நாம் இந்த உலகிற்கு வர முக்கிய காரணமாக இருந்த நம் முன்னோர்களை ஒரு போதும் மறக்கக் கூடாது. நமது வாழ்நாளில் அவசியம் செய்ய வேண்டிய கடமைகளில் ஒன்று, பித்ருக்களுக்கு செய்ய வேண்டிய காரியங்கள். இந்த கடமையில் தவறினால் முன்னோர்களின் கோபத்துக்கு ஆளாக நேரிடும். ஒவ்வொரு மாதமும் அமாவாசை திதி அன்று நமது பித்ருக்களை அதாவது முன்னோர்களை நினைத்து தர்ப்பணம் செய்வோம். அது தவிர அவர்கள் மறைந்த தமிழ் மாதத்தில், மறைந்த திதியில், சிரார்த்தம் செய்வோம்.
அமாவாசை தர்ப்பணத்தை பொறுத்தவரை, மாதம் மாதம் வரும் அமாவாசையில், ஆடி அமாவாசை, புரட்டாசி மாதத்தில் வரும் மகாளய அமாவாசை, தை அமாவாசை, ஆகியவை மிக மிக முக்கியத்துவம் வாய்ந்தது. தட்சிணாயன புண்ணிய காலத்தில் வரும் ஆடி அமாவாசை பித்ரு தர்ப்பணத்துக்கு மிகவும் விசேஷமான நாள். அந்த வகையில் ஆடி மாதத்தில் 2 அமாவாசை வருகிறது. அதாவது ஆடி மாதத்தில் முதல் நாள் ஆடி 1 - ம் தேதி (ஜூலை - 17) அன்றும் ஆடி 31-ம் தேதி (ஆகஸ்ட் -16) அன்றும் அமாவாசை தினமாக அமைகின்றன. பொதுவாக இதுபோன்று இரண்டு அமாவாசைகள் வரும் மாதத்தை அதிக மாதம் என்பார்கள். அதிக மாதங்கள் அனைத்துமே முன்னோர்கள் வழிபாட்டுக்கானவை. இந்த மாதத்தில் செய்யும் பித்ரு வழிபாடுகள், ஏழைகளுக்கு வழங்கும் தான தர்மங்கள் ஆகியன மிகுந்த பலன்களைக் கொடுக்கும் என்கிறது சாஸ்திரம்.
மேலும் படிக்க | சூரியன் பெயர்ச்சியால் 24 மணி நேரத்தில் 5 ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் மாறும்
இந்த நிலையில் அமாவாசை அன்று அனைத்து முன்னோர்களையும் நினைவு கூற வேண்டும். புனித நீர் நிலைகளுக்கு, அதாவது கடல் அல்லது ஆறுகளுக்கு சென்று புனித நீராடி, நம் முன்னோர்களின் ஆத்ம சாந்திக்காக பிரார்த்தனை செய்து, அவர்களது ஆசியை பெற தர்ப்பணம் செய்வது மிகவும் நல்லது. இதனால் பித்ரு தோஷம் அனைத்தும் நீங்கி, குடும்பத்தில் உள்ள பிரச்சனைகள் நீங்கும். அதிலும் சோமாவதி அமாவாசை வந்துள்ள இந்த நன்னாளில் அஸ்வத்த விருக்ஷம் என்னும் அரசமரத்தை பக்தியுடன் 108 அல்லது 56 அதுவும் இல்லையென்றால் குறைந்த பட்சம் 7 முறையாவது சுற்றி வருவது மிகுந்த புண்ணியகரமானதாகும். ஆகவே இந்த புண்ணிய தினத்தில் வேப்பமரத்துடன் இருக்கும் அரசமரத்தை சுற்றி வருவது மிகுந்த நன்மைகளை தரும்.
அதுமட்டுமின்றி இந்த ஆண்டு இரண்டு முறை ஆடி அமாவாசை இருப்பதால், ஆகஸ்ட் 16-ம் தேதி வரும் அமாவாசையையே ஆடி அமாவாசையாகக் கருதி முன்னோர் வழிபாடு செய்யவேண்டும். ஏனெனில் ஒரு மாதத்தில் ஜன்ம நட்சத்திரம் இரண்டு தினங்கள் வரும் என்றால், இரண்டாவது நட்சத்திரத்தையே நாம் ஜன்ம நட்சத்திரமாகக் கருதவேண்டும்.
ஆடி மாதம் வேறு என்னென்ன விசேஷங்கள் வரவிருக்கிறது
ஜூலை 22 - ம் தேதி ஆடிப்பூரம்,
ஆகஸ்ட் - 1 -ம் தேதி ஆடித் தபசு,
ஆகஸ்ட் - 3 - ம் தேதி ஆடிப்பெருக்கு,
ஆகஸ்ட் 9 -ம் தேதி ஆடிக்கிருத்திகை.
இந்த நாள்களில் நாம் இறைவழிபாடு செய்து இந்த ஆடி மாதத்தில் சகல நன்மைகளையும் பெறலாம்.
மேலும் படிக்க | சனி வக்ர நிவர்த்தி: தீபாவளிக்கு பிறகு இந்த ராசிகளின் தலைவிதி மாறப் போகுது
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ