வீட்டில், வயது வந்த பெண்ணிற்கோ ஆணிற்கோ திருமணம் என்ற பேச்சை எடுத்து விட்டால் முதலில் ஜாதகத்தையும் ஜோசியத்தையும்தான் பெரியவர்கள் நாடுவர். எல்லாம் பொருந்தி வந்தாலும் ஒரு சிலருக்கு திருமணம் நடைபெறுவதில் தாமதம் ஏற்படும். இது ஏன்..? இதற்கான பரிகாரங்கள் என்ன..?
பெரியவர்கள் மட்டுமல்ல திருமண கணவுகளுடன் அதற்கேற்ற வயதில் இருப்பவர்கள் சிலருக்கும் திருமணம் தள்ளிப்போவது மனதில் சஞ்சலத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஜாகதக பொருத்தமின்மை, ஜாதகத்தில் தோஷம் உள்ளிட்ட பல காரணங்களுக்காக ஒரு சிலருக்கு திருமணம் தள்ளிப்போகலாம். இதை சில பரிகாரங்கள் செய்தால் தவிர்க்க முடியும்.
திருமணத்தில் தாமதம்..பரிகாரம் என்ன..?
திருமன தாமத்ததிற்கு மிகவும் உகந்த பரிகாரமாக விளங்குவது, யாரேனும் ஒரு ஏழை பெண்ணின் திருமணத்திற்கு உதவுவது. அது, நிதி உதவியாக இருக்கலாம் அல்லது பொருள் உதவியாக இருக்கலாம். இது போன்ற தான தர்மங்கள் செய்வது திருமணம் நடைபெறுவதற்கு உதவுவது மட்டுமன்றி அடுத்த தலைமுறையினரையும் காக்கும் என்று கூறப்படுகிறது.
சனி தோஷம் இருப்போர் பலருக்கும் திருமணம் ஆவதில் தாமதம் ஏற்படும். சனி தோஷத்தில் இருந்து நிவர்த்தி பெற தான தர்மங்கள், நற்செயல்கள் ஆகியவற்றை பரிகாரமாக செய்யலாம்.
மேலும் படிக்க | சனியும் புதனும் இணைந்து இந்த 4 ராசிக்காரர்களின் வாழ்க்கையையே பிரகாசமாக்கப் போகுது!
‘இதை’ வீணாக்க கூடாது!
கோயில்களுக்கு செல்லும் போது கொடுக்கப்படும் பிரசாதத்தை நாம் ஒரு காலத்திலும் வீணடிக்க கூடாது. அது மட்டுமன்றி, முடிந்த வரை நாம் பிறருக்கு நம் கையில் இருப்பதை தானமாக கொடுத்து பழக வேண்டும். ஒருவரது பசியை போக்கிய பின், அவர் வயிறார மனதார நமக்கு கொடுக்கும் வாழ்த்து நம்மை மட்டுமன்றி அடுத்து வரும் தலைமுறையினரையும் காக்கும். எனவே, உங்களுக்கு கொடுக்கப்படும் பிரசாதத்தை வீணடிக்க கூடாது. மேலும் ஆதரவற்றோருக்கு அன்னதானம் செய்வதும் விரைவில் திருமணம் நடக்கும் சில சூழல்களை உருவாக்கும்.
அம்மன் வழிபாடு:
திருமண தடை நீங்கி விரைவில் திருமணம் நடைபெற ராகு காலத்தில் துர்க்கை அம்மனை வழிபடுவது கை மேல் பலன் தரும். இதனால் பெண்களுக்கு உடலில் உள்ள பிரச்சனைகளும் நீங்கும்.
விரதம்:
பெண்கள், திருமண தாமதத்தை போக்க 16 திங்கட் கிழமைகலில் விரதம் இருந்து சிவபெருமானை வணங்க வேண்டும். விரதம் இருக்கும் நாட்களில் வீட்டிலேயே சிவ பெருமானிற்கு அபிஷேகம் செய்து பூஜை செய்யலாம். இதனால், பார்வதி தேவியின் அருள் விரைவில் கிடைக்கப்பெற்று திருமண தடை நீங்கும் என்று கூறப்படுகிறது.
வாயில்லா ஜீவன்களுக்கு உணவு:
திருமண தடை நீங்க, வாயில்லா பிராணிகளுக்கு உணவு கொடுப்பது சிறந்த பரிகாரமாக பார்க்கப்படுகிறது. கோமாதாவின் மறு உருவமாக பார்க்கப்படுகிறது, பசு. இதற்கு பச்சை உணவுகளான காய்கறி, இலை தழை, கீரை உள்ளிட்ட உணவுகளை கொடுக்கலாம். இதனால் திருமணத்தில் ஏற்படும் தாமதம் நீங்கி விடும். மேலும் பசுவிற்கு புல் கொடுப்பதால் நாம் முன் ஜென்மத்தில் செய்த பாவமும் தீர்க்கப்படும் என்று கூறப்படுகிறது.
எந்த நிற உடை அணியலாம்..?
திருமண தடை நீங்க குறிப்பிட்ட நிற ஆடையை அணியலாம். திருமண யோகத்தை வழங்கக்கூடியவர் குரு பகவான். திருமண தடை நீங்க விரும்புபவர்கள், மஞ்சள் நிற உடையை அணிந்து திங்கட்கிழமைகளில் சிவன் கோயிலிற்கு சென்று வழி படலாம்.
விநாயகர் வழிபாடு:
திருமணம் ஆகாதவர்கள், ஒவ்வொரு செவ்வாய் கிழமைகளிலும் மற்றும் வெள்ளிக்கிழமைகளிலும் அரசமர விநாயகரை வழிபடலாம். உங்களின் நீங்கள் வழிபாடு செய்யும் நேரம் காலை 6 மணி முதல் 9 மணிக்குள்ளாக இருந்தால் நல்லது. இதனுடன் சேர்த்து நெய் தீபம் ஏற்றி வழிப்பட்டால் இன்னும் சிறப்பு.
மேலும் படிக்க | வருகிறது புரட்டாசி... ஏன் அசைவம் சாப்பிடக்கூடாது என சொல்கிறார்கள்....?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ