ராகுவின் நட்சத்திரத்தில் சனி: இந்த ராசிகளுக்கு பிரச்சனைகள் அதிகரிக்கும்... கவனம் தேவை!!

Shani Rahu Conjunction: சனிபகவான் சதய நட்சத்திரத்தில் இருப்பதன் பலன்கள் அனைத்து ராசிகளிலும் இருக்கும், எனினும் இது சில ராசிக்காரர்களுக்கு இது மிக பாதகமாக அமையும். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jul 24, 2023, 12:51 PM IST
  • கன்னி ராசிக்காரர்கள் வாக்குவாதங்களை தவிர்க்கவும்.
  • விருச்சிக ராசிக்காரர்கள் வியாபாரத்தில் நஷ்டத்தை சந்திக்க நேரிடும்.
  • மீன ராசிக்காரர்கள் ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட வேண்டும்.
ராகுவின் நட்சத்திரத்தில் சனி: இந்த ராசிகளுக்கு பிரச்சனைகள் அதிகரிக்கும்... கவனம் தேவை!! title=

சனி ராகு சேர்க்கை: வேத ஜோதிடத்தில், சனி மற்றும் ராகு இரண்டும் மிக முக்கியமான கிரகங்களாகக் கருதப்படுகின்றன. சனி மற்றும் ராகுவின் இயக்கங்களில் ஏற்படும் மாற்றங்கள் அனைத்து ராசிக்காரர்களையும் நிச்சயமாக பாதிக்கும். சனி அனைத்து கிரகங்களிலும் மிக மெதுவாக நகரும் கிரகம் ஆவார். ராகு எப்போதும் தலைகீழ் திசையில், அதாவது வக்ர நிலையில் நகரும் கிரகமாக உள்ளார். 

சனி மற்றும் ராகுவின் ராசி மாற்றத்திற்கு ஒரு சிறப்பு முக்கியத்துவம் உள்ளது. ஆனால் இது தவிர, இந்த இரண்டு கிரகங்களும் தங்கள் நட்சத்திரங்களை மாற்றும்போது, ​​​​அதற்கும் சிறப்பு பலன் உண்டு. சனி தற்போது கும்ப ராசியில் இருக்கிறார். ராகு விரைவில் ராசி மாற உள்ளார். 

அதேசமயம் சனி தற்போது சதய நட்சத்திரத்தில் சஞ்சரிக்கிறார். அக்டோபர் 17 வரை அவர் இந்த நக்ஷத்திரத்தில் இருப்பார். இப்படி அக்டோபர் 17 ஆம் தேதி வரை சனிபகவான் சதய நட்சத்திரத்தில் இருப்பதால், ராகு மற்றும் சனியின் சேர்க்கை நடக்கிறது. சனி ராகு சேர்க்கையால் அசுப யோகம் உருவாகியுள்ளது. சதய நட்சத்திரத்தின் அதிபதி ராகு என்பது குறிப்பிடத்தக்கது. அப்படிப்பட்ட நிலையில் சனிபகவான் சதய நட்சத்திரத்தில் இருப்பதன் பலன்கள் அனைத்து ராசிகளிலும் இருக்கும், எனினும் இது சில ராசிக்காரர்களுக்கு இது மிக பாதகமாக அமையும். இந்த ராசிக்காரர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். சனி ராகு சஞ்சாரத்தால் எந்தெந்த ராசிக்காரர்கள் அதிகம் பாதிக்கப்படுவார்கள் என்று இந்த பதிவில் காணலாம். 

சனி ராகு சேர்க்கையால் பாதிப்புகளை எதிர்கொண்டுள்ள ராசிகள்

கன்னி ராசி: கன்னி ராசிக்காரர்கள் வாக்குவாதங்களை தவிர்க்கவும்

அக்டோபர் 17ம் தேதி வரை கன்னி ராசிக்காரர்கள் சில பிரச்சனைகளை சமாளிக்க வேண்டி வரும். சனிபகவான் சதய நட்சத்திரத்தில் நுழைவதால், கன்னி ராசிக்காரர்கள் அதிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். பணத்தை சேமிப்பதில் கவனம் செலுத்த வேண்டும். பண இழப்பும் ஏற்படலாம். நீங்கள் சில விஷயங்களை திட்டமிடுவீர்கள். ஆனால் இவற்றின் தொடர் தோல்வியால் மன உளைச்சலுக்கு ஆளாக நேரிடும். இந்த காலத்தில் தேவையற்ற விவாதங்களை தவிர்க்க வேண்டும். இப்போது வணிகத்தில் திட்டமிடும் பணிகள் எதையும் செய்ய வேண்டாம்.

மேலும் படிக்க | மேஷத்தில் கஜகேசரி யோகம்... அபரிதமான செல்வத்தை பெறப் போகும் ‘சில’ ராசிகள்!

விருச்சிக ராசி: விருச்சிக ராசிக்காரர்கள் வியாபாரத்தில் நஷ்டத்தை சந்திக்க நேரிடும்.

விருச்சிக ராசிக்காரர்கள் சனி-ராகு இணைவதால் உடல்நலம் தொடர்பான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். தொழில், வியாபாரத்தில் பிரச்சனைகளை சந்திக்க வேண்டி வரலாம். பணியிடத்தில் வேலை சம்பந்தமாக மூத்த அதிகாரிகளுடன் வாக்குவாதம் ஏற்படலாம். அக்டோபர் 17 ஆம் தேதிக்குள் சனி-ராகு இணைவதால் உங்கள் எதிரிகளின் எண்ணிக்கை அதிகரிக்கலாம். இந்த காலத்தில் காதல் விவகாரங்களில் சிறப்பு கவனம் தேவை. இல்லையெனில் உங்கள் உறவில் விரிசல் ஏற்படலாம். வாகனம் ஓட்டும்போது எப்போதும் போக்குவரத்து விதிகளைப் பின்பற்றவும்.

மீன ராசி: மீன ராசிக்காரர்கள் ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட வேண்டும்

சதய நட்சத்திரத்தில் சனி-ராகு இணைவதால், மீன ராசிக்காரர்களுக்கு மோசமான விளைவுகள் ஏற்படும். இந்த ராசிக்காரர்கள் சில பெரிய இழப்புகளை சந்திக்க நேரிடும். குடும்பத்தில் ஒருவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போகலாம், அதன் காரணமாக மருத்துவமனைக்குச் செல்ல வேண்டியிருக்கும். வரும் சில நாட்களுக்கு உழைக்கும் வர்க்க மக்கள் பதற்றமாக இருக்கலாம். உங்களின் ஆடம்பரங்கள் அதிகரிக்கலாம். இதனால் பண விரயம் ஏற்படலாம். எனினும் சரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டால், நிலைமையை நன்றாக சமாளிக்கலாம்.

மேலும் படிக்க | குரு வக்ர பெயர்ச்சி: இந்த ராசிகள் மீது குரு பார்வை.... குபேர யோகம் ஆரம்பம்!!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News