உலக கோப்பை 2019: மாலை 6 மணிக்கு ஆஸ்திரேலியா vs ஆப்கானிஸ்தான் பலப்பரீட்சை

உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெரும் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா அணியும் மற்றும் ஆப்கானிஸ்தான் அணியும் மோதுகின்றன.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jun 1, 2019, 11:58 AM IST
உலக கோப்பை 2019: மாலை 6 மணிக்கு ஆஸ்திரேலியா vs ஆப்கானிஸ்தான் பலப்பரீட்சை title=

டெல்லி/இங்கிலாந்து: உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று ஆப்கானிஸ்தான் அணியும் மற்றும் ஆஸ்திரேலியா அணியும் மோத உள்ளன. இந்த ஆட்டம் இந்திய நேரப்படி பிற்பகல் 6 மணிக்கு தொடங்கும். இந்த கவுண்டி மைதானத்தில் நடைபெற உள்ளது.

இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் கடந்த மே 30 ஆம் தேதி துவங்கிய 2019 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் ஜூன் 14 வரை நடைபெறுகிறது. இந்த தொடரில் மொத்தம் 10 அணிகள் பங்கேற்கிறது. அதில் இந்தியா, இங்கிலாந்து, தென் ஆப்ரிக்கா, ஆஸ்திரேலியா, வங்கதேசம், பாகிஸ்தான், இலங்கை, நியூசிலாந்து மேற்கிந்திய தீவுகள், ஆப்கானிஸ்தான் அணிகள் ஆகும். 

மொத்தம் 48 போட்டிகள் நடக்கவுள்ளது. அதில் 45 லீக் போட்டிகள் மற்றும் 3 நாக் அவுட் போட்டிகள் என 12 நகரங்களில் நடக்கிறது. ஏற்கனவே இரண்டு போட்டிகள் முடிவடைந்துள்ளது. முதல் போட்டியில் இங்கிலாந்தும், 2வது போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியும் வெற்றி பெற்றுள்ளது. 

இன்று இரண்டு போட்டிகள் நடைபெருகிறது. 3 மணிக்கு நடைபெற உள்ள போட்டியில் நியூசிலாந்து மற்றும் இலங்கை போதுகின்றன. 6 மணிக்கு நடைபெற உள்ள போட்டியில் ஆஸ்திரேலியா அணி ஆப்கானிஸ்தான் அணியை எதிர்க்கொள்கிறது.

இந்த நிலையில், இன்று கவுண்டியில் நடைபெற உள்ள நான்காவது ஆட்டத்தில் ஐசிசி தரவரிசையில் 5_வது இடத்தில் இருக்கும் ஆரோன் பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலியா அணியும், 10_வது இடத்தில் இருக்கும் குல்பாடின் நாபி தலைமையிலான ஆப்கானிஸ்தான் அணியும் மோத உள்ளன.

ஆஸ்திரேலியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் ஒருநாள் போட்டியில் 2 ஆட்டங்கள் நேருக்கு நேர் மோதியுள்ளன. இரண்டு போட்டியிலும் ஆஸ்திரேலியா அணியே வெற்றி பெற்றுள்ளது.

பாகிஸ்தானுக்கு எதிரானா பயிற்ச்சி ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணி வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. ஆனாலும் ஆஸ்திரேலிய அணிக்கே வெற்றி வாய்ப்பு அதிகமாக உள்ளது. இரு அணிகளும் வெற்றியுடன் போட்டியை தொடங்க முயற்சிக்கும் என்பதால் ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவு இருக்காது.

ஆப்கானிஸ்தான்: முகம்மது ஷாஜாத் (WK), குல்பாடின் நயீப் (க), ஹஸ்ரதூல்லா சஜாய், ரஹ்மத் ஷா, ஹஷ்மத்துல்லா ஷாஹிதி, அஸ்கார் ஆப்கான், முகம்மது நபி, ரஷீத் கான், நஜிபுல்லா ஸத்ரான், முஜீப் உர் ரஹ்மான், தாலாட் ஸத்ரான், அத்தாப் ஆலம், நொர் அலி சத்ரான், சாமில்லாஹ் ஷின்வாரி, ஹமித் ஹாசன்

ஆஸ்திரேலியா: டேவிட் வார்னர், ஸ்டீவன் ஸ்மித், ஷான் மார்ஷ், க்ளென் மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டோனிஸ், பாட் கம்மின்ஸ், ஆடம் ஸம்பா, மிட்செல் ஸ்டார்க், ஜேசன் பெஹ்ரெண்டர்ஃப், கேன் ரிச்சர்ட்சன், நாதன் கௌல்டர் நைல், உஸ்மான் கவாஜா, நாதன் லியோன்

Trending News