குரு பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு பணம், பதவி, புகழ்.... மே 1 முதல் பொற்காலம் ஆரம்பம்

Guru Peyarchi: குரு பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். எனினும், சில ராசிகளில் இதனால் அதிகப்படியான நற்பலன்கள் உண்டாகும். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Feb 20, 2024, 05:25 PM IST
  • குரு பெயர்ச்சி கடக ராசிக்காரர்களுக்கு அதிகப்படியான நற்பலன்களை அள்ளித்தரும்.
  • குருவின் அருளால் அதிர்ஷ்டம் பன்மடங்காக அதிகரிக்கும்.
  • குடும்பத்தினருடன் மகிழ்ச்சியான பொழுதை கழிப்பீர்கள்.
குரு பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு பணம், பதவி, புகழ்.... மே 1 முதல் பொற்காலம் ஆரம்பம்

Guru Peyarchi: ஜோதிட சாஸ்திரப்படி அனைத்து கிரகங்களுக்கும் தனிப்பட்ட முக்கியத்துவம் உள்ளது. கிரகங்கள் அனைத்தும் ஒரு குறிப்பிட்ட காலத்தில் தங்க:ள் ராசியை மாற்றுகின்றன. இந்த ராசி மாற்றங்கள் கிரக பெயர்ச்சிகள் என அழைக்கப்படுகின்றன.  ராசிகள் மட்டுமின்றி நட்சத்திர மாற்றங்கள், உதய, அஸ்தமன நிலைகள், வக்ர பெயர்ச்சி, வக்ர நிவர்த்தி, என கிரகங்களில் பல வித மாற்றங்கள் ஏற்படுகின்றன. இந்த அனைத்து மாற்றங்களின் தாக்கங்களும் அனைத்து ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. 

Add Zee News as a Preferred Source

குரு பெயர்ச்சி

குரு பகவான் மிகவும் சுபமான கிரகமாக பார்க்கப்படுகிறார். சனி பெயர்ச்சியை போலவே குரு பெயர்ச்சியும் ஒரு முக்கிய ஜோதிட நிகழ்வாக கருதப்படுகிறது. கல்வி, செல்வம், திருமண வாழ்க்கை, அதிர்ஷ்டம், வேலை போன்றவற்றின் காரண கிரகமாக உள்ள குரு பகவான், சுமார் 12 மாதங்களுக்கு ஒரே ராசியில் இருக்கிறார். அதன் பிறகு அவர் தனது ராசியை மாற்றுகிறார்.

2024, மே 1 ஆம் தேதி குரு தனது ராசியை மாற்றவுள்ளார். தற்போது மேஷ ராசியில் இருக்கும் அவர் ரிஷப ராசியில் பெயர்ச்சி ஆவார். குரு பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். எனினும், சில ராசிகளில் இதனால் அதிகப்படியான நற்பலன்கள் உண்டாகும். இவர்களுக்கு பண வரவு அதிகரிக்கும். வாழ்வில் மகிழ்ச்சி கூடும். மாணவர்களுக்கு தேர்வுகளில் அபார வெற்றி கிடைக்கும். அந்த அதிர்ஷ்ட ராசிகளை (Zodiac Signs) பற்றி இந்த பதிவில் காணலாம். 

குரு பெயர்ச்சியால் அமோகமான பலன்களை பெறவுள்ள ராசிகள் இவைதான்

மேஷம் (Aries)

மேஷ ராசிக்காரர்களுக்கு குரு பெயர்ச்சி மிக அற்புதமாக இருக்கும். இவர்களுக்கு அனைத்து துறைகளிலும் வெற்றி கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வியில் நாட்டம் அதிகரிக்கும். பணி இடத்தில் புதிய பொறுப்புகள் கிடைக்கும். பதவி உயர்வும், ஊதிய உயர்வும் கிடைக்க வாய்ப்புள்ளது. இந்த காலகட்டத்தில், குருவின் அருளால் மேஷ ராசிக்காரர்கள் தங்கள் தொழிலில் வெற்றி காண்பார்கள். அதிகப்படியான லாபம் கிடைக்கும். வேலையில் முன்னேற்றம் ஏற்படும். நிதி ஆதாயம் இருக்கும். இவர்களுக்கு இந்த காலம் ஒரு வரப்பிரசாதமாக அமையவுள்ளது. 

மேலும் படிக்க | 4 ராசிக்காரர்களுக்கு அபயம் அளிக்கும் உபயாச்சாரி யோகம்! யாருக்கு சூரியனின் அருள் கிடைக்கும்?

ரிஷபம் (Taurus)

ரிஷப ராசியில்தான் குரு பகவான் பெயர்ச்சி ஆகவுள்ளார். இதனால் இவர்களுக்கு அதிகப்படியான லாபம் கிடைக்கும். குருவின் அருளால் ரிஷம் ராசிக்காரர்களுக்கு திடீர் பண வரவு இருக்கும். இந்த காலகட்டத்தில், ஒன்றுக்கு மேற்பட்ட வருமான ஆதாரங்கள் கிடைக்கும். அலுவலகத்தில் உங்கள் மதிப்பு கூடும். புதிய பொறுபுகளை பெறுவீர்கள். ஆன்மீக பணிகளில் நாட்டம் அதிகரிக்கும். ஆன்மீக சுற்றுலா சென்றுவர வாய்ப்புள்ளது. 

கடகம் (Cancer)

குரு பெயர்ச்சி கடக ராசிக்காரர்களுக்கு அதிகப்படியான நற்பலன்களை அள்ளித்தரும். குருவின் அருளால் அதிர்ஷ்டம் பன்மடங்காக அதிகரிக்கும். குடும்பத்தினருடன் மகிழ்ச்சியான பொழுதை கழிப்பீர்கள். குழந்தைகள் மூலம் நல்ல செய்திகள் கிடைக்கும். நீண்ட கால ஆசைகள் நிறைவேறும். உறவினர்கள் மற்றும் நண்பர்களின் முழுமையான ஒத்துழைப்பை பெருவீர்கள். எதிர்பாராத இடங்களிலிருந்து பண வரவு இருக்கும். குருவின் அருளால் தொழிலில் லாபம் அதிகரிக்கும். 

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | சுக்கிரன் பெயர்ச்சிக்கு பின் இந்த ராசிகளுக்கு ராஜ வாழ்க்கை, சனி அருள் பொழிவார்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

About the Author

Sripriya Sambathkumar

Sripriya Sambath is the Chief Sub Editor at Zee Tamil, with over 5 years of experience in journalism. She specialises in writing stories on business, personal finance and has covered wide range of topics including Union Budgets, Central Government Employees, Pay Commissions, Government policies, pension schemes, pensioners, stock markets, income tax, banking, economy, agriculture and International affairs. 

She values the interests and needs of her readers and considers her writing as a medium of connecting with readers and feels responsible to deliver news, views and analysis for them on time, everytime. For her, having a natural and loyal connect with her audience is of prime importance. Outside of work, she loves books, travel and intellectual conversations.

...Read More

Trending News