புதன், சுக்கிரன் சேர்க்கை: இந்த 3 ராசிகளுக்கு மிகப்பெரிய அதிர்ஷ்டம்

புதன் மற்றும் சுக்கிரன் மாற்றத்தின் தாக்கம் மேஷம் முதல் மீனம் வரை இருக்கும். 

Written by - Vijaya Lakshmi | Last Updated : Jul 22, 2022, 01:37 PM IST
  • மிதுன ராசியில் மகாராஜ யோகம் உருவாகி வருகிறது.
  • இரண்டு ராஜயோகங்கள் உருவாகி வருகின்றன.
  • கன்னி ராசிக்கும் இந்த ராஜயோகம் சாதகமாக அமையும்.
புதன், சுக்கிரன் சேர்க்கை: இந்த 3 ராசிகளுக்கு மிகப்பெரிய அதிர்ஷ்டம் title=

ஜோதிட சாஸ்திரத்தின் படி ஒரே ராசியில் இரண்டு கிரகங்கள் சேர்ந்தால் அது யுதி எனப்படும். அதன்படி கடந்த ஜூலை 13 ஆம் தேதி சுக்கிரன் கிரகம் மிதுன ராசிக்குள் நுழைந்தது.இந்த ராசியில் புதன் கிரகம் ஏற்கனவே அமர்ந்துள்ளது. இப்படிப்பட்ட நிலையில் மிதுன ராசியில் புதனும் சுக்கிரனும் இணைந்திருப்பதால் சில ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கலாம். அதேபோல்  ஒரே ராசியில் இந்த இரு கிரகங்களும் இணைந்து இருப்பதால் மகா ராஜயோகம் உருவாகி வருகிறது. இதன் பலன் 12 ராசிகளிலும் காணப்பட்டாலும், 3 ராசிக்காரர்கள் இந்த மகத்தான யோகத்தால் அளவுகடந்த நன்மைகளை அடைவார்கள். இந்த ராசிக்காரர்களின் பெயர்ச்சி ஜாதகத்தில் இரட்டை ராஜயோகம் உருவாகி வருகிறது. அந்த வகையில் இந்த சேர்க்கையால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு அதீத பலனை உள்ளனர் என்பதை பார்ப்போம்.

மிதுனம்- புதன் மற்றும் சுக்கிரனின் சேர்க்கை மிதுன ராசிக்காரர்களுக்கு நல்ல செய்திகளை வழங்க முடியும். புதன், சுக்கிரன் இணைவதால் இந்த ராசியில் மகர யோகம் உருவாகி வருகிறது. இதன் காரணமாக பூர்வீகவாசிகள் பணப் பலன்களுடன் தொழிலில் பதவி உயர்வு பெறலாம். புதன் தனது சொந்த ராசியில் இருப்பதால் பத்ரா என்ற ராஜயோகம் உருவாகி வருகிறது. அதே சமயம் சுக்கிரனுடன் புதன் சேர்ந்து இருப்பதால் கேந்திர திரிகோண ராஜயோகமும் உருவாகி வருகிறது.

மேலும் படிக்க | ஜூலை 29 முதல் இந்த ராசிகளுக்கு நல்ல நேரம்: குரு வக்ர பெயர்ச்சியால் குபேர யோகம்

கன்னி - கன்னி ராசிக்காரர்களுக்கு புதன் மற்றும் சுக்கிரன் கிரகங்களும் இணைவதால் பத்ரா என்ற ராஜயோகம் உருவாகி வருகிறது.இந்த யோகம் வியாபாரிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். பிள்ளைகள் மூலம் நல்ல செய்தி வருவதற்கான அறிகுறிகள் தென்படும். இந்த ராசியில் புதாதித்ய யோகம் அமைவதால் அதிர்ஷ்டம் உண்டாகும். நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள வேலைகள் நிறைவேறும். இந்த கலாத்தில் பாக்கியம், கர்மா மற்றும் செல்வத்தின் அதிபதிகளான பாக்யேஷ், கர்மேஷ், தனேஷ் ஆகியோர் உடன் இருப்பதால் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். புதிய வேலை வாய்ப்பு கிடைக்கலாம். 

மகரம்- மகர ராசிக்காரர்களின் ஜாதகத்தில் இரண்டு ராஜயோகங்கள் உருவாகி வருகின்றன. முதல் ருச்சக் மற்றும் இரண்டாவது ஷஷ் ஆகும். இந்த இரண்டு ராஜயோகங்கள் அமைவதால் திடீர் பண ஆதாயம் கிடைக்கும்.வேலை தேடுபவர்களுக்கு புதிய வேலை வாய்ப்பு கிடைக்கும். அதிர்ஷ்டம் உங்களை ஆதரிக்கும். முதலீடு செய்வதற்கு சாதகமான காலம். எனினும், எந்த வித புதிய முடிவையும் எடுப்பதற்கு முன் கவனமாக சிந்தித்து செயப்லடுங்கள். உங்கள் ராசியில் ஏழரை நாட்டு சனி நடக்கிறது. இந்த நேரத்தில், அதிர்ஷ்டத்தின் ஆதரவை பெறுவீர்கள். நீண்ட நாட்களாக நடக்காமல் நிலுவையில் உள்ள பணிகள் முடிவடையும்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிபடுத்தவில்லை.)

மேலும் படிக்க | ஒரே மாதத்தில் நிகழும் 3 கிரகங்களின் ராசி மாற்றம்; நேரடி அருள் பெரும் ராசிகள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News