T20 World cup: இந்திய அணி படுமோசமாக தோற்கும் என்பதை முன்பே கணித்த பாகிஸ்தான் வீரர்

20 ஓவர் உலக கோப்பை 2வது அரை இறுதி போட்டியில் இங்கிலாந்து அணி இந்தியாவை வீழ்த்தி பைனலுக்கு செல்லும் என பாகிஸ்தான் முன்னாள் வீரர் சோயிப் அக்தர் முன்பே கணித்துவிட்டார். 

Written by - S.Karthikeyan | Last Updated : Nov 11, 2022, 06:43 PM IST
T20 World cup: இந்திய அணி படுமோசமாக தோற்கும் என்பதை முன்பே கணித்த பாகிஸ்தான் வீரர் title=

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் 20 ஓவர் உலக கோப்பை 2வது அரையிறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணியிடம் இந்திய அணி தோல்வியடைந்தது. இந்தியாவில் இருக்கும் 100 கோடிக்கும் மேலான கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் இந்திய அணி இங்கிலாந்தை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு செல்ல வேண்டும், அங்கு பாகிஸ்தானை வீழ்த்தி கோப்பையை மீண்டும் வெல்ல வேண்டும் என்ற பேராசையில் காத்திருந்தவர்களுக்கு பெருத்த ஏமாற்றமே மிஞ்சியது. 

ஆனால், பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளரான சோயிப் அக்தர் இந்திய அணி, இங்கிலாந்து அணியிடம் மிக மோசமாக தோற்கும் என முன்பே கூறிவிட்டார். போட்டிக்கு முன்பாக அவர் இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் 2வது அரையிறுதிப் போட்டி குறித்து கருத்து தெரிவிக்கும்போது, இந்திய அணி இங்கிலாந்து அணியிடம் தோல்வியடையும் என தெரிவித்திருந்தார். இங்கிலாந்து அணி சிறப்பாக விளையாடி இந்திய அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறும், இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகள் தான் இறுதிப் போட்டியில் மோதும் எனவும் ஆருடம் தெரிவித்திருந்தார்.

மேலும் படிக்க | ICC T20 World Cup : இந்தியாவை படுகுழியில் தள்ளிய இந்த 4 வீரர்கள் - முழு விவரம்!

அவரின் இந்த கருத்துக்கு இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் சரியான பதிலடியை கொடுத்தனர். கடைசியில் அவருடை ஆருடம் தான் பலித்தது. அவர் கூறியதுபோலவே இந்திய அணி, இங்கிலாந்து அணியிடம் 10 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்து வெளியேறியது. இங்கிலாந்து அணி கம்பீரமாக இறுதிப் போட்டிக்கு முன்னேறி, பாகிஸ்தானை சந்திக்க இருக்கிறது. இந்த நிகழ்வை முன்பே கணித்த சோயிப் அக்தரின் கருத்து இப்போது வைரலாகிக் கொண்டிருகிறது.

மேலும் படிக்க | இந்தியாவை இங்கிலாந்து புரட்டி எடுக்கும்; பைனல் பாகிஸ்தான் -இங்கிலாந்து தான்; வயிற்றெரிச்சலில் பேசிய அக்தர்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

 

Trending News