இந்திய அணிக்கு அரையிறுதி டிக்கெட் கன்பார்ம்... ஏன் தெரியுமா?

Team India: டி20 உலகக் கோப்பையில் தற்போது சூப்பர் 8 சுற்றுக்கு தகுதிபெற்றுள்ள இந்திய அணி, நிச்சயம் அரையிறுதி சுற்றுக்கு செல்லும் வாய்ப்பும் 99% இருக்கிறது. அது ஏன் என்பது குறித்து இதில் காணலாம்.

Written by - Sudharsan G | Last Updated : Jun 14, 2024, 08:28 PM IST
  • இதுவரை 5 அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதிபெற்றுள்ளன.
  • சூப்பர் 8 சுற்றில், 8 அணிகளும் 2 பிரிவுகளாக பிரிக்கப்படும்.
  • ஒவ்வொரு பிரிவில் முதலிரண்டு இரண்டுகளை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு செல்லும்.
இந்திய அணிக்கு அரையிறுதி டிக்கெட் கன்பார்ம்... ஏன் தெரியுமா? title=

India National Cricket Team: ஐசிசி டி20 உலகக் கோப்பை 2024 தொடர் (ICC T20 World Cup 2024) தற்போது நடைபெற்று வருகிறது. இதுவரை நடந்த குரூப் சுற்று போட்டிகளில் ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, இந்தியா, மேற்கு இந்திய தீவுகள், ஆப்கானிஸ்தான் ஆகிய ஐந்து அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதிபெற்றுவிட்டன. இன்னும் மூன்று இடங்களை பிடிக்க பல அணிகள் முட்டி மோதி வருகின்றன. 

அந்த வகையில், இந்திய அணி இடம்பெற்றிருக்கும் குரூப் ஏ சுற்றில் அமெரிக்கா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேதான் கடுமையான போட்டி நிலவுகிறது. இருப்பினும் இரு அணிகளில் யார் சூப்பர் 8 சுற்றுக்குச் செல்லப்போவது என்பது இன்று உறுதியாகிவிடும். இன்று புளோரிடாவில் நடைபெறும் அமெரிக்கா - அயர்லாந்து போட்டியில் அமெரிக்கா அணி வெற்றி பெற்றால் பாகிஸ்தான் வெளியேறும்.

சிக்கலில் பாகிஸ்தான்

அதுமட்டுமின்றி, தற்போது போட்டியின் டாஸ், மைதானத்தில் அதிக ஈரப்பதம் இருப்பதால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஒருவேளை இன்றைய போட்டி மழையால் ரத்தானால் அமெரிக்கா சூப்பர் 8 சுற்றுக்கு தகுதிபெறும். இன்றைய போட்டியில் அயர்லாந்து வென்று, பாகிஸ்தான் அணி வரும் போட்டியில் அயர்லாந்தை வென்று அமெரிக்காவை விட அதிக நெட் ரன்ரேட்டை பெற வேண்டும். அப்போதுதான் பாகிஸ்தானுக்கு சூப்பர் 8 சுற்று வாய்ப்பு உள்ளது.

மேலும் படிக்க | நாடு திரும்பும் 2 இந்திய வீரர்கள்... அதுவும் சூப்பர் 8 சுற்றுக்கு முன்... காரணம் என்ன?

இப்படி குரூப் ஏ சுற்றில் கலவரமே நடந்துக்கொண்டிருக்கும் வேளையில் இந்திய அணி மட்டும் கூலாக இருக்கிறது. காரணம் இந்திய அணி சூப்பர் 8 சுற்றுக்கு தகுதிபெற்றுவிட்டது என்றாலும், மறுபுறம் அரையிறுதி வாய்ப்பும் தற்போது பிரகாசமாக உள்ளது. அது எப்படி என்று கேட்கிறீர்களா... அது குறித்து விரிவாக இங்கு காணலாம். 

சூப்பர் 8 சுற்றில் இரு பிரிவுகள்

சூப்பர் 8 சுற்றில் அனைத்து அணிகளும் தலா 3 போட்டிகளை விளையாடும். அதாவது எட்டு அணிகளும் இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டிருக்கும். குறிப்பாக, இந்தியா (A1), ஆஸ்திரேலியா (B2), ஆப்கானிஸ்தான் (C1), D2 இடத்தை பிடிக்கும் அணிகள் 1 ஒரு பிரிவில் இருக்கும். D2 இடத்தை வங்கதேசம், நெதர்லாந்து, நேபாளம் அணிகளில் ஒன்று பிடிக்கும். மற்றொரு பிரிவில், A2, B1, மேற்கு இந்திய தீவுகள், தென்னாப்பிரிக்கா அணிகள் இடம்பெறும். இதில் A2 இடத்தில் அமெரிக்கா அல்லது பாகிஸ்தான் அணியில் ஒன்றும், B1 இடத்தில் இங்கிலாந்து அல்லது ஸ்காட்லாந்து அணிகளில் ஒன்றும் மோதும்.

ஆஸ்திரேலியா மட்டுமே பிரச்னை

எனவே, இந்திய அணி ஆப்கானிஸ்தான் உடன் ஜூன் 20ஆம் தேதியும், D2 இடத்தை பிடிக்கும் அணிகளுடன் ஜூன் 22ஆம் தேதியும், ஆஸ்திரேலியா உடன் ஜூன் 24ஆம் தேதியும் விளையாட உள்ளது. இதில் ஆஸ்திரேலியா மட்டுமே இந்திய அணிக்கு கடினமாக இருக்கும். ஆப்கானிஸ்தான் அணியை குறைத்து மதிப்பிட முடியாது என்றாலும் அந்த அணியின் மிடில் ஆர்டர் பேட்டிங் என்பது சற்று பலவீனமாக உள்ளது.

ஆப்கானிஸ்தானும், வங்கதேசமும்?

இந்திய அணி அன்று ஆப்கானிஸ்தானின் சுழலையும், பவர்பிளே வேகப்பந்துவீச்சையும் எளிதாக கடந்துவிட்டால் வெற்றி பெற்றுவிடலாம். சமீபத்தில் இந்தியாவில் நடந்த ஆப்கன் அணிக்கு எதிரான டி20 தொடரை இந்தியா முழுமையாக கைப்பற்றியிருந்தது. எனினும் சூழல் வேறு என்பதும் இங்கு கவனிக்க வேண்டும். மறுபுறம், D2-வில் வரும் அணிகளும் அச்சுறுத்துபவை அல்ல. வங்கதேசம் அணியே பெரும்பாலும் சூப்பர் 8 சுற்றுக்கு வர வாய்ப்பிருக்கிறது என்பதால் அந்த போட்டியிலும் கவனமாக விளையாடிவிட்டாலே இந்திய அணி உலகக் கோப்பையை நோக்கிய அடுத்த கட்டத்திற்கு சென்றுவிடும். முதலிரு போட்டிகளில் வென்று ஆஸ்திரேலியாவிடம் தோல்வியடைந்தாலும் இதில் பிரச்னை இருக்காது. 

மேலும் படிக்க | டி20 உலக கோப்பை ; விராட் கோலி ஒரு பாகுபலி.. தப்பு கணக்கு போடாதீங்க - எச்சரிக்கும் வாசிம் ஜாபர்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News