கும்பத்தில் இணையும் சனி செவ்வாய்... இந்த ராசிகளின் தலைவிதி மாறும்!

Mars Transit Effects: மார்ச் மாதம் 15 ஆம் தேதி, செவ்வாய் கிரகம் கும்ப ராசிக்கு பெயர்ச்சியாகும் நிலையில், அவர் சனீஸ்வரனுடன் இணைவார். சனி மற்றும் செவ்வாய் சேர்க்கை, மூன்று ராசிகளுக்கு விசேஷ பலன்களை கொடுக்கும் என்று ஜோதிடர்கள் கணித்துள்ளனர்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Mar 12, 2024, 03:46 PM IST
  • சனி மற்றும் செவ்வாய் கிரகங்கள், 45 நாட்கள் இணைந்திருக்கும்.
  • பலன்கள் மிக சிறப்பானதாக இருக்கும்.
  • 30 ஆண்டுகளுக்கு ஒருமுறை அபூர்வ சேர்க்கைகள் உருவாகின்றன.
கும்பத்தில் இணையும் சனி செவ்வாய்... இந்த ராசிகளின் தலைவிதி மாறும்! title=

Mars Transit Effects in Tamil: மார்ச் மாதம் 15 ஆம் தேதி, செவ்வாய் கிரகம் கும்ப ராசிக்கு பெயர்ச்சியாகும் நிலையில், அவர் சனீஸ்வரனுடன் இணைவார். ஜோதிடத்தில் சனிபகவான் என அழைக்கப்படும் சனீஸ்வரன், கர்ம வினைகளுக்கு ஏற்ப பலன்களை கொடுப்பவர். இந்நிலையில் 30 ஆண்டுக்குப் பிறகு, கும்ப ராசியில் சனியும் செவ்வாயும் இணைகிறார்கள். பொதுவாக சனி மற்றும் செவ்வாய் சேர்க்கை, மங்களகரமான சேர்க்கையாக கருதப்படுவதில்லை என்றாலும், மூன்று ராசிகளுக்கு இந்த இணைவு விசேஷ பலன்களை கொடுக்கும் என்று ஜோதிடர்கள் கணித்துள்ளனர்.

செவ்வாய் பெயர்ச்சியினால், சனி மற்றும் செவ்வாய் கிரகங்கள், 45 நாட்கள் இணைந்திருக்கும். இதனால் ஏற்படும் பலன்கள் மிக சிறப்பானதாக இருக்கும். சனீஸ்வரன் மிகவும் மெதுவாக நகரும் கிரகம். ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல சுமார் இரண்டரை வருடம் ஆகும். 30 ஆண்டுகளுக்கு ஒருமுறை அபூர்வ சேர்க்கைகள் உருவாகின்றன. இந்நிலையில் சனி செவ்வாயின் அபூர்வ சேர்க்கையால், வாழ்க்கையில் சாதகமான மாற்றங்களை சந்திக்க போகும் மூன்று ராசிகளை பற்றி அறிந்து கொள்ளலாம்.

மேஷ ராசி: செவ்வாய் பெயர்ச்சி பலன்கள்

செவ்வாய் பெயர்ச்சியினால் ஏற்படும் சனீஸ்வரன் செவ்வாய் இணைவு, மேஷ ராசியினருக்கு வருமானத்தையும் லாபத்தையும் அள்ளிக் கொடுக்கும். அலுவலகத்தில் வேலை செய்பவர்கள் முன்னேற்றத்தை காண்பார்கள். சம்பள உயர்வு பதவி உயர்வு தரித்திகரமான வகையில் இருக்கும். உடல் ஆரோக்கியம் நல்ல நிலையில் இருக்கும். புதிய வருமான ஆதாரங்கள் மூலம் நிலைமை மேம்படும். முதலீட்டாளர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.

ரிஷப ராசி: செவ்வாய் பெயர்ச்சி பலன்கள்

சனி பகவான் செவ்வாய் சேர்க்கை ரிஷப ராசியினருக்கு வெற்றிகளை அள்ளிக் கொடுப்பதாக இருக்கும். கல்வி பயில, வேலை செய்ய வெளிநாடு செல்ல நினைப்பவர்களுக்கு, அதற்கான வாய்ப்புகள் கைகூடி வரும். வருமான ஆதாயத்தை பெருக்கும் புதிய யோசனைகள் தோன்றும். சேமிப்பில் ஆர்வம் உண்டாகும். உறவுகள் மூலம் ஆதாயங்கள் ஏற்படும். குடும்பத்தினருடன் சுற்றுலா செல்லும் வாய்ப்பு உண்டு.

மேலும் படிக்க | சூரியன் பெயர்ச்சி... பங்குனியில் பட்டையை கிளப்ப போகும் சில ராசிகள்!

மகர ராசி: செவ்வாய் பெயர்ச்சி பலன்கள்

மகர ராசிக்கு அதிபதி சனிபகவான். இந்நிலையில் சனியும் செவ்வாயும் இணைவது, சுப பலன்களை அள்ளிக் கொடுக்கும். எதிர்பாராத பண வரவு மனதிற்கு மகிழ்ச்சியை கொடுக்கும். நிதி நிலைமை மேம்படும். குடும்பத்தில் நிம்மதியான மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவும். கைக்கு வராது என்று நினைத்த பணம் கூட கைக்கு வரும். பேச்சு திறனால் அனைவரையும் இருப்பீர்கள். செயல் திறன் மூலம் அனைவரின் பாராட்டையும் பெறுவீர்கள். தன்னம்பிக்கை மூலம் வெற்றிகள் சாத்தியமாக. சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் கூடும்.

வெற்றிகள் குவிய, தடைகள் விலக சனி பரிகாரங்கள்

வேலையில் இருந்து வந்த தடைகள் நீங்கவும், எடுத்த காரியம் அனைத்திலும் வெற்றி பெறவும், சனிக்கிழமைதோறும் சனி பகவானை வணங்கி அவருக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றுவது பலன் கொடுக்கும். ஏழைகளுக்கு அன்னதானம் செய்வதும், காகங்களுக்கு உணவளிப்பதும், சனி பகவானின் ஆசியை பெற்று தரும். கர்மங்களுக்கு ஏற்ற பலனை கொடுக்கும் சனி பகவான், நற்செயல்களால் மனம் குளிர்ந்து, கெடு பலன்களை குறைத்து, நற்பலன்களை அள்ளி வழங்குவார். சனீஸ்வரனை போல் கெடுப்பாறும் இல்லை, சனீஸ்வரனை போல் கொடுப்பாரு இல்லை என்று கூறுவார்கள்.

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.

மேலும் படிக்க | சனீஸ்வரரை சாந்தப்படுத்தி சனி உதயத்தை நன்மையாக மாற்றும் சனிக்கிழமைப் பரிகாரங்கள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News