சிம்மத்தில் கூட்டணி சேரும் செவ்வாய் - சுக்கிரன்... லாபத்தை அள்ளப்போகும் இந்த 3 ராசிகள்

Mars Venus Transit In Leo: சிம்ம ராசியில் செவ்வாய் பெயர்ச்சியை அடுத்து, இன்று சுக்கிரன் பெயர்ச்சியடைய இருப்பதால், இந்த மூன்று ராசிக்காரர்கள் சுப பலன்களை பெறுவார்கள். 

Written by - Sudharsan G | Last Updated : Jul 7, 2023, 06:32 AM IST
  • கடந்த ஜூலை 1ஆம் தேதி செவ்வாய் சிம்மத்தில் நுழைந்தார்.
  • இரு கிரகங்கள் இணைவது சுப மற்றும் அசுப பலன்களை ஏற்படுத்தும்.
  • இந்த மூன்று ராசிகளும் தொழில் மற்றும் வேலை வாய்ப்புகளில் முன்னேற்றம் ஏற்படும்.
சிம்மத்தில் கூட்டணி சேரும் செவ்வாய் - சுக்கிரன்... லாபத்தை அள்ளப்போகும் இந்த 3 ராசிகள் title=

Mars Venus Transit In Leo: ஜோதிடத்தில் கிரகங்களின் பெயர்ச்சி மிகவும் முக்கியமானது. வேறு எந்த கிரகத்துடனும் மற்றொரு கிரகம் இணைவது மனித வாழ்வில் சுப அல்லது அசுப விளைவுகளை ஏற்படுத்துகிறது. இந்த மாதத்திலேயே இரண்டு பெரிய கிரகங்களுக்கு இடையே இதே போன்ற கூட்டணி தோன்ற போகிறது. இந்த கிரகங்கள் செவ்வாய் மற்றும் சுக்கிரன் ஆகும். 

இதன் கூட்டணி சிம்மத்தில் இருக்கும். கடந்த ஜூலை 1ஆம் தேதி அன்று, செவ்வாய் சிம்ம ராசிக்குள் நுழைந்தது. ஜூலை 7ஆம் தேதி அதாவது இன்று சுக்கிரன் சிம்மத்தில் சஞ்சரிக்கிறார். இப்படிப்பட்ட நிலையில் சிம்ம ராசியில் இரண்டு கிரகங்களும் இணைந்து அமைவதால், மூன்று ராசிக்காரர்கள் மிகவும் சுப பலன்களைப் பெறுவார்கள். இந்த அதிர்ஷ்ட ராசிகள் என்னென்ன பலன்களை பெறுவார்கள் என்பதை இதில் தெரிந்து கொள்ளலாம்.

முன்னதாக, செவ்வாய் கிரகம் மிகவும் சக்திவாய்ந்த கிரகமாக கருதப்படுகிறது. அனைத்து கிரகங்களை போலவே செவ்வாய் கிரகத்தின் மாற்றமும் அனைத்து ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். அத்தகைய சூழ்நிலையில், செவ்வாய் நெருப்பு உறுப்பு ராசியான சிம்மத்திற்குள் நுழைந்திருப்பது அதிகப்படியான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்

மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு சிம்மம் ஐந்தாம் வீட்டில் வருகிறது. செவ்வாய் இந்த ராசியில் ஐந்தாம் இடத்தில் சஞ்சரிக்கிறார். அதே சமயம் சுக்கிரனும் இந்த வீட்டில் அமர்ந்திருப்பார். இந்த காலம் காதல் வாழ்க்கைக்கு மிகவும் சிறப்பானதாக இருக்கும். உங்கள் துணையை உற்சாகத்துடனும் ஆற்றலுடனும் மகிழ்விப்பீர்கள். தனிமையில் இருப்பவர்களுக்கு திருமண வாய்ப்புகள் உருவாகும். சுக்கிரன்-செவ்வாய் இணைவதால் உங்கள் படைப்பாற்றல் அதிகரிக்கும் மற்றும் ஊகங்கள், சந்தை அல்லது முதலீடு மூலம் நீங்கள் பலன் பெறலாம். குழந்தைப் பேறுக்கான வாய்ப்புகளும் உருவாகி வருகின்றன.

மேலும் படிக்க | பரணி நட்சத்திரத்தில் குரு: நவம்பர் வரை இந்த ராசிகளுக்கு அமோகமான ராஜயோகம்

விருச்சிகம்

இந்த ராசியில் முதல் மற்றும் ஆறாவது வீட்டின் அதிபதி செவ்வாய் ஆவார். சுக்கிரன் 7ஆம் மற்றும் 12 ஆம் வீட்டில் இருக்கும். இந்த இரண்டு கிரகங்களும் உங்கள் ராசிக்கு 10ஆம் வீட்டில் அமரும். அதனால் உத்தியோகத்தில் முன்னேற்றம் ஏற்பட்டு சமூகத்தில் மரியாதை கூடும். இது தவிர, தொழில் மற்றும் வேலை வாய்ப்புகளில் முன்னேற்றம் ஏற்படும். 

மகரம்

இந்த இரண்டு கிரகங்களின் சேர்க்கை மகர ராசியின் எட்டாவது வீட்டில் நடக்கும். சுக்கிரன் ஐந்தாம் வீட்டிற்கு அதிபதி, செவ்வாய் நான்காம் வீட்டிற்கு அதிபதி. சிம்மத்தில் அமர்வதால் ராஜயோகம் உருவாகிறது. இது தவிர மகர ராசிக்கு 11ஆம் இடமான செவ்வாய் அதிபதியாக இருப்பதால் தன யோகம் உருவாகி வருகிறது. உங்கள் வேலையின் முடிவுகளில் தாமதம் இருக்கலாம், ஆனால் நீங்கள் நிச்சயமாக வெற்றி பெறுவீர்கள். தொழிலதிபர்கள் அதிக லாபம் பெறுவார்கள் ஆனால் சற்று தாமதமாகும். செலவுகளை சரி பார்க்கவும்.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் உள்ளன. ZEE NEWS அதை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | சனி பெயர்ச்சியால் தூக்கத்தை தொலைக்கப்போகும் சில ராசிகள்... தப்பிக்க வழிகள் இதோ!
 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News