புதன் கொடுக்கும் கேந்திர திரிகோண ராஜயோகம்! பணத்தில் புரளும் 4 ராசிகள்

Budh Margi 2023 January 18: கிரகங்களின் 'இளவரசன்' புதன் இன்று திசை மாறுகிறார், புதனின் சஞ்சார மாற்றம் யாருடைய வாழ்வில் எந்தவிதமான பலன்களை ஏற்படுத்தும்? 

Written by - Malathi Tamilselvan | Last Updated : Jan 18, 2023, 06:26 AM IST
  • புதன் மார்கத்தை மாற்றிவதால் பணவரவை பெற்று மகிழவிருக்கும் ராசிகள்
  • இன்று முதல் திசை மாறுகிறார் புதன்
  • பொங்கலுக்கு பின் புதன் கொடுக்கும் ராஜயோகம்
புதன் கொடுக்கும் கேந்திர திரிகோண ராஜயோகம்! பணத்தில் புரளும் 4 ராசிகள் title=

Budh Margi 2023: கிரகங்களின் 'இளவரசன்' புதன் இன்று திசை மாறுகிறார், புதனின் சஞ்சார மாற்றம் யாருடைய வாழ்வில் எந்தவிதமான பலன்களை ஏற்படுத்தும்?  தனுசு ராசியில் சஞ்சாரத்தை மாற்றும் ஏற்படும் கேந்திர திரிகோண ராஜயோகத்தால் 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் தொடங்குகிறது. ஜனவரி 18ம் தேதி மாலை 6.18 மணிக்கு தனுசு ராசியில் சஞ்சாரத்தை மாற்றும் புதனால் இதுவரை கஷ்டப்பட்டவர்களுக்கு நல்ல நேரம் தொடங்குகிறது. புதனின் இந்த சஞ்சாரம் 5 ராசிகளின் வாழ்க்கையை மகிழ்ச்சியாக்குகிறது.

கேந்திர திரிகோண ராஜயோகமானது 1, 4, 7 மற்றும் 10 என்னும் கேந்திர வீடு மற்றும் திரிகோண வீடுகளான 1, 5, 9 ஆகிய வீடுகளுக்கு இடையே உள்ள இணைப்பால் உருவாகிறது. இந்த யோகம் மிகவும் மங்களகரமானதாக கருப்படுகிறது. ஜோதிடத்தில், ஒருவரின் ஜாதகத்தில் 1, 4, 7 மற்றும் 10 ஆகிய வீடுகள் வாழ்க்கையில் வளங்களை வழங்கும் விஷ்ணுவின் வீடுகள் என்றும், 1, 5 மற்றும் 9 ஆகிய வீடுகள் விஷ்ணுபத்னியான மகாலட்சுமியின் வீடுகள் என்றும் அழைக்கப்படுகிறது. 

மேலும் படிக்க | ஜனவரியில் அஸ்தமனமாகும் சனியினால் ‘இந்த’ ராசிகளின் பொற்காலம் ஆரம்பம்!

மிதுனம்

இந்த ராசிக்காரர்களுக்கு நல்ல காலம் தொடங்கப் போகிறது   திருமணத்திற்கு ஏற்ற வாழ்க்கைத் துணையை தேடுபவர்களின் தேடலுக்கான பலன் கிடைக்கும் நேரம் இது. தாயின் தரப்பில் இருந்து திருமணத்திற்கான யோகம் வந்து சேரும். வேலையில் உயர்வு, எதிர்பார்த்த செயல்கள் நடைபெறுவது என மனதில் மகிழ்ச்சி பொங்கும். சுபசெலவுகள் செய்ய வேண்டியிருக்கும்.

மேஷம்

வேலையை மாற்ற நினைக்கும் மேஷ ராசிக்காரர்கள்  வெற்றி பெறுவார்கள். புதன் சஞ்சாரத்தால், சிறந்த இடத்திலிருந்து நல்ல வேலை வாய்ப்பைப் பெறலாம். மனைவியுடன் சுற்றுலா அல்லது புனித யாத்திரை செல்லலாம். பயணங்களால் நல்ல பலன் உண்டு. உடல்நலம் மற்றும் தொழில் வாழ்க்கையில் ஏற்பட்ட சிரமங்களிலிருந்து விடுபடுவீர்கள். வாழ்க்கையில் நிம்மதி கிடைக்கும் காலம் இது.

மேலும் படிக்க | யாருக்கு என்ன யோகம் யோகத்தைக் கொடுக்கும்? கஜகேசரி யோகம் உருவாவது எப்படி?

துலாம்

ஊடகம் மற்றும் எழுத்துப் பணியுடன் தொடர்புடைய துலாம்  ராசிக்காரர்களுக்கு, இன்றைய புதன் பெயர்ச்சியுடன் பொற்காலம் தொடங்கப் போகிறது. புதனின் பிற்போக்கு சஞ்சாரத்தால், இதுவரை தனது இலக்கை அடைவதில் சிக்கல்களை எதிர்கொண்ட துலாம் ராசியினருக்கும், வேலையில் உத்வேகமும், ஆக்கப்பூர்வமான மாற்றங்களும் ஏற்படும். சகோதர சகோதரிகளுடன் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் தீரும். உங்களுக்கு ஆலோசனை சொல்ல சரியான நபரை கண்டறியும் நேரம் இது

கும்பம்

இந்த ராசிக்காரர்களுக்கு முதலீடு அல்லது வட்டிக்கு கொடுக்கப்பட்ட பணம் லாபம் கிடைக்கும், திடீரென்று பெரிய தொகை கைக்கு வந்து சேரும். காதலர்களுக்கும் தம்பதிகளுக்கும் அற்புதமான நேரம் இது. மாணவர்களுக்கு நல்ல நேரமாக இருக்கும். 

மேலும் படிக்க | சனிப்பெயர்ச்சியால் ஏழரை சனியில் சிக்கவுள்ள ராசிகள் இவை: நிவாரணம் காண பரிகாரங்கள் இதோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News