சுக்கிரன் பெயர்ச்சி ஏப்ரல் 24: இந்த ராசிகளுக்கு அமர்க்களமான வாழ்க்கை, ராஜயோகம் ஆரம்பம்

Venus Transit 2024 in Tamil: செல்வம், செழிப்பு மற்றும் ஆடம்பர வழக்கையை அளித் தரும் சுக்கிரன் தனது ராசியை மாற்றி தற்போது மேஷ ராசியில் பெயர்ச்சி அடையப் போகிறார். சுக்கிரனின் பெயர்ச்சி சில ராசிக்காரர்களின் வாழ்வில் மகிழ்ச்சியையும் செழிப்பையும் தரக்கூடும்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Apr 18, 2024, 05:47 PM IST
  • புதிய கார் வாங்கும் திட்டம் வெற்றியடையலாம்.
  • நிலுவையில் இருந்து வந்த பணிகள் அனைத்தும் இப்போது நிறைவேறும்.
  • திருமணம் நிச்சயிக்கப்படலாம்.
சுக்கிரன் பெயர்ச்சி ஏப்ரல் 24: இந்த ராசிகளுக்கு அமர்க்களமான வாழ்க்கை, ராஜயோகம் ஆரம்பம் title=

Venus Transit 2024 in Tamil: காதல், செல்வம் மற்றும் பொருள் வசதிகளை அள்ளித் தரும் சுக்கிரனின் ராசி மாற்றம் மிகவும் சிறப்பு வாய்ந்த ஜோதிட நிகழ்வாகும். ஏனெனில் சுக்கிரனின் பெயர்ச்சி அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும். அந்த வகையில் வருகிற ஏப்ரல் 24 ஆம் தேதி சுக்கிரன் பெயர்ச்சி நடக்கப் போகிறது. இந்நாளில் சுக்கிரன் பெயர்ச்சி அடைவது இன்னும் சிறப்பு வாய்ந்த நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது. எனவே மேஷ ராசியில் சுக்கிரனின் பெயர்ச்சியால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு செல்வ செழிப்பை தரும் என்பதை தெரிந்து கொள்வோம்.

இந்த ராசிக்காரர்களுக்கு சுக்கிரன் பெயர்ச்சி சாதகமான பலனைத் தரும்:

கடகம் (Cancer Zodiac Sign): கடக ராசிக்காரர்களுக்கு சுக்கிரனின் பெயர்ச்சி வரப்பிரசாதமாக அமையும். இந்த ராசிக்காரர்களுக்கு வேலையில் பதவி உயர்வு கிடைக்கலாம். உங்கள் வருமானம் அதிகரிக்கும். புகழும் உயரும். வியாபாரம் செய்பவர்களும் நல்ல முன்னேற்றம் ஏற்படலாம். புதிய கார் வாங்கும் திட்டம் வெற்றியடையலாம். வெளிநாட்டில் வேலை செய்ய விரும்புபவர்களின் கனவு இந்த நேரத்தில் நிறைவேறும்.

மேலும் படிக்க | சனியின் மிகப்பெரிய மாற்றம்: இந்த ராசிகளுக்கு அள்ளிக்கொடுப்பார் சனி, வாங்கிக்க தயாரா இருங்க!!

சிம்மம் (Leo Zodiac Sign): சுக்கிரனின் ராசி மாற்றம் / பெயர்ச்சியால் சிம்ம ராசிக்காரர்களுக்கு வாழ்வில் பெரும் வெற்றியையும் புகழையும் அடையப் போகிறார்கள். சிம்ம ராசிக்காரர்களுக்கு புதிய வேலை வாய்ப்பு கிடைக்கலாம். பணியிடத்தில் உங்களது முடிவுகள் பெரிய அளவில் மதிக்கப்படும். உங்களின் புகழ் உயரும். சில பொன்னான வாய்ப்புகளையும் நீங்கள் பெறலாம். அரசு தரப்பில் இருந்து நிலுவையில் இருந்து வந்த பணிகள் அனைத்தும் இப்போது நிறைவேறும். சில சுப தகவல்கள் பெறலாம். வழிபாட்டில் ஆர்வம் அதிகரிக்கும்.

துலாம் (Libra Zodiac Sign): துலாம் ராசியில் அதிபதி சுக்கிரன் என்பதால் துலாம் ராசிக்காரர்களுக்கு சுக்கிரன் பெயர்ச்சி சிறப்பான பலனைத் தரும். அரசு வேலை வாய்ப்பபை பெறலாம். இந்த ராசிக்காரர்களுக்கு அனைத்திலும் வெற்றி கிடைக்கும். போட்டித் தேர்வுகள் மற்றும் நேர்காணல்களில் விரும்பிய முடிவுகளைப் பெறுவீர்கள். எனவே முயற்சியை நிறுத்தாமல் செயல்படவும். திருமணம் நிச்சயிக்கப்படலாம்.

தனுசு (Sagittarius Zodiac Sign): தனுசு ராசிக்காரர்களுக்கு சுக்கிரனின் பெயற்சியால் மகத்தான வெற்றி கிடைக்கும். நீங்கள் பெரிய அளவில் சாதனைகளை செய்து முடிக்கலாம். வேலை செய்யும் இடத்தில் மேலதிகாரிகளின் ஆதரவைப் பெறுவீர்கள். புதிய வேலைகளைத் தொடங்கலாம். காதல் திருமணம் செய்ய விரும்புபவர்களின் ஆசை இந்த நேரத்தில் நிறைவேறும். 

மகரம் (Capricorn Zodiac Sign): சுக்கிரனின் பெயர்ச்சி மகரம் ராசிக்காரர்களுக்கு நல்ல செய்தியை அளிக்கும். பெரிய அளவில் சொத்து வாங்கலாம் அல்லது புதிய கார் வாங்கலாம். சொத்து சம்பந்தமான தகராறு ஏதேனும் இருந்தால், இந்த நேரத்தில் தீர்வு பெறுவீர்கள். தொழிலில் லாபத்தை பெறுவீர்கள். அரசியலில் ஏற்றம் காணலாம்.

(பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், உள்ளடக்கம், கணிப்பு ஆகியவற்றின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. இந்தத் தகவல் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ஜீ நியூஸ் - Zee News இதற்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | மே 1 முதல் குரு பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு பணம், புகழ், ராஜாதி ராஜ வாழ்க்கை

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News