ஜனவரி 30, 2024: மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ஜோதிடக் கணிப்பு

Astrological Prediction: இன்றைய நாளும் கோளும் உங்களுக்கு சாதகமாக அமைந்திருக்கிறதா? ஜனவரி 30, 2024ம் நாளுக்கான ராசிபலன்கள்...

Written by - Malathi Tamilselvan | Last Updated : Jan 30, 2024, 06:38 AM IST
  • ரிஷபத்திற்கு நலம் தரும் நாள்
  • கவனத்துடன் செயல்பட வேண்டிய 3 ராசிகள்
  • சிம்ம ராசியினருக்கு வேலையில் கவனம் தேவை
ஜனவரி 30, 2024: மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ஜோதிடக் கணிப்பு title=

இன்றைய நாளும் கோளும் உங்களுக்கு சாதகமாக அமைந்திருக்கிறதா? ஜனவரி 30, 2024ம் நாளுக்கான மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ஜோதிடக் கணிப்பைக் காணலாம்.

30-01-2024 சோபகிருது, தை 16  ராசி பலன்கள்

மேஷம் 

பிள்ளைகளுடன் இருந்துவந்த கருத்து வேறுபாடு நீங்கும். எதிர்பாராத சில உதவிகளின் மூலம் மாற்றம் உண்டாகும். தடையாக  செயல்பட்டவர்கள் விலகிச்செல்வார்கள். பூர்வீக சொத்துக்களில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். உடல் ஆரோக்கியம் மேம்படும்.  

ரிஷபம் 
பூர்வீக சொத்துக்கள் தொடர்பான செயல்பாடுகளில் லாபம் மேம்படும். மனதில் புதுவிதமான ஆசைகள் உண்டாகும். அரசு தொடர்பான பணிகளில் அனுகூலம் உண்டாகும். செயல்பாடுகளில் பதற்றமின்றி நடந்து கொள்ளவும். தந்தைவழி வியாபாரப் பணிகளில் பொறுப்புகளும், அலைச்சலும் அதிகரிக்கும்.  

மிதுனம் 
கால்நடை வியாபாரத்தில் லாபம் மேம்படும். புதிய வாகனம் மற்றும் வீடு மாற்றம் தொடர்பான சிந்தனை உண்டாகும். மாணவர்களுக்கு உயர் கல்வி தொடர்பான புரிதல் அதிகரிக்கும். அரசாங்க காரியங்கள் அனுகூலமாக முடியும். மற்றவர்களுடைய செயல்பாடுகளில் தலையிடாமல் இருப்பது நல்லது. 

கடகம் 
முயற்சிக்கு ஏற்ப முன்னேற்றம் உண்டாகும். சிறு தூரப் பயணங்களின் மூலம் மனதில் மாற்றம் ஏற்படும். விளையாட்டு தொடர்பான செயல்பாடுகளில் ஆர்வம் அதிகரிக்கும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். கடக ராசியினர் தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள்.  

சிம்மம் 
புதிய நபர்களிடம் தேவையற்ற விவாதங்களை தவிர்க்கவும். எதிர்பாராத சில அனுபவங்களின் மூலம் புதுமையான சூழ்நிலை உண்டாகும். சம்பாதிக்கும் திறன் மேம்படும்.  குழந்தைகளின் வழியில் மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும். மனதில் உத்வேகமான சிந்தனை உண்டாகும்.  

மேலும் படிக்க | பிப்ரவரி மாத ராசி பலன்... மேஷம் முதல் மீனம் வரை... அதிர்ஷ்ட ராசிகள் எவை..!!

கன்னி 
மாணவர்களுக்கு கல்வி தொடர்பான ஆலோசனை கிடைக்கும். தர்ம காரியங்களில் ஈடுபாடு ஏற்படும். எதிலும் பதற்றமின்றி செயல்படவும். புதுவிதமான கண்ணோட்டம் பிறக்கும். குடும்ப உறுப்பினர்களை அனுசரித்துச் செல்லவும். நீண்ட நேரம் கண்விழிப்பதை தவிர்ப்பது நல்லது.  

துலாம் 
ஆடம்பர பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். ஆரோக்கியத்தில் ஏற்ற, இறக்கமான சூழல் உண்டாகும். திடீர் செலவுகளால் கையிருப்பு குறையும். மனதளவில் புதுவிதமான சிந்தனை பிறக்கும். கடன் சார்ந்த பிரச்சனைகள் கட்டுக்குள் வரும். நாடி வந்தவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள்.  

விருச்சிகம் 
தனவரவுகளால் சேமிப்பு அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். சமூகப் பணிகளில் முன்னேற்றம் ஏற்படும். இணையம் தொடர்பான பணிகளில் புதிய வாய்ப்பு கிடைக்கும். மனதில் இருந்துவந்த கவலை குறையும். தொழிலில் அபிவிருத்திக்கான சூழல் ஏற்படும். 

மேலும் படிக்க | குரு பெயர்ச்சி 2024... ‘இந்த’ ராசிகளுக்கு பொன்னான காலம் ஆரம்பம்!

தனுசு 
அரசு தொடர்பாக எதிர்பார்த்திருந்த சில உதவிகள் சாதகமாக அமையும். கல்வி கற்கும் மாணவர்களுக்கு புதுவிதமான மாற்றம் ஏற்படும். உறவினர்களின் வழியில் சுபச்செய்திகள் கிடைக்கும். மனதில் இனம்புரியாத சிந்தனைகளின் மூலம் ஒருவிதமான சோர்வு ஏற்பட்டு நீங்கும். 

மகரம் 
கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். மகான்களின் தரிசனத்தால் மகிழ்ச்சி அடைவீர்கள். தரும காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். வேலையாட்கள் ஒத்துழைப்பாக செயல்படுவார்கள். சுபச் செய்திகளால் இல்லத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். காது தொடர்பான இன்னல்கள் குறையும்.  

கும்பம் 
நினைத்த சில பணிகள் நிறைவேறுவதில் காலதாமதம் உண்டாகும். உத்தியோகப் பணிகளில் பொறுப்பு அதிகரிக்கும். சிந்தனையின் போக்கில் மாற்றம் ஏற்படும். உடல் நிலையில் ஏற்ற, இறக்கமான சூழல் உண்டாகும். சூழ்நிலை அறிந்து செயல்படவும். இணைய வர்த்தகப் பணிகளில் கவனத்துடன் செயல்படவும். 

மீனம்
தொழில் தொடர்பாக எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.  வெளி வட்டாரங்களில் புதிய நபர்களின் அறிமுகம் ஏற்படும். கால்நடை வியாபாரத்தில் லாபம் மேம்படும். பொருளாதாரத்தில் ஏற்ற, இறக்கமான சூழ்நிலை உண்டாகும். பிரபலமானவர்களின் நட்பு கிடைக்கும். தவறிய சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். 

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | திரிகிரஹி யோகம்: பணத்தை இழக்க நேரிடும்... இந்த ராசிகள் மார்ச் 31 முதல் மிக மிக கவனம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News