IPL 2024 Auction, Rentition List: ஐபிஎல் டி20 தொடரின் 17ஆவது சீசன் அடுத்தாண்டு நடைபெற உள்ளது. சென்னை, மும்பை, பெங்களூரு, குஜராத், லக்னோ உள்ளிட்ட 10 அணிகளும் அடுத்த தொடரில் பங்கேற்க உள்ளனர். மேலும், இந்த தொடருக்கு முன் மினி ஏலமும் நடைபெற இருக்கிறது. இதனால், ரசிகர்கள் அனைவரும் ஐபிஎல் ஏலத்தின் மீது எதிர்பார்ப்பை கொண்டுள்ளனர்.
ஐபிஎல் மினி ஏலம்
அடுத்த சீசனுக்கான ஐபிஎல் மினி ஏலம் (IPL Auction 2024) டிசம்பர் 19ஆம் தேதி துபாயில் நடைபெற இருக்கிறது. மேலும், முதல் முறையாக ஐபிஎல் ஏலம் இந்தியாவுக்கு வெளியில் நடத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஏலத்தை முன்னிட்டு, அனைத்து அணிகளும் தங்கள் அணியை இறுதி செய்து வருகின்றனர். அதாவது, அடுத்த சீசனுக்கு எந்தெந்த வீரர்களை தக்கவைப்பது, எந்தெந்த வீரர்களை விடுவிப்பது என்ற யோசனையில் உள்ளனர். மேலும், இந்த அறிவிப்பை வெளியிட நவம்பர் 26ஆம் தேதிதான் கடைசி நாள் என கூறப்படுகிறது.
அந்த வகையில், நவ. 26ஆம் தேதிக்குள் அனைத்து அணிகளும் யாரை தக்கவைப்பது, யாரை விடுப்பது என தங்களின் Retention பட்டியலை (IPL 2024 Retention List) வெளியிட்டுவிடும். மேலும், இதுவரை இரண்டு முறை அணிகள் தங்களின் வீரர்களை பரஸ்பர பரிமாற்றம் (IPL Trade) செய்துள்ளன. இம்மாத தொடக்கத்தில் லக்னோ சூப்பர் ஜெய்ன்ட்ஸ் தங்களின் வேகப்பந்துவீச்சாளர் ரோமாரிய ஷெப்பர்டை பரிமாற்றம் செய்துகொண்டது. மாற்று வீரராக யாரை லக்னோ பெறவில்லை. அதேபோல், நேற்றும் லக்னோ அணி தங்களின் வேகப்பந்துவீச்சாளர் ஆவேஷ் கானை ராஜஸ்தான் அணிக்கு டிரேட் செய்து, அந்த அணியின் பேட்டர் தேவ்தத் படிக்கல்லை மாற்று வீரராக பெற்றுக் கொண்டது. இது தவிர வேறு அணிகளின் Rentention பட்டியல் இதுவரை வெளியாகவில்லை.
மேலும் படிக்க | ஐபிஎல் ஏலத்தில் சிஎஸ்கே வாங்க நினைக்கும் வீரர்கள்... யாருக்கு யார் மாற்று?
மேலும், அணி பயிற்சியாளர்கள் ஆலோசகர்கள் தரப்பிலும் மாற்றங்கள் நிகழ்ந்தன. ராஜஸ்தான் அணியில் இருந்த இலங்கையின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் மலிங்கா தற்போது மும்பை அணிக்கே திரும்பி உள்ளார். தொடர்ந்து, லக்னோ அணியின் ஆலோசகரான இந்திய முன்னாள் பேட்டர் கௌதம் கம்பீர் தற்போது மீண்டும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு திரும்பி உள்ளார். எனவே, ஏலத்திற்கு முன் பல மாற்றங்களை எதிர்பார்க்கலாம். இப்படியிருக்க, Retition பட்டியலுக்கான தேதியும் நெருங்கி வருவதால் அடுத்த சில நாள்கள் ஐபிஎல் அணிகளும், அதன் ரசிகர்களும் பரபரப்பான சூழலில் இருக்கும் எனலாம்.
ஷாக் ஆகாதிங்க ரசிகர்களே...
கடந்த முறை சாம்பியன் பட்டத்தை வென்று 5ஆவது முறையாக கோப்பையை தூக்கிய சென்னை சூப்பர் கிங்ஸில் இருந்து குஜராத் டைட்டன்ஸ், மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு என முன்னணி அணிகளின் நகர்வையும் ரசிகர்கள் உற்று கவனித்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கும் தகவல்களும் வலம் வந்துகொண்டிருக்கிறது. அதாவது, மும்பை இந்தியன்ஸ் அணிக்காக 5 முறை கோப்பை வென்று தந்த ரோஹித் சர்மாவை (Rohit Sharma) கேப்டன்ஸி பதவியில் இருந்து நீக்கிவிட்டு அவருக்கு பதில் ஹர்திக் பாண்டியாவை மும்பை அணிக்குள் (Hardik Pandya In Mumbai Indians) கொண்டு வந்து, அவர் கேப்டனாக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ரோஹித் அல்லது ஆர்ச்சர்
அதாவது, இந்த ஏலத்திற்கு முன் மும்பை அணி ரோஹித் அல்லது ஜோஃப்ரா ஆர்ச்சரை விடுவிக்க உள்ளதாகவும், அவர்களுக்கு பதில் குஜராத் அணியின் (Gujarat Titans) கேப்டன் ஹர்திக் பாண்டியாவை டிரேட் செய்ய உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதில் ஆர்ச்சரை விடுவித்தால் ரோஹித் சர்மா மும்பையில் நீடிப்பார் என்றும் ஒருவேளை ரோஹித் சர்மா குஜராத் அணியுடன் டிரேட் செய்யப்பட்டால் ரோஹித் குஜராத்திற்கு கேப்டனாக செயல்படுவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த தகவலை பலராலும் நம்ப முடியாத நிலையில் இது இன்னும் உறுதிச்செய்யப்படவில்லை. மும்பை (Mumbai Indians), குஜராத் அணிகளின் Retention பட்டியல் விரைவில் வெளியாகவும் வாய்ப்புள்ளது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ