கும்ப ராசியில் சனி பகவான்; 4 ராசிகளுக்கு சோதனை காலம் தொடங்கப்போகிறது

Shani Asta 2023: ஜோதிடத்தின் படி, சனி பகவான் முழுமையாக கும்பத்தில் அமர்ந்துள்ளார். இதனால் 4 ராசிக்காரர்களுக்கு கஷ்டங்கள் அதிகரிக்கும்.

Written by - S.Karthikeyan | Last Updated : Mar 11, 2023, 12:52 PM IST
கும்ப ராசியில் சனி பகவான்; 4 ராசிகளுக்கு சோதனை காலம் தொடங்கப்போகிறது title=

சனி முழுவதுமாக கும்ப ராசிக்கு வந்துவிட்டார். இதனால், 4 ராசிகளுக்கு சோதனை காலம் அமையப்போகிறது என்பதால் கவனமாக இருக்க வேண்டும். 

மிதுனம்

சனி கும்பத்தில் முழுவதுமாக அமைவது தீங்கு விளைவிக்கும். ஏனெனில் சனிபகவான் மிதுன ராசியில் ஒன்பதாம் அதிபதியாகவும் எட்டாம் அதிபதியாகவும் இருக்கிறார். தந்தை மற்றும் உங்கள் ஆரோக்கியத்தின் காரணிகள் இவை. மருத்துவ செலவு இருக்கும். மேலும், இந்த நேரத்தில் வாகனத்தை கவனமாக இயக்கவும். ஏனெனில் விபத்துக்கான வாய்ப்புகள் உருவாகும்.

கடகம் 

சனி கும்பத்தில் முழுமையான அமைவு கடக ராசிக்காரர்களுக்கு சாதகமற்றதாக இருக்கும். ஏனெனில் சனி உங்கள் ஏழாம் மற்றும் எட்டாம் அதிபதி. மனைவியின் ஆரோக்கியத்தில் நீங்கள் கவனம் செலுத்த வேண்டும். புதிய முதலீடுகளைத் தவிர்க்கவும், இல்லையெனில் நஷ்டம் ஏற்படலாம்.

மேலும் படிக்க | 4 நாட்களில் 'எதிரி கிரகங்களின்' கூட்டணி முடிகிறது! சனி பகவானின் ஆசி இனி உங்களுக்கே

மகரம்

சனி உங்கள் லக்னத்தின் அதிபதி. அதனால் தான் இந்த நேரத்தில் காய்ச்சல் வரலாம். அதே சமயம் வாழ்க்கைத்துணையுடன் ஏதோ ஒரு விஷயத்தில் மனஸ்தாபம் ஏற்படலாம். மறுபுறம், நீங்கள் ஒரு தொழிலதிபராக இருந்தால், இந்த காலகட்டத்தில் உங்கள் வணிகம் மெதுவாக இருக்கும்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு ஆரோக்கியத்தைப் பொருத்தவரை சாதகமற்றது. ஏனெனில் சனிபகவான் உங்கள் ராசிக்கு அதிபதியாகவும், 12 ஆம் வீட்டிற்கு அதிபதியாகவும் இருக்கிறார். அதனால் தான் இந்த நேரத்தில் உங்கள் மீது பொய் வழக்கு போடலாம். தொண்டை மற்றும் வாயில் சில பிரச்சனைகள் இருக்கலாம். உடலில் பல தொற்றுகள் ஏற்படும்.

மேலும் படிக்க | Shani Uday: பாவம் போனா போகுது என சனீஸ்வரர் கண்டு கொள்ளாத ராசிகள் எவை தெரியுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News