வக்ர சனியால் வருத்தப்படப் போகும் 4 ராசிகளின் கதி? நிதானம் அவசியம்

Bad Effects Of Saturn வக்ர நிலையில் இருந்து நிவர்த்தி அடையும் சனீஸ்வர பகவானால், கஷ்டப்படப்போகும் ராசிகள் இவை. கவனமாக இருக்க வேண்டிய ராசிகள் குறித்து தெரிந்துக் கொள்ளுங்கள்.

Written by - Malathi Tamilselvan | Last Updated : Oct 22, 2022, 11:45 PM IST
  • சனீஸ்வரரின் வக்ர நிவர்த்தி! அனைவருக்கும் நிம்மதி பெருமூச்சா?
  • கவலையில் இந்த ராசிக்காரர்கள்
  • வக்ர நிவர்த்தி அடையும் சனியின் தாக்கம்
வக்ர சனியால் வருத்தப்படப் போகும் 4 ராசிகளின் கதி? நிதானம் அவசியம் title=

சனீஸ்வர பகவான் 2022 அக்டோபர் 23ம் தேதி மகர ராசியில் வக்ர நிவர்த்தி அடைகிறார். அடுத்த ஆண்டு, அதாவது 2023 ஜனவரி 17ம் தேதி மகர ராசியிலிருந்து கும்ப ராசிக்கு பெயர்ச்சி ஆக உள்ளார். தற்போது வக்ர நிலையில் இருந்து நிவர்த்தி அடையும் சனீஸ்வர பகவானால், கஷ்டப்படப்போகும் ராசிகள் இவை. கவனமாக இருக்க வேண்டிய ராசிகள் குறித்து தெரிந்துக் கொள்ளுங்கள்.

தீபாவளிக்கு ஒரு நாள் முன்னதாக சனி பகவான் மகர ராசியில் வக்ர நிவர்த்தி அடையப் போகிறார். சனியின் இந்த சஞ்சாரம் பல ராசிக்காரர்களின் வாழ்வில் ஏற்றத் தாழ்வுகளைத் தரும். அடுத்த சனி பெயர்ச்சி நடைபெறும் ஜனவரி 17 வரை கவனமாக இருக்க வேண்டிய ராசிகள் இவை....  
 
ரிஷபம்: மகரத்தில் சஞ்சரிக்கும் சனி பகவான், அடுத்த 3 மாதங்கள் ரிஷப ராசியினருக்கு சிரமங்களைத் தருவார். கடினமாக உழைத்தால் மட்டுமே வெற்றி கிடைக்கும். பணி இடத்திலும் சில தடைகள் ஏற்படலாம். திடீர் செலவுகள் அதிகமாக இருக்கும். பொருளாதார நிலையும் மந்தமாகும்.

மேலும் படிக்க | காதலுக்காக எதையும் தியாகம் செய்யத் தயாராக உள்ள '4' ராசிப் பெண்கள் 

​கடக ராசி: கண்ட சனி நடக்கும் கடக ராசியினர் இந்த சனிப் பெயர்சியின் மூன்று மாத காலமும் பொறுமையாக இருக்கவேண்டும். பல பிரச்னைகளை சந்தித்த நீங்கள். தற்போது நிதி நிலையில் கவனமாக இருப்பது அவசியம். தொழில், வியாபாரத்தில் சில சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டியது இருக்கும். செலவுகளும் கணிசமாக அதிகரிக்கும்.

​துலாம் ராசி: துலாம் ராசிக்கு அர்த்தாஷ்டமச் சனி நடப்பதால், ஏற்கனவே பல பிரச்சனைகளை அனுபவித்து கொண்டிருக்கும் நிலையில், வக்ர கதியில் இருந்து நிவர்த்தியாகும் சனி, காரியத் தடைகளை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.

குடும்ப உறவுகள் விஷயத்தில் உங்களுக்கு நெருக்கமானவர்களுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படும். ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டியது நல்லது. செலவுகளையும் கட்டுப்படுத்த முயற்சி செய்யவும்.

மேலும் படிக்க | சனி பகவானின் மாற்றம்: இந்த ராசிகளுக்கு மகாலட்சுமியின் ஆசி கிடைக்கும், செல்வம் பெருகும்

​மகர ராசி: ஜென்ம ராசியில் சஞ்சரிக்கும் சனி பகவான், அடுத்த பெயர்ச்சி வரை சற்று மனக் கவலைகளை அதிகமாகவே தருவார். வியாபாரத்தில் ஒன்றன்பின் ஒன்றாக பிரச்சனைகளை சமாளிக்க வேண்டியது இருக்கும். செலவுகளும் குழப்பமும் அதிகரிக்கும். உடன்பிறந்தவர்களின் ஆரோக்கியத்தில் சற்று கவனமாக இருக்கவும்.

​கும்ப ராசி: கும்ப ராசிக்கு மகர ராசியில் சனி சஞ்சரிக்கக்கூடிய காலம் மட்டுமல்லாமல், அடுத்து நடக்க உள்ள சனி பெயர்ச்சியின் போது, சனி பகவான் உங்கள் ராசியிலேயே ஜென்ம ராசியில் சஞ்சரிக்கப்போகிறார்.

சனி மாற்றத்தால் அலைச்சலும், செலவும் அதிகமாக இருக்கும். ஆரோக்கியம் மனக்கவலையைத் தரக்கூடியதாக இருக்கும், எனவே ஆரோக்கியத்தில் அலட்சியமாக இருக்க வேண்டாம். பயணங்கள் அதிகரிக்கும். பயணத்தின் மூலம் நிறைய பணம் செலவாகும்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை  உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | சுக்கிரன் பெயர்ச்சியால் உருவாகும் மாளவ்ய யோகம்: இந்த ராசிகளுக்கு அமோகமான ராஜயோகம் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News