ஆடி மாதம் தமிழ் மாதங்களில் மிகவும் முக்கியமான மாதமாக கருதப்படுகின்றது. அம்மனுக்கு ஏற்ற மாதமான இந்த மாதத்தில், அம்மன் வழிபாடு சிறப்பாக கருதப்படுகிறது. வட மாநிலங்களில் இது சாவன் என்று அழைக்கப்படுகிறது. இந்த மாதம் வட மாநிலங்களில் சிவனுக்கு ஏற்ற மாதமாக கருதப்படுகின்றது. ஆடி மாதம் நமது பண்டிகைகளின் துவக்கத்தை குறிக்கின்றது. குறிப்பாக ஆடி மாதத்தில் வரும் வெள்ளிக்கிழமைகளில் அம்மன் வழிபாடும், சனிக்கிழமைகளின் சனி பகவானின் வழிபாடும் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகின்றது. எனினும், ஆடி மாத சனிக்கிழமைகளில் செய்யப்படும் சனி வழிபாட்டுக்கு மிகச்சிறந்த பலன்கள் கிடைக்கும் என்றும் கூறப்படுகின்றது. ஜோதிடர்களின் கூற்றுப்படி, இந்த ஆண்டு ஆடி மாதம் ஐந்து ராசிக்கார்ரகளுக்கு சிறப்பு வாய்ந்ததாக இருக்கும்.
தற்போது சனி பகவான் மகர ராசியில் உள்ளார். இதன் காரணமாக கும்பம், மகரம், தனுசு ராசிக்காரர்களுக்கு ஏழரை மாட்டு சனி நடக்கிறது. மிதுனம் மற்றும் துலாம் ராசிக்காரர்களுக்கு சனி தசையின் தாக்கம் உள்ளது. ஆடி மாதத்தில் சனி தோஷம் உள்ளவர்களும் சிவபெருமானை வழிபட வேண்டும். சாஸ்திரங்களின்படி, ஆடி மாதத்தில் சிவபெருமானை வழிபட்டால் சனி தோஷம் குறையும்.
ஆடி மாத சனிக்கிழமைகளில் சிவ பகவான் மற்றும் சனி பகவானின் பூஜைகளை செய்வது சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகின்றது. ஜோதிடர்களின் கூற்றுப்படி, சனி பகவான் சிவபெருமானின் மிகச்சிறந்த பக்தராகவும் சீடராகவும் கருதப்படுகிறார். ஆகையால் சிவன் மற்றும் சனி பகவானின் ஆசீர்வாதத்தைப் பெற ஆடி மாத சனிக்கிழமைகள் சிறந்த நாட்களாக கருதப்படுகின்றன. ஆடி மாத சனிக்கிழமைகளில் சனி பகவானுக்கு பிடித்தமான பணிகளை செய்வதால், சனி பகவான் மற்றும் சிவபெருமான் இருவரும் மகிழ்ச்சியடைந்து பக்தர்களுக்கு தங்கள் ஆசீர்வாதங்களை வழங்குவதாக நம்பப்படுகிறது.
மேலும் படிக்க | குரு வக்ர பெயர்ச்சி: ஜூலை 29 முதல் இந்த 4 ராசிக்காரர்களின் தலைவிதி மாறும்
இந்த ராசிக்கார்ரகளுக்கு சாதகமான நேரம்
கும்பம், மகரம், தனுசு, மிதுனம், துலாம் ராசிக்காரர்களுக்கு ஆடி மாத சனிக்கிழமைகள் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகின்றன. ஆடி மாதத்தில் வரும் சனிக்கிழமைகளில் சனி பகவானின் கோவிலுக்குச் சென்று நல்லெண்ணெய் தீபம் ஏற்ற வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் சிவபெருமான் மற்றும் சனிபகவான் அருளால் துன்பங்களில் இருந்து விடுபடலாம் என்பது நம்பிக்கை. சனி பகவானையும் சிவபெருமானையும் மகிழ்விக்க சனிக்கிழமையன்று சனி சாலிசாவை படிக்கலாம். இவ்வாறு செய்வதால் சனி தோஷத்தில் இருந்து விடுதலை கிடைக்கும் என்பது நம்பிக்கை.
இந்த ராசிகள் சிவ பெருமானை துதிக்க வேண்டும்
ஆடி மாத சனிக்கிழமைகளில் கும்பம், மகரம், துலாம், மிதுனம், தனுசு ராசிக்காரர்கள் சிவபெருமானை வழிபட வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் சனி தோஷத்தின் தாக்கம் குறைந்து அதிர்ஷ்டம் பிறக்கும் என்பது நம்பிக்கை. ஆடி மாத சனிக்கிழமைகளில் சாத்வீக உணவுகளை செய்து சிவ பெருமானுக்கு படைக்கலாம். இதன் மூலம் நல்ல பலன்கள் கிடைக்கும்.
மத நம்பிக்கைகளின்படி, சனிக்கிழமையன்று இரும்பு அல்லது இரும்பினால் செய்யப்பட்ட பொருட்களை வாங்கக்கூடாது. இந்த நாளில் இரும்பினால் செய்யப்பட்ட பொருட்களை தானம் செய்வது மங்களகரமானதாக கருதப்படுகிறது.
மேலும் படிக்க | புதனின் ராசி மாற்றத்தால் கடகத்தில் உருவாகும் ராஜயோகம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ