IND vs BAN T20 Series, Team India Squad: வங்கதேசம் அணி தற்போது இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறது. 2 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகளில் இந்தியா - வங்கதேசம் அணிகள் விளையாடுகின்றன. இதில் முதல் டெஸ்ட் போட்டி சென்னையில் நடந்த நிலையில், இந்தியா 280 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று டெஸ்ட் தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.
இரண்டாவது டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கியது. தற்போது இந்த போட்டி மழையால் பாதிக்கப்பட்டு வருகிறது. இது ஒருபுறம் இருக்க, இந்தியா - வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான டி20 தொடர் மீதும் கவனம் குவிந்தன. அக். 6, 9, 12 ஆகிய தேதிகளில் முறையே குவாலியர், டெல்லி, ஹைதராபாத் ஆகிய நகரங்களில் நடைபெற உள்ளது. அந்த வகையில், வங்கதேச டி20 தொடருக்கான இந்திய ஸ்குவாட் அறிவிக்கப்பட்டுள்ளது.
யார் யாருக்கு வாய்ப்பு?
சூர்யகுமார் யாதவ் கேப்டனாக தொடர்கிறார். அனுபவ வீரர் ஹர்திக் பாண்டியாவும் அணியில் இடம்பெற்றுள்ளார். அதேபோல், வேகப்பந்துவீச்சாளர் மயங்க் யாதவிற்கு முதல்முறையாக இந்திய அணியில் இருந்து அழைப்பு வந்துள்ளது. ஐபிஎல் தொடரில் லக்னோ அணி சார்பில் களமிறங்கிய மயங்க் யாதவ் 4 போட்டிகளில் விளையாடி 7 விக்கெட்டுகளை கைப்பற்றியிருந்தார். குறிப்பாக, மணிக்கு 146+ கி.மீ., வேகத்தில் பந்துவீசி பலரையும் கவர்ந்திருந்தார். மேலும், கடந்த ஐபிஎல் தொடரில் பெரியளவில் கவனம் ஈர்த்த நிதிஷ் குமார் ரெட்டிக்கும் இந்த தொடரில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | சிஎஸ்கே டார்கெட்டில் 2 பவுலர்கள், ஒருவர் சென்னை செல்லப்பிள்ளை
அதே நேரத்தில் தமிழக வீரர் வருண் சக்ரவர்த்தி நீண்ட நாள் கழித்து இந்திய அணிக்கு அழைக்கப்பட்டுள்ளார். கம்பீர் பயிற்சியாளராக வந்த நிலையில், கேகேஆர் வீரரான வருண் சக்ரவர்த்திக்கு மீண்டும் வாய்ப்பு கிடைத்துள்ளது. அபிஷேக் சர்மா ஓப்பனராக களமிறங்குவார் என்றாலும் அவருக்கு துணையாக எந்த ஓப்பனரும் அணியில் இல்லை. எனவே, சஞ்சு ஓப்பனிங்கில் இறங்க வாய்ப்புள்ளது.
ருதுராஜ், இஷான் கிஷனுக்கு வாய்ப்பில்லை
சுப்மான் கில், யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரிஷப் பண்ட், அக்சர் படேல், பும்ரா, சிராஜ், ஆகாஷ் தீப், கலீல் அகமது, யாஷ் தயாள் ஆகியோர் நீண்ட டெஸ்ட் சீசன் இருப்பதால் டி20 போட்டிகளில் ஓய்வு வழங்கப்பட்டிருக்கிறது. ருதுராஜ் கெய்க்வாட், இஷான் கிஷான் ஆகியோருக்கு தற்போதும் வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. ஜிதேஷ் சர்மாவுக்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. ஆல் ரவுண்டர்கள் பிரிவில் ஷிவம் தூபே, வாஷிங்டன் சுந்தர், ரியான் பராக், ஹர்திக் பாண்டியா, நிதிஷ் குமார் ரெட்டி ஆகியோர் உள்ளனர். அர்ஷ்தீப் சிங் பந்துவீச்சு பிரிவை வழிநடுத்துவார் எனலாம்.
- #TeamIndia’s squad for T20I series against Bangladesh announced.
More details here - https://t.co/7OJdTgkU5q #INDvBAN @IDFCFIRSTBank pic.twitter.com/DOyz5XGMs5
— BCCI (@BCCI) September 28, 2024
இந்திய அணி ஸ்குவாட்: சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), ரின்கு சிங், ஹர்திக் பாண்டியா, ரியான் பராக், நிதிஷ் குமார் ரெட்டி, ஷிவம் துபே, வாஷிங்டன் சுந்தர், ரவி பிஷ்னோய், வருண் சக்கரவர்த்தி, ஜிதேஷ் சர்மா (விக்கெட் கீப்பர்), அர்ஷ்தீப் சிங், ஹர்ஷித் ராணா, மயங்க் யாதவ்.
மேலும் படிக்க | மழையால் இந்திய அணிக்கு தலைவலி... பறிபோகும் WTC பைனல் வாய்ப்பு? - என்ன விஷயம்?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ