ஒரே கிளப்புக்காக 643 கோல்கள் என்ற பீலேவின் சாதனையை சமன் செய்தார் Lionel Messi

பார்சிலோனா கால்பந்து நட்சத்திரம் மெஸ்ஸி (Lionel Messi) ஒரே கிளப்புக்காக 643 கோல்களைப் பதிவுசெய்த பீலேவின் சாதனையை சமன் செய்துவிட்டார்.  

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Dec 20, 2020, 01:33 AM IST
  • ஒரே கிளப்புக்காக விளையாடி 643 கோல்கள் என்ற பீலேவின் சாதனையை சமன் செய்தார் Lionel Messi
  • பீலே இந்த கோல்களை எடுக்க மெஸ்ஸியை விட குறைவான போட்டிகளிலேயே விளையாடினார்
  • மெஸ்ஸி முதல் கோலை தவறவிட்டு, அடுத்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டார்
ஒரே கிளப்புக்காக 643 கோல்கள் என்ற பீலேவின் சாதனையை சமன் செய்தார் Lionel Messi title=

பார்சிலோனா கால்பந்து நட்சத்திரம் மெஸ்ஸி (Lionel Messi) ஒரே கிளப்புக்காக 643 கோல்களைப் பதிவுசெய்த பீலேவின் சாதனையை சமன் செய்துவிட்டார்.  

அர்ஜென்டினா (Argentina) கால்பந்து நட்சத்திரம் லியோனல் மெஸ்ஸி 33 வயதானவர். ஒரே கிளப்புக்காக 643 கோல்களைப் பதிவுசெய்த பீலேவின் சாதனையை சமன் செய்துவிட்டார். ஆனால் பார்சிலோனாவில் நடைபெற்ற வலென்சியா-வுக்கு (Valencia) எதிரான கால்பந்து போட்டியை சமன் செய்தது.  

ஆரம்பத்தில் ஒரு பெனால்டியை தவறவிட்டாலும், மெஸ்ஸி (Messi) தனது சாதனையை அதே போட்டியில் நடத்திக் காட்டினார். Jordi Alba கொடுத்த கடுமையான போட்டிக்கு மத்தியில் கோல் அடித்து இந்த பதிவை செய்துள்ளார். 

மொக்டார் டயகாபி-யின் (Mouctar Diakhaby) ஒரு கோலுக்குப் பிறகு பார்சிலோனா (Barcelona) பின்தங்கியிருந்தது, ஆனால் மெஸ்ஸி ஒரு கோல் அடித்து சமன் செய்தார். உருகுவே சர்வதேச ரொனால்ட் அராஜோவின் கோலுக்குப் பிறகு பார்சிலோனா முன்னேறியது.

Also Read | Diego Maradonaவின் மரணம் கவனக்குறைவா? மருத்துவரிடம் காவல்துறை விசாரணை

பிரேசிலின் சூப்பர் ஹீரோவை சமன் செய்வதற்கு, அவரை விட அதிக போட்டிகளில் மெஸ்ஸி விளையாட வேண்டிருந்தது. ஏனெனில் சாண்டோஸ் (Santos) கிளப்புக்காக விளையாடிய பீலே (Pele) 665 ஆட்டங்களில் 643 கோல்களை அடித்தார், அதே நேரத்தில் அவரை சமன் செய்ய மெஸ்ஸி (Messi) 748 போட்டிகளில் விளையாட வேண்டியிருந்தது.  

15 வயதில் சாண்டோஸ் (Santos) கிளப்புக்காக கால்பந்து (Football)  விளையாடத் தொடங்கிய பீலே 1956 இல் கிளப்பில் சேர்ந்தார் 1974 வரை பிரேசிலுக்காக பல சர்வதேச போட்டிகளில் விளையாடினார். சாண்டோஸ் கிளப், ஆறு தேசிய லீக் பட்டங்களையும் (national league titles) இரண்டு கோபா லிபர்ட்டடோர்ஸ் கோப்பைகளையும் (Copa Libertadores Cup) பெற உதவினார் பிரேசிலிய நட்சத்திரம் Pele.

மெஸ்ஸி 2004 இல் 17 வயதில் பார்சிலோனாவில் சேர்ந்தார், மேலும் 10 லா லிகா பட்டங்களையும் (La Liga titles) நான்கு சாம்பியன்ஸ் லீக்-களையும் (Champions Leagues) வெல்வதில் அணிக்கு தூணாக நின்று உதவினார்.

Also Read | footballer மரடோனாவுக்கு பதிலாக பாப் பாடகி மடோனாவுக்கு அஞ்சலி செலுத்தும் ரசிகர்கள்

Elche கிளப்பை 3-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய அட்லெடிகோ மாட்ரிட் (Atletico Madrid) கிளப்பை விட எட்டு புள்ளிகள் பின்தங்கியுள்ளது Barcelona கிளப் என்பது குறிப்பிடத்தக்கது.  

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR 

Trending News