)
ஜோதிடத்தின் படி, சனி பகவான் நீதியின் கடவுள் என அழைக்கப்படுகிறார். ஏனெனில் அவர் கர்ம வினைகளுக்கு ஏற்ப பலன் வழங்குபவர். இந்நிலையில் ஜூன் மாதத்தில் சனி வக்ர பெயர்ச்சி அடைகிறார். ஏறக்குறைய 30 ஆண்டுகளுக்குப் பிறகு கும்ப ராசியில் சனி வக்ர நிலையை அடைவது அனைத்து ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றாலும். சனியின் இந்த வக்ர நிலை சஞ்சாரத்தால் சில ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பொன் போல் ஜொலிக்கும் என்கின்றனர் ஜோதிடர்கள்.
சனியின் வக்ர பெயர்ச்சி 2024 ஜூன் 29ம் தேதி அன்று நள்ளிரவு 12:35 மணிக்கு நிகழும். நவம்பர் 15, 2024 வரை சனி கும்பத்தில் வக்ர நிலையிலேயே நீடிப்பார். இதனால், வேலையில், தொழிலில், வியாபாரத்தில் முன்னேற்றம் காணப்படும். இந்த அதிர்ஷ்ட ராசிகள் எவை என்பதை அறிந்து கொள்ளலாம்.
சிம்மம்: சனி வக்ர பெயர்ச்சி பலன்கள்
சிம்ம ராசிக்காரர்களுக்கு (Leo Zodiac Sign) சனி பகவானின் வக்ர பெயர்ச்சி சிறப்பான பலன் தரும். இந்த காலகட்டத்தில் திருமணமானவர்கள் தங்கள் திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சியைக் காண்பார்கள். உங்களுடன் உங்கள் வாழ்க்கை துணையும் முன்னேற்றம் காண்பார். உங்கள் நிதி நிலையும் சிறப்பாக இருக்கும். பணத்தை சேமிக்கும் எண்ணம் தோன்றும். சமூகத்தில் மதிப்பும் மரியாதையையும் பெறுவீர்கள். முதலீடுகள் வருமானத்தை அள்ளிக் கொடுக்கும். உடலில் இருந்து வந்த சோர்வுகள் நீங்கி மகிழ்ச்சி அதிகரிக்கும். எதிர்பார்த்த இடத்திலிருந்து மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் உண்டாகும். தனவருவாயில் இருந்துவந்த ஏற்ற, இறக்கமான சூழல் குறையும். நண்பர்களால் ஆதாயம் உண்டாகும். உங்கள் மீதான நம்பிக்கை அதிகரிக்கும்.
விருச்சிகம்: சனி வக்ர பெயர்ச்சி பலன்கள்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு (Scorpio Zodiac Sign) சனியின் வக்ர பெயர்ச்சி சாதகமாக இருக்கும். இந்த நேரத்தில் நீங்கள் ஆடம்பர் பொருள், சொத்து வாங்கும் வாய்ப்புள்ளது. வாழ்க்கையில் மகிழ்ச்சியைப் பெறுவீர்கள். இந்த காலகட்டத்தில் நீங்கள் புதிய வாகனமும் வாங்கலாம். உங்கள் வேலையிலும், தொழிலிலும் நல்ல முன்னேற்றம் காண்பீர்கள். நிறைய பணத்தை சேமிப்பீர்கள். திட்டமிட்ட பணிகளில் உள்ள தடைகளை வெற்றி கொள்வீர்கள். உறவினர்கள், குறிப்பாக சகோதரர்கள் உதவியாக இருப்பார்கள். பிரார்த்தனைகளை நிறைவேற்றுவதற்கான வாய்ப்பு கிடைக்கும். இந்தக் காலக்கட்டத்தில் உழைக்கும் வர்க்கத்தைச் சேர்ந்தவர்களின் சம்பளம் உயரும் வாய்ப்பு உள்ளது. சிக்கலான பணிகளையும் சாதாரணமாக செய்து முடிப்பீர்கள். எதிர்பாராத தனவரவுகள் கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் மேம்படும்.
கும்பம்: சனி வக்ர பெயர்ச்சி பலன்கள்
சனியின் பிற்போக்கு சஞ்சாரம் கும்ப ராசிக்காரர்களுக்கு (Aquarius Zodiac Sign) மிகவும் நன்மை பயக்கும். இதற்குக் காரணம், சனி கும்ப ராசியில் சஞ்சரிப்பதால் ஷஷ ராஜயோகம் உண்டாவது தான். எனவே, இந்த காலகட்டத்தில், உங்கள் ஆளுமையும் நேர்மறையான மாற்றத்தை கொண்டு வரும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பால் இழுபறியான பணிகளை விரைந்து முடிப்பீர்கள். வியாபாரத்தில் கூட புதிய திட்டங்களில் சிறப்பாக பணிபுரிவீர்கள். இதில் உங்களுக்கு அதிர்ஷ்டம் கை கூடி வரும். சகோதர சகோதரிகளுடனான உங்கள் உறவு பலப்படும். நிதி ரீதியாக உங்கள் நிலைமையும் நன்றாக இருக்கும். குடும்பத்தாரின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். உடல் தோற்றப்பொலிவில் சில மாற்றங்கள் ஏற்படும். பலம் மற்றும் பலவீனங்களை புரிந்து கொள்வீர்கள்.
பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ