IND vs AUS: 2வது டி20 நடைபெறுவதில் சிக்கல்! ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரை வெல்லும் இந்தியாவின் கனவு கேள்விகுறி

IND vs AUS: இரண்டாவது டி20 போட்டி நடைபெறும் நாக்பூரில் இடைவிடாது மழை பெய்து வருகிறது. போட்டி நடக்குமா நடக்காதா என்ற கவலையில் ரசிகர்கள் உள்ளனர். 

Written by - Shiva Murugesan | Last Updated : Sep 22, 2022, 07:04 PM IST
  • ஆஸ்திரேலியா வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலை பெற்றுள்ளது.
  • நாக்பூரில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
  • இரண்டாவது போட்டி நடக்குமா நடக்காதா என்ற கவலையில் ரசிகர்கள்.
IND vs AUS: 2வது டி20 நடைபெறுவதில் சிக்கல்! ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரை வெல்லும் இந்தியாவின் கனவு கேள்விகுறி title=

India  Vs Australia: இந்தியாவுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டி20 சர்வதேச தொடரின் இரண்டாவது போட்டி செப்டம்பர் 23 (வெள்ளிக்கிழமை) அன்று நடைபெறவுள்ளது. இன்னும் ஒரு நாள் உள்ள நிலையில், இந்திய அணிக்கும் இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கும் சோகமான ஒரு செய்தி வெளியாகி உள்ளது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரை வெல்லும் இந்திய அணியின் கனவு தகர்க்கப்படலாம். முதல் டி20 போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலை பெற்றுள்ளது. அப்படிப்பட்ட நிலையில் இரண்டாவது டி20 போட்டி இந்தியாவுக்கு ‘டூ ஆர் டை’ போட்டியாக இருக்கும். இரண்டாவது டி20 போட்டி செப்டம்பர் 23ம் தேதி நாக்பூரில் நடக்கிறது. நாக்பூரில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. போட்டி நடைபெறும் நாளிலும் மழை பெய்யும் என கணிக்கப்பட்டுள்ளதால், போட்டி நடைபெறுமா இல்லையா என்ற கவலையில் கிரிக்கெட் ரசிகர்கள் இருகின்றனர்.

இரண்டாவது டி20 போட்டி மழையால் கைவிடப்பட்டால், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரை இந்தியா வெல்வது சாத்தியமில்லை. இதுபோன்ற சூழ்நிலையில் ஐதராபாத்தில் நடைபெறும் மூன்றாவது டி20 போட்டியில் வெற்றி பெற்றால் தொடரை 1-1 என சமன் செய்ய மட்டுமே இந்தியாவுக்கு ஒரே வாய்ப்பாக இருக்கும்.

மேலும் படிக்க: பாபர் அசாமை பின்னுக்கு தள்ளிய சூர்யகுமார் யாதவ்

45,000 பேர் கொண்ட நாக்பூர் ஸ்டேடியத்தில் போட்டிக்கான டிக்கெட்டுகள் ஏற்கனவே விற்றுத் தீர்ந்துவிட்டன. மேலும் போட்டி நடக்காத பட்சத்தில் வாங்குபவர்களுக்கு பணத்தைத் திருப்பிக் கொடுக்க வேண்டும். இதன் காரணமாக விதர்பா கிரிக்கெட் சங்க தலைவர்கள் அதிருப்தியில் உள்ளனர்.  இரு அணிகளும் புதன்கிழமை (செப்டம்பர் 21) பிற்பகலில் நாக்பூர் சென்றடைந்தனர். அங்கு மாலைக்குப் பிறகு இடைவிடாது மழை பெய்தது. இன்று (வியாழக்கிழமை) அதிகாலையிலும் மழை பெய்தது. காலை 10 மணியளவில் மழை நின்றாலும், நாக்பூரில் அடர்த்தியான மேக மூட்டம் இருப்பதால் எப்பொழுது வேண்டுமானாலும் மழை பெய்யும் அபாயம் உள்ளது.

காலை பெய்த மழை காரணமாக ஆஸ்திரேலியாவும் இந்தியாவும் மதியம் மற்றும் மாலையில் திட்டமிட்டு இருந்த பயிற்சிகளை ரத்து செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. வீரர்கள் மைதானத்திற்கு செல்ல முடியவில்லை. 

கடந்த மூன்று ஆண்டுகளில் நாக்பூரில் முதல் சர்வதேச போட்டி நடைபெறவுள்ளது. இதன் காரணமாக ஆன்லைனில் டிக்கெட்டுகள் சில நிமிடங்களில் விற்று தீர்ந்தது. ஸ்டேடியம் நகரத்திலிருந்து 20 கிமீ தொலைவில் உள்ளது. ஒருவேளை நாளையும் நாக்பூரில் மழை தொடர்ந்து பெய்தால், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரை வெல்லும் இந்திய அணியின் கனவு தகர்க்கப்படலாம். ஏற்கனவே முதல் போட்டியில் இந்திய அணி தோல்வியை தழுவி உள்ளதால், இரண்டாவது போட்டி நடக்குமா நடக்காதா என்ற கவலையில் ரசிகர்கள் உள்ளனர். 

மேலும் படிக்க: Rohit Sharma: ரோகித் சர்மாவுக்கு தலைவலியாக மாறிய இந்த வீரர் அணியில் இருக்க மாட்டார்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News