சனீஸ்வரரால் உருவாகும் ஷடாஷ்டக யோகத்தால் கஷ்டப்படப்போகும் ராசிகள்! நீங்க என்ன ராசி?

Shadashtak Yogam: அக்டோபர் 30 ஆம் தேதி செவ்வாய் வக்ர கதியில் நகரும்போது, சனீஸ்வரருடன் இணைந்து உருவாக்கும் ஷடாஷ்டக யோகத்தால் கஷ்டப்படப்போகும் ராசிகள்...

Written by - Malathi Tamilselvan | Last Updated : Oct 24, 2022, 09:22 PM IST
  • ஷடாஷ்டக யோகத்தால் கஷ்டப்படப்போகும் ராசிகள்
  • செவ்வாயின் வக்ர கதியால் பிரச்சனை
  • சனீஸ்வரரின் கோபத்தை தவிர்க்கவும்
சனீஸ்வரரால் உருவாகும் ஷடாஷ்டக யோகத்தால் கஷ்டப்படப்போகும் ராசிகள்! நீங்க என்ன ராசி? title=

புதுடெல்லி: செவ்வாய் கிரகம் சமீபத்தில் ராசி பரிவரத்தனை செய்தது. அக்டோபர் 16, 2022 அன்று, ரிஷப ராசியிலிருந்து, புதனின் ராசிக்கு மாறிய செவ்வாய், 15 நாட்களுக்குப் பிறகு வக்ர கதியில் பின்னோக்கி பயணிக்கவிருக்கிறது. அக்டோபர் 30, 2022 அன்று ஞாயிற்றுக்கிழமை இரவு 18:19 மணிக்கு வக்ர கதியில் பயணிக்கும் செவ்வாய்,13 நவம்பர் 2022 வரை அங்கேயே இருக்கும், அதன் பிறகு, வக்ர நிவர்த்தியாகி தனது வழக்கமான பாதையில் சஞ்சரிக்கும். செவ்வாய் கிரகத்தின் வக்ர இயக்கமானது இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும். இது, சிறப்பு முக்கியத்துவம் வாய்ந்தது ஆகும்.

கோபம், வலிமை, ஆக்ரோஷம் போன்றவற்றிற்க்கு அதிபதியான செவ்வாய் வக்ர கதியில் நகரும் போதெல்லாம், அதன் விளைவு ஒருவரின் இயல்பில் எரிச்சல், கோபம், விரக்தி மற்றும் ஆக்கிரமிப்பு என பாதிப்புகளைக் கொடுக்க்கும். செவ்வாய் கிரகத்தின் வக்ர இயக்கத்தால், மிதுன ராசிக்காரர்களின் இயல்புகளில் எதிர்மறையான மாற்றங்கள் காணப்படும்.

மேலும் படிக்க | குருவின் ராசி மாற்றத்தினால் பஞ்சமஹாபுருஷ ராஜயோகம்; அமோக வாழ்வைப் பெரும் ‘3’ ராசிகள்! 

மிதுன ராசிக்காரர்களுக்கு கோபம் அதிகமாகும். அனைவரையும் அடக்கி ஆளும் எண்ணம் தோன்றும். ஈகோ அதிகரிக்கும், இது தொழிலும், பணியிடத்திலும் சிக்கலை அதிகரிக்கும். கோபத்தால், கெட்ட பெயர் ஏற்படவும் வாய்ப்பு உண்டு. இந்த நேரத்தில் சிலருக்கு காயம் ஏற்படவும் வாய்ப்புள்ளது. லக்ன வீட்டில் செவ்வாய் இருப்பது திருமணத்திற்காக வரன் பார்த்துக் கொண்டிருப்பவர்களுக்கு தடையை ஏற்படுத்தும்.

திருமணமானவர்களுக்கு குடும்பத்தில் பிரச்சனைகள் தோன்றும். முடிந்த அளவு வாயைக் கட்டுப்படுத்துவது நல்லது.

செவ்வாய்- சனி ஷடாஷ்டக யோகம்
அக்டோபர் 30 ஆம் தேதி செவ்வாய், தனது பிற்போக்கு இயக்கத்தைத் தொடங்கும் போது, ​​சனியுடன் இணைந்து ஏற்படும் ஷடாஷ்டக யோகம் பாதிப்பை ஏற்படுத்தும். ஷடாஷ்டக் யோகம் என்பது இரண்டு ராசிகளுக்கு இடையே உள்ள தூரத்தின் தொடர்பு 6-8 ஆகும்போது ஏற்படுவது ஆகும். 

இந்த செவ்வாய் – சனி ஷடாஷ்டக யோகம் அமைவதால் பலருக்கு தீய விளைவுகள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. குறிப்பாக இந்த நேரத்தில், பல செவ்வாயின் எதிரி ராசிகளுக்கு பல பிரச்சனைகள் மற்றும் விபத்துக்கள் ஏற்படலாம். குடும்பத்தில் பரஸ்பர சச்சரவுகளை அதிகரிக்க உதவும்.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளது. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | மிதுனம், விருச்சிகம் மற்றும் தனுசு ராசிக்காரர்களுக்கு எச்சரிக்கை

மேலும் படிக்க | Astro: வாழ்க்கையை புரட்டிப் போடும் குரு சாண்டள யோகம்; சில எளிய பரிகாரங்கள் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News