50% ஊதிய குறைப்புக்கு ஒப்புக் கொண்ட மெஸ்ஸி பார்சிலோனா அணியிலிருந்து ஏன் வெளியேறினார்?

கால்பந்தாட்ட பிரபலம், உலகம் முழுவதும் ரசிகர்களைக் கொண்ட மெஸ்ஸியின் கண்ணீர் மல்கும் முகத்தை இதற்கு முன்பு யாரும் பொதுவெளியில் பார்த்திருக்கமுடியாது. இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கால்பந்தாட்ட ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸியின் கண்ணீர் ததும்பிய வார்த்தைகளை கேட்ட ரசிகர்களும் அழுதார்கள். 

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Malathi Tamilselvan | Last Updated : Aug 8, 2021, 07:40 PM IST
  • 13 வயதில் பார்சிலோனா அணியுடன் இணைந்தார் மெஸ்ஸி
  • 21 ஆண்டுகளாக பார்சிலோனா கிளப்புக்காக விளையாடினார்
  • ஊதியம் தொடர்பான சிக்கல்களால் மெஸ்ஸி பார்சிலோனா கிளப்பில் இருந்து வெளியேறினார்
50% ஊதிய குறைப்புக்கு ஒப்புக் கொண்ட மெஸ்ஸி பார்சிலோனா அணியிலிருந்து ஏன் வெளியேறினார்? title=

கால்பந்தாட்ட பிரபலம், உலகம் முழுவதும் ரசிகர்களைக் கொண்ட மெஸ்ஸியின் கண்ணீர் மல்கும் முகத்தை இதற்கு முன்பு யாரும் பொதுவெளியில் பார்த்திருக்கமுடியாது. இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கால்பந்தாட்ட ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸியின் கண்ணீர் ததும்பிய வார்த்தைகளை கேட்ட ரசிகர்களும் அழுதார்கள். 

பார்சிலோனா கிளப்பில் இனி மெஸ்ஸி இல்லை என்ற செய்தியை அந்த கிளப்பே அதிகாரபூர்வமாக அறிவித்திருந்தது. அது தொடர்பாக செய்தியாளர்களை முதல்முறையாக இன்று மெஸ்ஸி சந்தித்தார். 21 ஆண்டுகளாக பார்சிலோனா கிளப்புக்காக விளையாடி வந்த மெஸ்ஸி, ‘இனிமேல் நான் திரும்ப வரப்போவதில்லை’என்று கண்ணீருடன் விடைபெற்றார். 

அப்போது பேசிய மெஸ்ஸி, பார்சிலோனா அணியில் இருப்பதற்காக தான் முயற்சிகள் அனைத்தையும் மேற்கொண்டதாகவும் தனது சம்பளத்தில் 50 சதவீதத்தை குறைக்கவும் ஒப்புக்கொண்டதாகவும் தெரிவித்தார். ஆனால் தான் ஏற்கனவே வாங்கிய ஊதியத்தை விட 30 சதவீதம் கூடுதலாக கேட்டதாக கூறப்படுவது பொய் என்றும் தெரிவித்தார். ஆனாலும் அவரால் அணியில் தொடர முடியவில்லை.

‘எனக்கு சில நேரம் நன்றாக இருந்தது, அதேபோல் கெட்ட நேரத்தையும் எதிர்கொண்டேன். ஆனால் மக்கள் என்னிடம் காட்டிய அன்பு எப்போதும் ஒன்றுபோலவே இருந்தது’ என்று கூறிய ம் மெஸ்ஸி நெகிழ்ந்துபோனார்.  
பார்சிலோனா அணிக்காக விளையாடிய மெஸ்ஸி இதுவரை 10 லீக் பட்டங்கள், 4 முறை சாம்பியன் லீக், 3 முறை கிளப்புகளுக்கு இடையேயான உலக கோப்பை ஆகியவற்றின் வெற்றியில் பார்சிலோனா கிளப்புக்கு உறுதுணையாக இருந்தார்.  

பார்சிலோனா கிளப்பில் இணைந்த முதல் நாளில் இருந்து 21 ஆண்டுகளாக கிளப்பிற்கு தன்னால் முடிந்த அனைத்தையும் வழங்கியுள்ளதாகவும்,  இங்கிருந்து வெளியேறும் சூழல் வரும் என நினைத்துக் கூட பார்த்ததில்லை என்றும் கூறினார். கிளப்பில் தன்னுடன் விளையாடிய சக வீரர்களுக்கும் மெஸ்ஸி நன்றி தெரிவித்துக்கொண்டார்.

13 வயதில் இருந்து பார்சிலோனாவில் இருப்பதாகவும், தற்போது 21 ஆண்டுகள் கழித்து மனைவி மற்றும் குழந்தைகளுடன் வெளியேறுவதாக கூறிய மெஸ்ஸியின் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தது.

கொரோனா பரவலால் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக ரசிகர்களை பார்க்க முடியவில்லை என்று வருத்தம் தெரிவித்த மெஸ்ஸி, தனது பெயரை உற்சாகமாக கூச்சலிடும் ரசிகர்களை பார்க்காமலேயே செல்வது வருத்தமளிப்பதாகவும் சொல்லி விடைபெற்றார் மெஸ்ஸி.

Also Read | Football: இனி லியோனல் மெஸ்ஸி எந்த அணிக்கும் சொந்தமில்லை, தனி வீரரானார்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News