Shani Yantra: கவலைகளை போக்கி நிம்மதியை கொடுக்கும் ‘சனி யந்திரம்’ சனீஸ்வர பரிகாரம்

Lord Shani And Yantra: சனீஸ்வரருக்கான பரிகாரங்களை சனிக்கிழமையில் செய்து சனிபகவானின் அருளாசியைப் பெறுங்கள். இது சனி யந்திரத்தின் பலனளிக்கும் மகத்துவம்  

Written by - Malathi Tamilselvan | Last Updated : Dec 24, 2022, 06:18 AM IST
  • சனிக்கிழமை செய்யும் இந்த செயல்களுக்கு சனீஸ்வரர் மகிழ்ச்சியடைவார்
  • பரிகாரங்களை சனிக்கிழமையில் செய்வது நல்லது
  • சனிபகவானின் கொடூரப் பார்வை விலகி அசுப பலன்களை குறைக்கும் பரிகாரம்
Shani Yantra: கவலைகளை போக்கி நிம்மதியை கொடுக்கும் ‘சனி யந்திரம்’ சனீஸ்வர பரிகாரம் title=

Lord Shani And Yantra: இன்று சனிக்கிழமை. இது நீதியின் கடவுளான சனீஸ்வரரின் பெயரால் அமைந்த அருமையான நாள். மகரம் மற்றும் கும்ப ராசிக்கு அதிபதியான சனீஸ்வரரை  நினைத்தால் அனைவரும் பயப்படுகிறார்கள். ஆனால் உண்மையில் சனீஸ்வரர் கலியுகத்தின் நீதிபதி, மக்களுக்கு அவரவர் செயல்களுக்கு ஏற்ப பலன்களை அளிப்பவர். சனி கிரகத்தின் பாதகமான பலன்களுக்கு பல பரிகாரங்கள் உள்ளன. சனிக்கிழமை விரதம் இருப்பது, ஹனுமானைதுத்திப்பது, பாவச்செயல்களை தவிர்ப்பது, பிறருக்கு தீங்கு விளைவிக்காமல் இருப்பதும், தான தர்மங்கள் செய்வது என பல விஷயங்களால் சனீஸ்வரர் சாந்தமடைவார்.

இவற்றைத் தவிர, சனீஸ்வரரின் சனி யந்திரத்திற்கு முக்கிய இடம் உண்டு. கர்மாவின் அதிபதியான சனீஸ்வரரின் அருளைப் பெற சனி யந்திரத்திரத்தை  பூஜிப்பதும் நல்ல பலன்கள் கொடுக்கும்.

அதே நேரத்தில், ஜாதகத்தில் சனியின் பலவீனம் காரணமாக, வியாபாரத்தில் சிக்கல்கள், வேலை இழப்பு, தேவையற்ற இடத்திற்கு மாற்றப்படுதல், பதவி உயர்வு மற்றும் கடன் போன்றவற்றில் சிக்கல்கள் உள்ளன. இந்த வகையான பிரச்சனையால் நீங்கள் கவலைப்படுகிறீர்கள் என்றால், சனி கிரகத்தை சாந்தப்படுத்த, சனி யந்திரத்தை பூஜிக்கலாம். 

மேலும் படிக்க | குருவின் ராசி மாற்றத்தினால் பஞ்சமஹாபுருஷ ராஜயோகம்; அமோக வாழ்வைப் பெரும் ‘3’ ராசிகள்! 

அத்துடன் சனி பகவானை மகிழ்விக்க சனிக்கிழமை விரதம் இருந்து பூஜை செய்ய வேண்டும். சனி பிரதோஷத்தன்று விரதம் இருக்கவும், சனிக்கிழமையில் கோயிலுக்குச் சென்று எள்ளெண்ணெய் தீபம் ஏற்ற வேண்டும். அன்று, முழு உளுந்து, இரும்பு, எண்ணெய், எள், புஷ்பராக ரத்தினம், கருப்பு துணி போன்றவற்றை தானமாகக் கொடுக்கலாம்.  

சனி யந்திரம் மற்றும் பரிகாரம்

சனி பகவானை சாந்தப்படுத்தி, வாழ்க்கையில் சாதனை மற்றும் செழிப்பைப் பெற புனித சனி யந்திரத்தை வணங்கலாம். சனியின் நட்சத்திரத்திலும் சனிக்கிழமையன்று, சனி ஹோரையில் அல்லது சனி யந்திரத்தை பூஜிப்பது நன்மைகளைக் கொடுக்கும்.  

சனி மந்திரம்
சனி தோஷத்திலிருந்து நிவர்த்தி அடைய, சனீஸ்வரரின் பீஜ மந்திரத்தை உச்சரிக்கவும். 
மந்திரம் - ௐ ப்ராஂ ப்ரீஂ ப்ரௌஂ ஸ: ஶநைஶ்சராய நம:

மேலும் படிக்க | சனீஸ்வரருக்கு ஆகாத 5 ராசிகள்! சனிக்கிழமையில் செய்யும் இந்த பரிகாரங்கள் பலன் தரும்

இந்த சனி கிரக பரிகாரங்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். சனி பீஜ மந்திரத்தைச் சொல்லி, சனி யந்திரத்தை வணங்குவதைத் தொடங்கிய பிறகு, வாழ்க்கையில் அற்புதமான மாற்றத்தை அனுபவிக்கலாம். சனி சாந்த பரிகாரங்கள் நமது வாழ்க்கையில் நிம்மதியைக் கொடுக்கும். 

சனியின் இயக்கம் மிகவும் மெதுவாக உள்ளது. எனவே நல்லது அல்லது கெட்டதைக் கொடுக்க சனி சிறிது காலத்தை எடுத்துக் கொள்வார்.  

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

 மேலும் படிக்க | புத்தாண்டு 2023 கணிப்புகள்: பிரச்சனையை தவிர்க்க ‘3’ ராசிகளுக்கு எச்சரிக்கை தேவை!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News