குரு கொடுப்பதை யாரால் தடுக்க முடியும்? ஓராண்டுக்கு பணமழையில் நனையும் 3 ராசிகள்

Jupiter Transit 2022: அடுத்த ஓராண்டுக்கு பணப்புயலில் தள்ளாடி உச்சத்தை தொடப்போகும் 3 ராசிகள்! நீங்களும் அந்த மூவரில் ஒருவரா? 

Written by - Malathi Tamilselvan | Last Updated : Jul 20, 2022, 07:38 AM IST
  • குரு பார்க்க கோடி நன்மை என்பதை நிரூபிக்கும் ரிஷப ராசி
  • பண ஆதாயத்தில் திளைக்கும் ரிஷபம்
  • பதவி உயர்வு, ஊதிய உயர்வால் பிரபலமாகும் ராசியான ராசிகள்
குரு கொடுப்பதை யாரால் தடுக்க முடியும்? ஓராண்டுக்கு பணமழையில் நனையும் 3 ராசிகள் title=

குரு பெயர்ச்சியால் பண பலன்களை அனுபவிக்கும் ராசிகள்: ஜோதிட சாஸ்திரத்தின்படி, குருவின் பெயர்ச்சி திருமண வாழ்க்கை, பொருளாதாரம், அதிர்ஷ்டம் ஆகியவற்றில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது. 2022 ஏப்ரலில் மீன ராசியில் பிரவேசித்த குரு பகவான் ள்ளதால் 3 ராசிக்காரர்களுக்கு மகத்தான பணபலன்களை அள்ளிக் கொடுத்துக் கொண்டிருக்கிறா. சுப கிரமான குருவின் அருட்கடாட்சத்தால் வாழ்வில் வசந்தத்தை அனுபவிக்கும் மூன்று ராசிக்காரர்களில் நீங்களும் ஒருவரா?  

ஓராண்டு காலத்தில் தொழிலில் வெற்றி, வேலையில் முன்னேற்றம், சொத்து சேர்க்கை என கொடி கட்டி பறக்கும் வாய்ப்பு கிடைத்த மூன்று ராசிகள்:

ரிஷபம்: குருவின் ராசி மாற்றத்தால், ரிஷபம் ராசிக்காரர்களின் வாழ்க்கையில் பிரகாசம் ஏற்பட்டிருந்தாலும், இன்னும் ஒரு வருடத்தில் தற்போது இருப்பதை விட பல மடங்கு மகிழ்ச்சியையும் செல்வத்தையும் ரிஷப ராசிக்காரர்கள் பெறுவார்கள். குருவின் சுப பலன்கள் தொடர்ந்துஅதிகரிக்கும்.

மேலும் படிக்க | ராசிக்கு ஆறில் சனி இருந்தால் கடன்களை அதிகரிக்கும் வர்கோத்தம யோகம்

வருமானம் அதிகரிக்கும். பணவரவு சாதகமாக இருக்கும். நிலுவையில் உள்ள பணங்கள் வந்து சேரும். தொழிலில் வெற்றி, வர்த்தகத்தில் வெற்றி கிடைப்பதால், செய்யும் வேலையின் விதமும் மேம்படும். சமூகத்தில் மரியாதை அதிகரிக்கும். ஜோதிடரின் ஆலோசனையைப் பெற்று, உங்களுக்கு உகந்ததாக இருந்தால் வைரத்தை அணியவும். வைரம் உங்களின் வாழ்க்கையில் நல்ல பலன்களை ஏற்படுத்திக் கொடுக்கலாம்.  

மிதுனம்: மிதுன ராசிக்காரர்களுக்கு மிகவும் சாதகமாக அமைந்த குருவின் பெயர்ச்சியால், வேலையில் வெற்றி கிடைக்கும். புதிய வேலை கிடைக்கலாம். பதவி உயர்வு, சம்பளத்தில் உயர்வு என வேலையில் உயர்வு கிடைக்கும் காலம் இது. இடமாற்றம் ஏற்படலாம். வியாபாரிகளின் தொடர்புகள் அதிகரிக்கும். வியாபாரம் விரிவடையும். நிபுணரின் ஆலோசனையுடன் மரகதம் மற்றும் புஷ்பராகம் அணியலாம். இது உங்கள் அதிர்ஷ்டத்தை மேலும் அதிகரிக்கலாம்.

மேலும் படிக்க | ஜூலை 24 வரை இந்த ராசிகளுக்கு லட்சுமி தேவியின் சிறப்பு அருள் கிடைக்கும் 

கடகம்: மீன ராசியில் நுழைந்த வியாழ பகவான், கடக ராசிக்காரர்களுக்கு சுபமான பலன்களை வழங்கிக் கொண்டிருக்கிறார். அதிர்ஷ்டத்தின் ஆதரவைக் கொடுக்கும் குரு பகவான், வேலையில் வெற்றிகளைக் கொடுத்துக் கொண்டிருக்கிறார். ஆனால், வேலைக்காக அதிக நேரத்தை செலவிட வேண்டியிருக்கும்.

நிலுவையில் இருந்த சொத்து சம்பந்தமான விவகாரம் இப்போது தீரும். வியாபாரிகள் லாபம் அடைவார்கள். பயணங்கள் அதிகரிக்கும். பயணங்களால் நன்மை உண்டாகும். உணவு வியாபாரம் செய்பவர்களுக்கு கோலகலமான காலம் இது.  

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | செவ்வாய் பெயர்ச்சி: ஆகஸ்ட் 10 வரை இந்த 3 ராசிகளுக்கு பொற்காலம் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News