மார்ச் மாத ராசிபலன்: இந்த ராசிகளுக்கு லட்சுமி, குபேரரின் அபரிமிதமான அருள் கிடைக்கும்

March Monthly Horoscope: சில ராசிகளில் கிரக மாற்றங்களால் அதிகப்படியான நன்மைகள் கிடைக்கும். இவர்களுக்கு அன்னை லட்சுமி மற்றும் குபேரரின் பரிபூரண அருள் கிடைக்கும். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Mar 2, 2023, 03:24 PM IST
  • கன்னி ராசிக்காரர்களுக்கு மார்ச் மாதம் சாதகமாக இருக்கும்.
  • இந்த நேரத்தில், இவர்கள் தங்களது தொழிலில் வெற்றி பெற வாய்ப்பு உள்ளது.
  • உங்கள் கடின உழைப்பும் திறமையும் உங்கள் இலக்கை அடைய உதவும்.
மார்ச் மாத ராசிபலன்: இந்த ராசிகளுக்கு லட்சுமி, குபேரரின் அபரிமிதமான அருள் கிடைக்கும் title=

மார்ச் 2023 இல் கிரக மாற்றங்கள், கிரங்களில் அதன் தாக்கம்: ஜோதிடத்தின் படி, அனைத்து கிரகங்களின் பெயர்ச்சி, உதயம் அல்லது அஸ்தமனம் என அனைத்து விஷயங்களும் ராசிகளின் வாழ்க்கையில் தாக்கங்களை ஏற்படுத்தும், மார்ச் மாதம் ஆரம்பமாகிவிட்டது. இந்த மாதத்தில் பல கிரக மாற்றங்கள் நிகழவுள்ளன. 

மார்ச் மாதத்தில் 4 பெரிய கிரகங்கள் மாறவுள்ளன. இந்த மாதம் சூரியன், சுக்கிரன், புதன், செவ்வாய் ஆகிய கிரகங்கள் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு மாறும். மேலும், இந்த மாதம் சனி பகவான் உதயமாவார், தேவகுரு அஸ்தமிப்பார். கிரகங்களின் இந்த மாற்றங்களின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும். எனினும், சில ராசிகளில் இந்த மாற்றங்களால் அதிகப்படியான நன்மைகள் கிடைக்கும். இவர்களுக்கு அன்னை லட்சுமி மற்றும் குபேரரின் பரிபூரண அருள் கிடைக்கும். அந்த அதிர்ஷ்டக்கார ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம். 

இந்த ராசிக்காரர்கள் மார்ச் மாதத்தில் அபரிமிதமான பலன்களைப் பெறுவார்கள்

ரிஷபம்

ஜோதிட சாஸ்திரப்படி, ரிஷபம் ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் அற்புதமாக இருக்கும். மார்ச் 15 முதல் நடக்கும் விஷயங்கள் உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.  தொழிலில் வெற்றி கிடைக்கும். இந்த ராசிக்காரர்களின் ஆரோக்கியம் மேம்படும். திருமண வாழ்க்கையில் காதல் நிலைத்திருக்கும், உங்களுக்கு எதிராக இருந்தவர்கள் உங்களுக்கு ஆதரவாக மாறுவார்கள். 

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் மார்ச் மாதத்தில் ஏற்படும் கிரகப் பெயர்ச்சியின் தாக்கத்தை தெளிவாகக் காணலாம். இந்த நேரத்தில், வணிகர்கள் வாரத்தின் மூன்றாம் பகுதியில் லாபம் பெற வாய்ப்புள்ளது. இதுமட்டுமின்றி, குரு பகவான் இவர்களின் மன உளைச்சலைக் குறைப்பார். உறவினர்களுடனான உறவில் இனிமை இருக்கும். மனைவி மற்றும் குடும்ப உறுப்பினர்களின் முழு ஆதரவு கிடைக்கும். இது மட்டுமின்றி புதிய வருமான ஆதாரத்தையும் உருவாக்குவீர்கள்.

மேலும் படிக்க | karma karagan: ஏழரையா? கண்டச்சனியா? சனி மகாதசை என்றாலும் பரிகாரம் அவசியம் 

கன்னி 

கன்னி ராசிக்காரர்களுக்கு மார்ச் மாதம் சாதகமாக இருக்கும். இந்த நேரத்தில், இவர்கள் தங்களது தொழிலில் வெற்றி பெற வாய்ப்பு உள்ளது. உங்கள் கடின உழைப்பும் திறமையும் உங்கள் இலக்கை அடைய உதவும். உத்யோகத்தில் நல்ல சலுகை கிடைக்கும். பதவி உயர்வுக்கான வாய்ப்புகளும் உருவாகி வருகின்றன. காதல் மற்றும் திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும்.

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு மார்ச் மாதத்தில் கிரகங்களின் சஞ்சாரத்தால் கடின உழைப்புக்கு முழு பலன் கிடைக்கும். வியாபாரத்தில் முன்னேற்றம் அடைவதில் வெற்றி கிடைக்கும். திருமண வாழ்க்கையிலும் காதல் நிலைத்திருக்கும். இது மட்டுமின்றி பல முக்கிய பிரச்சனைகளுக்கும் தீர்வு காணலாம். தனிப்பட்ட மற்றும் சமூக பணிகளில் நேரத்தை செலவிடுவீர்கள்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | மீனத்தில் சுக்கிரன் பெயர்ச்சி: 4 ராசிகளுக்கு அமோகமான ராஜயோகம் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

 

Trending News