உதயமாகும் குரு! ஹன்ஸ ராஜயோகம் பெறும் ‘சில’ ராசிகள்!

குரு உதயம் 2023: குரு அனைத்து கிரகங்களின் அதிபதி என அழைக்கப்படுகிறது. அவர் செல்வம், பணம், வளம் மற்றும் ஆடம்பர வாழ்க்கையின் காரணியாகக் கருதப்படுகிறார். 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Feb 1, 2023, 08:53 PM IST
  • உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய வேலை வாய்ப்பு கிடைக்கும்.
  • வாகனம் வாங்கும் வாய்ப்பும் உண்டாகும்.
  • குடும்பத்தில் நிம்மதியான சூழல் நிலவும்.
உதயமாகும் குரு! ஹன்ஸ ராஜயோகம் பெறும் ‘சில’ ராசிகள்! title=

குரு உதயம் 2023: ஒவ்வொரு மாதமும் ஏதேனும் ஒரு கிரகம் அதன் போக்கை மாற்றுகிறது அல்லது பெயர்ச்சி ஆகிறது. கிரகங்கள் தனது இயக்கங்களை மாற்றுவது அனைத்து 12 ராசிகளுக்கும் சுப அல்லது அசுப விளைவுகளை ஏற்படுத்துகிறது. அதே சமயம் பல சுப யோகங்களும் இதன் மூலம் உருவாகின்றன. ஜோதிட சாஸ்திரத்தில், குரு அனைத்து கிரகங்களின் அதிபதி என அழைக்கப்படுகிறது. அவர் செல்வம், பணம், வளம் மற்றும் ஆடம்பர வாழ்க்கையின் காரணியாகக் கருதப்படுகிறார். ஒருவரின் ஜாதகத்தில் குரு சுப ஸ்தானத்தில் இருந்தால், அது பல சுப பலன்களைத் தரும். தேவகுரு பிரகஸ்பதி 29 ஏப்ரல் 2023 அன்று உதயமாகிறார். இது ஹன்ஸ ராஜ யோகத்தை உருவாக்கப் போகிறது. ஜோதிடத்தில், இந்த யோகம் மிகவும் மங்களகரமானதாகவும் பலன் தருவதாகவும் கருதப்படுகிறது. இந்த யோகம் அமைவதால் சில ராசிக்காரர்கள் பெரிதும் பலன் அடைவார்கள்.

கடக ராசி

கடக ராசிக்காரர்கள் தேவகுருவின் உதயத்தால் பல நன்மைகளைப் பெறுவார்கள். தொழில், வியாபாரத்தில் நல்ல பலன்களைப் பெறுவீர்கள். எந்த வேலையில் கை வைத்தாலும் அதில் வெற்றி கிடைக்கும். உங்களின் நீண்ட நாள் ஆசைகள் அனைத்தும் நிறைவேறும். அதிர்ஷ்டம் உங்களுடன் இருக்கும் மற்றும் புதிய வேலை வாய்ப்புகளைப் பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

மேலும் படிக்க | February Horoscope 2023: பிப்ரவரி மாதம் யாருக்கு எழுச்சி, யாருக்கு வீழ்ச்சி? முழு ராசிபலன் இதோ

தனுசு ராசி

தனுசு ராசிக்காரர்களுக்கு குருவின் உதயம் மிகவும் நன்மை பயக்கும். திடீரென பண ஆதாயங்கள் ஏற்படும். இதன் காரணமாக முன்பை விட பொருளாதார நிலை மேம்படும். முதலீடு செய்ய இதுவே சிறந்த நேரம். வாகனம் வாங்கும் வாய்ப்பும் உண்டாகும். குடும்பத்தில் நிம்மதியான சூழல் நிலவும்

மீன ராசி

குரு உதயம் மீன ராசிக்காரர்களுக்கு வரப்பிரசாதமாக அமையும். குரு உதயத்தால் உருவாகும் ஹன்ஸ ராஜயோகம் இந்த ராசிக்காரர்களுக்கு சுப பலன்களைத் தரும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். புதிய பணவரவுகள் உருவாகி வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய வேலை வாய்ப்பு கிடைக்கும்.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் உள்ளன. ZEE NEWS அதை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | பிப்ரவரி 2023 ராசி பலன்: ‘இந்த’ ராசிகளுக்கு பண விரயம்; நிதி நெருக்கடி!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News