டிசம்பர் மாத சூரியப் பெயர்ச்சி! திருப்பாவை திருவெம்பாவை மணக்கும் மார்கழி மாதம்

Sun Transit 2022 December 16: டிசம்பர் மாதம் 16ம் தேதி  சூரியன் விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு பெயர்கிறார். கண்ணனைப் போற்றித் துதிக்கும் மார்கழி மாத சூரியப் பெயர்ச்சி பலன்கள் 

Written by - Malathi Tamilselvan | Last Updated : Dec 14, 2022, 06:18 AM IST
  • 2022 மார்கழி மாதம் 4 ராசிகளுக்கு அருமை!
  • 2022ஆம் ஆண்டின் கடைசி சூரியப் பெயர்ச்சி
  • மீன ராசிக்காரர்களுக்கு அருமையான காலம்
டிசம்பர் மாத சூரியப் பெயர்ச்சி! திருப்பாவை திருவெம்பாவை மணக்கும் மார்கழி மாதம் title=

Sun Transit 2022 December 16: கிரகங்களின் நகர்வுகளை அடிப்படையாகக் கொண்டு எதிர்காலத்தைக் கணிக்கும் கலை ஜோதிடம், டிசம்பர் மாதம் 16ம் தேதி  சூரியன் விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு பெயர்கிறார். டிசம்பர் மாதத்தில் வேறு சில கிரகங்களின் பெயர்ச்சியும் நடைபெறுகிறது. இன்னும் இரு நாட்களில் நடைபெறவிருக்கும் சூரியப் பெயர்ச்சி மார்கழியில் பக்திப் பரவசத்தை ஏற்படுத்துவதுடன் சிலருக்கு வாழ்க்கையில் சிறந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவிருக்கிறது. சூரியனின் டிசம்பர் 16ம் தேதி தனுர் சங்கராந்தி 4 ராசிக்காரர்களுக்கு மங்களத்தைத் தரும்.  

மேஷம்: மேஷராசிக்காரர்களுக்கு டிசம்பர் மாத சூரியப் பெயர்ச்சி பக்தி பரவசமானதாக இருக்கும். முன்னேற்றத்தையும் மனதில் நிம்மதியையும் தரும். மனதில் உள்ள ஆசைகள் நிறைவேறும் நேரம் இது. குடும்பத்தினர் மீது பாசமும் பற்றுதலும் அதிகரிக்கும். பண வரத்து மந்தமாக இருந்தாலும் மனதில் நிம்மதி இருக்கும். ஆண்டாளின் திருவடிகளை பிடித்தால் பாதகங்கள் தீரும் என்று உணர வைக்கும் சூரியப் பெயர்ச்சியாக இருக்கும்.

மேலும் படிக்க | கிரகக் கோளாறால் டிசம்பர் மாதம் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய ராசிகள்

மிதுனம்: சூரியனின் தனுர் ராசி பெயர்ச்சி, மிதுன ராசிக்காரர்களுக்கு சுபமான பலன்களைத் தரும். வாழ்க்கையில் நிம்மதி நிறைந்து, திருப்தி ஏற்படும். ஆலயங்களுக்கு சென்று வழிபாடு செய்வீர்கள். சமூகத்தில் மரியாதை அதிகரிக்கும். தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு இந்த நேரம் சாதகமானதாக இருக்கும்.

தனுசு: தனுசு ராசிக்காரர்களுக்கு சூரியனின் சஞ்சாரம் சாதகமான பலன்களைத் தரும். தனுசு ராசிக்காரர்களுக்கு சூரியனின் ராசி மாற்றம் வெற்றியைத் தரும். தொழிலில் முன்னேற்றமும், வியாபாரத்தில் லாபமும் உண்டாகும். யாருடனும் மோதல் போக்கு வேண்டாம். வழக்குகளில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம். வாய் வார்த்தைகள் உங்களை சிக்கலில் ஆழ்த்தலாம் என்பதால், கவனமாக பேசவும்.

மீனம்: தற்போது மீன ராசிக்குள் நுழையும் சூரியன், அந்த ராசிக்காரர்களுக்கு சுபமான பலன்களைத் தருவார். தன்னம்பிக்கையை அதிகரிக்கும் இந்த சூரியப் பெயர்ச்சி உத்தியோகத்தில் மதிப்பை எற்படுத்தும். சமூக்கத்தில் மதிப்பு மரியாதை அதிகரிக்கும்.. வியாபாரத்தில் லாபம் உண்டாகும். முதலீடு செய்வதற்கு ஏற்ற காலம்.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளது. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.) 

மேலும் படிக்க | டிசம்பர் மாத பெயர்ச்சிகளால் அமோக வாழ்வை பெறும் ‘சில’ ராசிகள் இவை தான்!

மேலும் படிக்க | வக்ர நிவர்த்தி அடையும் செவ்வாய்; புத்தாண்டில் ‘இந்த’ ராசிகளுக்கு ராஜயோகம்!

மேலும் படிக்க | மாதங்களில் நான் மார்கழி! கண்ணனுக்கு பிடித்தமான 2022 மார்கழி மாத ராசி பலன்கள் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News