Jupiter transit Effects: ஜோதிட சாஸ்திரத்தில் கிரகங்களின் நிலை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது, அதிலும் குரு பகவானுக்கு தனிச்சிறப்பு ஒன்று. நவகிரகங்கள் அனைத்தும் இயங்கிக் கொண்டேயிருக்கின்றன. ஒவ்வொரு கிரகமும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் மற்றொரு ராசியில் பெயர்ச்சி ஆகிறது. அதில், குரு எந்த ராசியிலும் சஞ்சரிப்பது வாழ்க்கையின் முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும். குரு அறிவைக் கொடுப்பவர். அறிவு, கர்மா, செல்வம், பிள்ளைகள் மற்றும் திருமணம் ஆகியவற்றின் காரகர் குரு பகவான். ஒருவர் பிறக்கும் போது, சந்திரன் 2, 5, 7, 9 மற்றும் 11 ஆம் வீட்டில் அமைந்திருந்தால் மிகவும் சாதகமான பலன்களை குரு தருவார்.
குரு, ஒரு சுழற்சியை முடிக்க சுமார் 12 ஆண்டுகள் ஆகும். குரு சஞ்சாரத்தின் விளைவு நீண்ட காலம் நீடிக்கும். வியாழன் டிரான்ஸிட் 2023ல் ராசி மாறும் சூரியன் மற்றும் புதனைப் போலல்லாமல், குருவின் பெயர்ச்சி மாறுபட்டு இருக்கும், ஏனெனில் இந்த கிரகங்கள் ஒரு மாதத்திற்குள் தங்கள் இடத்தை மாற்றுகின்றன.
கடக ராசியில் உச்சத்தில் இருக்கும் குரு பகவான் மகர ராசியில் வலுவிழக்கிறார். தனுசு மற்றும் மீனத்தை ஆட்சி செய்யும் குரு, சூரியன், சந்திரன் மற்றும் செவ்வாய் கிரகங்களுடன் நட்பாக இருப்பவர். சுக்கிரன் மற்றும் புதனுடன் பகை உறவு கொண்டவர் குரு. இத்தகைய குரு 2023ஆம் ஆண்டு தொடங்கியவுடன், 5 ராசிகளை சேர்ந்தவர்களின் அதிர்ஷ்டத்தை மாற்றுகிறார்! குரு மகத்தான செல்வத்தையும், நல்ல அதிர்ஷ்டத்தையும் தருவார்.
மேலும் படிக்க | சனிப்பெயர்ச்சி 2023: 2025 ஆம் ஆண்டு வரை இந்த ராசிகளுக்கு எச்சரிக்கை காலம், உஷார்!!
2023 இல் மேஷத்தில் பெயரும் குரு: ஜாதகத்தில் வியாழனின் சுப ஸ்தானம் திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சியைத் தரும். 2023 ஆம் ஆண்டு குரு பெயர்ச்சியுடன் தொடங்குகிறது. மேஷ ராசியில் சஞ்சாரம் செய்யவிருக்கும் குரு, அனைத்து ராசிகளையும் பாதித்தாலும், 5 ராசிக்காரர்களுக்கு இது மிகவும் சாதகமாக இருக்கும். 2023-ம் ஆண்டு எந்தெந்த ராசிக்காரர்களுக்கு குருவின் அருள் பொழிவார் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
மிதுனம்: வருமானம் அதிகரிக்கும். எல்லாத் தரப்பிலிருந்தும் நன்மைகள் உண்டாகும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். வேலை தேடுபவர்களுக்கு வெற்றி கிடைக்கும். தற்போதைய வேலையில் பதவி உயர்வு கிடைக்கும். பணம் பெற புதிய வழிகள் அமையும்.
கடகம்: கடக ராசிக்காரர்களுக்கு குருவின் சஞ்சாரம் பல நன்மைகளைத் தரும். உத்தியோகத்தில் பல புதிய வாய்ப்புகள் அமையும். அருமையான வேலை வாய்ப்பு வரலாம். பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு பெறுவதற்கான வலுவான வாய்ப்புகள் உள்ளன. மரியாதை அதிகரிக்கும்.
மேலும் படிக்க | ரிஷப ராசியில் வக்ர நிலையில் நுழையும் புதன்; இந்த ராசிகளின் தலைவிதி மாறும்
கன்னி: வெற்றி உங்கள் பாதங்களை முத்தமிடும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். திருமண வாழ்க்கை அன்பு நிறைந்ததாக இருக்கும். புதிய வழிகளில் பணம் சம்பாதிப்பதில் வெற்றி உண்டாகும். மரியாதை அதிகரிக்கும்.
துலாம்: 2023ல் துலாம் ராசிக்காரர்களுக்கு குருவின் பாக்கியம் அதிகமாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சிறப்பு மரியாதை கிடைக்கும். கனவுகள் நனவாகும். புதிய வேலை கிடைக்கலாம். பணத்தின் நிலை நன்றாக இருக்கும்.
மீனம்: குருவின் ராசி மாற்றம், மீன ராசிக்காரர்களுக்கு அமோக பண வரவை தரும். எங்கிருந்தோ திடீரென்று பணம் கிடைக்கும். உத்தியோகத்தில் நிலைமை சிறப்பாக இருக்கும். வியாபாரத்தில் புதிய ஆர்டர்களைப் பெறுவீர்கள், இதனால் அதிக லாபம் கிடைக்கும். வெளிநாட்டில் இருந்து அதிக லாபம் கிடைக்கும்.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் உள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | யோசிக்காமல் செலவு செய்யும் ராசிகள் இவைதான்: பணத்தை அள்ளி வீசுவார்கள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ