ராசியை சேர்ந்தவர்கள் வேலை, வியாபாரம் போன்றவற்றில் பண பலன்களைப் பெறுவார்கள்.
புத்தாண்டு ராசிபலன்: இந்த ராசிளுக்கு ராஜயோகம், நினைத்தது நடக்கும், கேட்டது கிடைக்கும்  title=

புத்தாண்டு ராசிபலன்: இன்னும் சில நாட்களில் புத்தாண்டு பிறக்கவுள்ளது. வரவிருக்கும் ஆண்டு தங்களுக்கு மகிழ்ச்சியும் அமைதியும் நிறைந்ததாக இருக்க வேண்டும் என்று அனைவரும் விரும்புகிறார்கள். உடல் நலம், பொருளாதாரம், வேலை, வியாபாரம், குடும்பம், கல்வி என அனைத்திலும் அதிகப்படியான முன்னேற்றம் இருக்க வேண்டும் என எதிர்பார்க்கிறார்கள். எதிர்பார்ப்பு ஒரு புறம் இருக்க, வரவிருக்கும் ஆண்டு தங்களுக்கு எப்படி இருக்கும் என்பதை ஜோதிட ரீதியாக தெரிந்துகொள்ளும் ஆர்வமும் அனைவருக்கும் உள்ளது. 

2023 ஆம் ஆண்டில் பல கிரக மாற்றங்கள் நிகழவுள்ளன. இவற்றின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும். எனினும், சில குறிப்பிட்ட ராசிகளுக்கு இந்த ஆண்டு பல வித நல்ல பலன்களை அள்ளிக்கொடுக்கவுள்ளது. அந்த அதிர்ஷ்டக்கார ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம். 

மிதுனம்

ஜோதிட சாஸ்திரத்தின் படி, வரும் புத்தாண்டு மிதுன ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமாக கருதப்படுகிறது. இந்த ராசிக்காரர்கள் புத்தாண்டில் தங்கள் இலக்கை அடைவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. இத்துடன் இவர்கள் பணிபுரியும் துறையிலும் முன்னேற்றம் பெறலாம். மிதுன ராசிக்காரர்கள் வருமானத் துறையிலும் வெற்றி பெறுவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. வரும் ஆண்டு வணிகம் மற்றும் காதல் துறையில் நம்பிக்கைக்குரியதாக இருக்கும்.

மேலும் படிக்க | குரு பெயர்ச்சி 2023: கஜலட்சுமி ராஜயோகத்தால் இந்த ராசிகளின் வாழ்க்கை மாறும், செல்வம் பெருகும்

சிம்மம் 

வருடாந்திர ஜாதகப்படி சிம்ம ராசிக்காரர்களுக்கு வரும் வருடம் மகிழ்ச்சி நிறைந்ததாக இருக்கும். இடையில் சில சிறிய ஏற்ற இறக்கங்களைக் காணலாம். இந்த ராசிக்காரர்கள் தங்கள் வேலையில் தவறுகளின் எண்ணிக்கையை குறைத்துக்கொண்டால் நல்ல பெயர் வாங்குவதற்கான யோகம் உள்ளது. அதன் பின்னர் பணியிடத்தில் முன்னேற்றம் மற்றும் பாராட்டு இரண்டையும் பெறுவார்கள். சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த ஆண்டு கடின உழைப்புக்கு ஏற்ற பலன்கள் கிடைக்கும். வியாபாரத்தில் அபரிமிதமான முன்னேற்றத்தைக் காணலாம்.

துலாம்

வருடாந்திர ஜாதகப்படி துலா ராசிக்காரர்களுக்கு 2023-ம் ஆண்டு மங்களகரமானதாக இருக்கும். புதிய ஆண்டில் இவர்கள் பல்வேறு துறைகளிலும் வெற்றி பெறுவார்கள். வருமானத்தில் அதிகமான ஏற்றம் இருக்கும். வரும் ஆண்டில், இந்த ராசிக்காரர்கள் பல புதிய வாய்ப்புகளைப் பெறலாம். இதனால் நிதி நிலை மேம்படும். வேலை தேடுபவர்களுக்கு புதிய வேலை வாய்ப்பு கிடைக்கும். ஏற்கனவே பணியில் உள்ளவர்களுக்கு பதவி உயர்வு, ஊதிய உயர்வு கிடைக்கும். வியாபாரத்தில் வருமானம் சாதகமாக இருக்கும். இதனால் மனம் மகிழ்ச்சியாக இருக்கும்.
 
விருச்சிகம்

2023ஆம் ஆண்டுக்கான அதிர்ஷ்ட ராசிகளின் பட்டியலில் விருச்சிக ராசியின் பெயரும் இடம்பெற்றுள்ளது. 2023 புத்தாண்டு இந்த ராசிக்காரர்களுக்கு மிகவும் சிறப்பானதாக இருக்கும். வருடாந்தர ஜாதகப்படி இந்த ராசியை சேர்ந்தவர்கள் வேலை, வியாபாரம் போன்றவற்றில் பண பலன்களைப் பெறுவார்கள். இந்த ஆண்டு வெளியூர் பயணம் மேற்கொள்ளும் வாய்ப்புகள் உள்ள. இந்த பயணங்களால் சாதகமான பலன்கள் ஏற்படும். புதிய வீடு, நிலம் வாங்கும் யோகம் உண்டாகும். புதிய வாகனக் கனவும் புத்தாண்டில் நிறைவேறும்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | சுக்கிரன் அருளால் புத்தாண்டின் ஆரம்பமே இந்த ராசிகளுக்கு அட்டகாசமாய் இருக்கும்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News