மகேஷ் நவமி திருவிழா சிவன் மற்றும் அன்னை பார்வதியை வழிபடுவதற்கான சிறப்பு வாய்ந்த நாளாகும். ஆனி மாதம் வளர்பிறை நவமி அன்று அனுசரிக்கப்படும் மகேஷ் நவமி ஜூன் 15ம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த நாள் மகேஸ்வரி சமுதாய மக்களுக்கு மிகவும் சிறப்பு வாய்ந்தது. இந்த நாளில் சூரியப் பெயர்ச்சியும் நடைபெறுகிறது. ஜூன் மாதத்தில் சூரியன் பெயர்ச்சியாகும் போது உருவாகும் ஆனி மாதத்தின் முதல் நாளான அன்று செய்யும் பூஜைகள் அனைவரின் வாழ்க்கையிலும் நிம்மதியை ஏற்படுத்தும்.
அதிலும் சூரியனின் பெயர்ச்சி நாளான ஜூன் 15ம் நாளான்று மகேஷ் நவமி அன்று தொடங்கும் ஆனி மாதத்தில் பிரச்சனைகளை எதிர்கொள்ளப்போகும் ராசிகள் யாவை? அதிலிருந்து எப்படி நிவாரணம் பெறுவது என்பதைத் தெரிந்துக் கொள்வோம்.
மேஷம்
பணி புரியும் இடத்தில் இருந்து எதிர்பார்த்த மகிழ்ச்சியான செய்திகள் தள்ளிப்போகும், அரசு காரியங்களில் கவனம் வேண்டும். சூரிய வழிபாடு சிறந்தது
ரிஷபம்
தாயின் உடல்நிலையில் கவனம் செலுத்தவும், வீண்விரயங்களை தவிர்க்கவும். சிக்கனமாக செயல்பட்டால் என்றும் மகிழ்ச்சி தான். சுக்கிரனை வெள்ளிக்கிழமையன்று வழிபடுங்கள்.
மிதுனம்
உறவுகள் மற்றும் குடும்பத்தினரிடம் வார்த்தைகளை கவனமாக பயன்படுத்தவும். வீண் விவகாரத்தில் மாட்டிக் கொள்ள வேண்டாம். உத்தியோகத்தில் புதிய வாய்ப்புகள் கிடைத்தாலும் பணிச்சுமை மிகவும் அதிகமாக இருக்கும். ஆதித்ய ஹிருதய மந்திரத்தை தினசரி காலையில் சொல்லி சூரியனை வழிபடவும்.
கடகம்
தேவையில்லாத விஷயத்தில் தலையிட வேண்டாம். அதிலும் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் கவனத்துடன் இருக்க வேண்டும். ஞாயிற்றுக்கிழமையன்று சூரியனை வழிபடுவது நல்லது.
மேலும் படிக்க | சுக்கிரனை சாந்தி செய்யும் பரிகாரங்கள்! சுக்கிரப் பெயர்ச்சியால் நன்மையடைய வழிபாடு!
சிம்மம்
கொடுக்கல், வாங்கல் விஷயங்களில் கவனம் வேண்டும். எதிர்பாராத சில பயணங்களால் வீண் விரயம் ஏற்படும். மனதில் நிம்மதி குலையும். சிவாலயத்தில் உள்ள புதன் பகவானுக்கு அர்ச்சனை செய்யவும்.
விருச்சிகம்
மனதில் சங்கடங்கள் தோன்றும் காலம் இது. இறை பணிகளில் உங்களை ஈடுபடுத்திக் கொள்வதற்கான வாய்ப்புகள் வந்தால் அவற்றை பயன்படுத்திக் கொள்ளுங்கள். ஆடம்பரச் செலவுகளை குறைப்பது நல்லது. எதிர்பாராத திடீர் செலவுகள் கவலைகளை அதிகரிக்கும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு சற்று கவலை தரும் காலமாக இருக்கும். பெற்றோர்களின் மனதில் இருக்கும் குறைகளை நீக்க முயற்சிகளை எடுக்கவும். சிவன் மற்றும் பார்வதிக்கு அர்ச்சனை செய்து அன்னதானம் செய்யவும்.
மீனம்
கொடுக்கப்பட்ட பணிகளை செய்து முடிப்பதில் தாமதம் ஏற்படும். தொழில் விஷயங்களில் கவனம் அவசியம். உத்தியோகத்தில் மதிப்பை தக்க வைக்க கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும். இறைவழிபாடு அவசியம், அன்னை துர்க்கையை ராகு காலத்தில் வழிபடவும்.
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்தூள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | 7 அற்புத யோகங்கள் உருவாகும் கங்கா தசரா! ஜூன் 16 முதல் பட்டையை கிளப்பும் ராசிகள்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ